உட்சுரப்பியல் துறையில் செய்த ஆய்வுகளுக்காக போற்றப்படும் ஆளுமை! - எட்வர்ட் ஷார்பே ஸ்காஃபெர்
எட்வர்ட் ஷார்பே ஸ்காஃபெர் (Edward Albert Sharpey-Schäfer, 1850 -1935)
உட்சுரப்பியல் துறையை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்களில் முக்கியமானவர். லண்டனில் வணிகராக இருந்த ஜே.டபிள்யூ.ஹெச். ஸ்ஹாஃபர் , ஜெஸ்ஸி ப்ரௌன் தம்பதியருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். 1874ஆம் ஆண்டு, யுனிவர்சிட்டி காலேஜ் லண்டனில் மருத்துவப்படிப்பு படித்தார். இவருக்கு ஆசிரியராக கற்பித்தவர், மருத்துவர் வில்லியம் ஷார்பே. இதனால் ஆசிரியரின் பெயரை, தனது பெயரில் சேர்த்துக்கொண்டார்.
1878ஆம்ஆண்டு லண்டலின் உள்ள ராயல் சொசைட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். 1878ஆம் ஆண்டில் ராயல் இன்ஸ்டிடியூஷனில் பேராசிரியராக பதவியேற்றார். 1903ஆம் ஆண்டு செயற்கை சுவாசம் பற்றிய ப்ரோன் பிரஷர் (Prone pressure) முறைக்காக புகழ்பெற்றார் . 1911-12 காலகட்டத்தில் பிரிட்டிஷ் அறிவியல் சங்கத்தின் தலைவராக செயல்பட்டார். 1933ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார். உட்சுரப்பியல் துறையில் செய்த ஆய்வுகளுக்காக (Suprarenal of pituitary extracts ) எட்வர்ட் போற்றப்படுகிறார்.
https://royalsocietypublishing.org/doi/10.1098/rsbm.1935.0005
https://www.encyclopedia.com/science/dictionaries-thesauruses-pictures-and-press-releases/sharpey-schafer-edward-albert
கருத்துகள்
கருத்துரையிடுக