இடுகைகள்

செவிலியர்கள் சிகிச்சை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மருத்துவச் சேவையில் சாதனை படைத்த பெண்கள்!

படம்
          மேரி க்யூரி கதிர்வீச்சு அறிவியலாளர் அறிவியல் மற்றும் மருத்துவத்திற்காக கதிர்வீச்சு முறை பெரிதும் பயன்படுகிறது . அந்த ஆய்வில் மகத்தான சாதனைகளை செய்தவர் மேரி க்யூரி . இவர் செய்த ஆய்வுகளை குறித்து வைத்த காகிதங்கள் கூட கதிர்வீச்சு தன்மை கொண்டவை்யாக இருந்தன . இவற்றை பாதுகாப்பான இடத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனர் . அணுக்கள் அதிக சக்தி வாய்ந்த துகள்களை உமிழுகின்றன என்பதை க்யூரி கண்டுபிடித்தார் . அதில் ஒன்று போலோனியம் , மற்றது ரேடியம் . போலாந்தில்தான் க்யூரி பிறந்தார் . ரேடியத்திற்கு ரே என்ற வார்த்தைதான் காரணம் . இவரது கண்டுபிடிப்பு புற்றுநோய் மருத்துவத்தில் பயன்படுகிறது . 1867 இல் போலந்தில் பிறந்தார் . பெற்றோர்கள் ஆசிரியர்கள் . அவர்களின் தூண்டுதலால்தான் படிப்பில் ஆர்வம் காட்டினார் . இயற்பியல் மற்றும கணிதம் படிக்க பிரான்சின் பாரிசுக்கு சென்றார் . அங்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு இயற்பியலாளர் பியரி க்யூரியை மணந்தார் . 1903 ஆம் ஆண்டு மேரியும் பியரியும் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றனர் . மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பியரி விபத்து ஒன்றில் இறந்துபோன