இடுகைகள்

மன்மோகன் சிங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அகற்ற முடியாத கறையை ஊழல்கள் ஏற்படுத்தின - மான்டேக் சிங் அலுவாலியா

படம்
நேர்காணல்  மான்டேக் சிங் அலுவாலியா நலின் மேத்தா, சஞ்சீவ் சங்கரன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முதல் ஏழு ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதம் என்கிறீர்கள். அப்புறம் ஏன் வளர்ச்சி வீழ்ந்தது? முதல் ஏழு ஆண்டுகளில் வளர்ச்சி நாங்களே நினைத்துப் பார்க்க முடியாதபடி இருந்தது உண்மைதான். ஆனால் அதற்குப்பிறகு அதாவது 2011இல் ஐரோப்பாவில் பொருளாதாரப் பிரச்னைகள் ஏற்பட்டன. அந்த பாதிப்பினால் அந்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கவிருந்த திட்டங்கள் தள்ளிப்போயின. அச்சூழலிலும் காங்கிரஸ் உள்நாட்டு உற்பத்தியை வைத்து சமாளித்தது. ஆனால் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்பட்ட ஊழல்கள், ஆட்சிக்கு அகற்றமுடியாத களங்கத்தை ஏற்படுத்தின.  2014 தேர்தல் காலத்தில் இந்த விஷயங்கள் அனைத்தும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிராக மாறிவிட்டன. பொருளாதார வளர்ச்சி, ஏற்றம், இறக்கம். வீழ்ச்சி என்பது தொடர்ச்சியான விளைவுதான். தொலைத்தொடர்புத்துறையில் கிடைத்திருக்க வேண்டிய அதீத லாபம் பற்றி தணிக்கைத்துறை சொன்னது மிகப்பெரிய சர்ச்சையானது. உலகில் அலைக்கற்றை விவகாரத்தில் தீர்க்கமான விதிகளைக் கொண்டு ஏலம் எங்கு