இடுகைகள்

நான்காவது காட்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நான்காவது காட்சி: பார்த்த சினிமாக்கள் பற்றிய விமர்சனங்கள்!

படம்
நான்காவது காட்சி ஆக்கமும் , தொகுப்பும் : லாய்டர் லூன் , ஆலன் வான்கா இன்னோசன்ட் ஸ்டெப்ஸ் (Innocent Steps) இயக்குநர் : பார்க் ஹூன் இந்த திரைப்படம் ஒருவர் தனக்கான ஒரு பெண் துணையை எப்படி தயார் செய்து நடனப்போட்டியில் பங்குபெறுகிறார் என்பதையே கதையாக கொண்டுள்ளது . கொரியன் படம் . வசனங்கள் குறைவு என்றாலும் , கவித்துவ வசனங்களின் இனிமை மனதில் நடனமாடுகிறது . அதுவும் மின்மினிப்பூச்சிகள் பற்றி செரின்   கூறும் காட்சி . நடனப்போட்டியில் பங்குபெற நினைக்கும் யுன்சேவை ஹூன் சூ பல்வேறு தந்திரங்கள் செய்து இணையைப் பிரிப்பது , யுன் சேவின் காலை உடைப்பது என்று செய்து சிறந்த நடனக்காரனான அவனை போட்டிக்கு வரவிடாமல் செய்துவிடுகிறான் . பின்னும் விடாப்பிடியாக போட்டியில் பங்கேற்க சீனாவிலிருந்து ஒரு பெண்ணை கொரியா வர ஏற்பாடு செய்கிற பொழுது , அந்தப்பெண்ணிற்குப் பதில் இன்னொரு பெண் தன்னை அப்பெயர் கூறி யுன்சேவை ஏமாற்றி அவன் வீடு வந்து சேருகிறாள் . ஏமாற்றப்பட்டது தெரிந்ததும் , அவன் அவளை வீடு விட்டு வெளியே துரத்த , அவள் வேலை