இடுகைகள்

நலத்திட்டங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மேற்குவங்கத்தில் மம்தாவை காப்பாற்றப் போகும் திட்டங்கள் என்னென்ன?

படம்
        முதல்வர் மம்தா   மேற்குவங்கத் தேர்தலுக்காக அங்கு பல்வேறு கட்சிகள் வாக்குகளைப் பெற போட்டா போட்டி போட்டு வருகி்ன்றன . முதல்வர் மம்தா அங்கு என்னென்ன திட்டங்களை தீட்டியிருக்கிறார் என்று பார்ப்போம் . கன்யாஶ்ரீ 13-21 வயது வரையிலான பெண்களுக்கு உயர்கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ . 1000 வழங்கப்படுகிறது . பதினெட்டு வயதை எட்டிய பெண்களுக்கு ரூ .25000 நிதியுதவி வழங்கப்படுகிறது . இம்முறையில் அரசு 7 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது . இதில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெற்றுள்ளனர் . காத்யா சதி மலிவு விலையில் அரசி வழங்கும் திட்டம் . ஒரு கிலோ அரிசி ரூ .2 க்கு வழங்கப்படுகிறது . இதனால் அரசுக்கு ஏற்படும் செலவு ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி . கோடிக்கணக்கான மக்கள் இதனால் பயன் பெறுகிறார்கள் . ஸ்வஸ்திய சதி ஆண்டுக்கு 1.5 முதல் 5 லட்சம் வரையிலான காப்பீட்டுத் திட்டம் அரசு மக்களுக்கு வழங்குகிறது . நடப்பு ஆண்டில் இதற்கு 906 கோடி ரூபாய் செலவாகியுள்ளது . ஜெய்ஜோகர் அண்டு தபோசிலி பந்து ஆதி திராவிடர்கள் , பழங்குடியினருக்கு மாதம் ரூ . 1000 வழங்கப்படுகிறது . ஆண்

சிஎஸ்ஆர்: கடைபிடிக்கவேண்டிய வெற்றி விதிகள்

படம்
glocal thinking 9 வெற்றி விதிகள் இந்தியாவில் சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கான நிதியை தேசியப் பேரிடர் பிரச்னைகளுக்கும் வழங்கலாம் என அறிவித்திருக்கிறது . இந்திய அரசு . இதனால் பல்வேறு பெரு நிறுவனங்கள் கொரோனா பாதிப்புக்கு தங்களது சமூக பொறுப்புணர்வு நிதியை வழங்க உள்ளன . இம்முறை வணிகம் பாதிப்பு , பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் ஊழியர்களுக்கு முழு சம்பளம் தருவதே சிக்கலாக உள்ள நிலைமை . இதில் பொதுமக்களுக்கான செலவுகள் என்பதை நிறுவனங்கள் கடைசியாகத்தான் யோசிப்பார்கள் . சில தன்னார்வலர்கள் , கூலித் தொழிலாளர்களுக்கு அரிசி , பருப்பு , சோப்பு என அவசியப் பொருட்களை வழங்கி வருகின்றனர் . சமூக பொறுப்புணர்வுத் திட்டம் என்பது காகிதத்தில் இருப்பதோடு , நடைமுறையிலும் வருவது முக்கியம் . ஆனால் பெரும்பாலும் அதில் நிறைய நிறுவனங்கள் சொதப்பிவிடுகின்றன . காரணம் , சமூகப் பிரச்னைகளை எப்படி தேர்ந்தெடுப்பது , அதில் கவனம் குவிப்பது சார்ந்த சந்தேகங்கள்தான் . அதற்கு சில உதாரணங்களையும் விதிகளையும் இங்கே பார்ப்போம் . சமூக பிரச்னைகளை தேர்ந்தெடுங்கள் அமெரிக்காவைச் சேர்ந்த

சிஎஸ்ஆர்: தன்னாவலர்களின் பங்களிப்பும், திட்டத்தின் நோக்கமும்!

படம்
என்பிசி 8 தன்னார்வலர்களின் பங்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்வேறு தன்னார்வ நிறுவனங்களை இணைத்துக்கொண்டு பணிபுரிகின்றனர் . ஆனாலும் முடிந்தவரை இந்த செயல்பாட்டில் தங்கள் நிறுவன ஊழியர்களின் பங்கினையும் உறுதி செய்கின்றனர் . காரணம் , நிறுவனத்தின் சமூகம் சார்ந்த ஈடுபாட்டை , பொறுப்பை ஊழியர்கள்தானே பிறருக்கு சொல்ல முடியும் .? ’ ரிவல்யூஷன் ஆப் தி ஹார்ட்’ என்ற நூலில் ஆசிரியர் பில் ஷோர் நிறுவனங்கள் தம் ஊழியர்களை ஈடுபடுத்தி செய்யும் சமூகப்பணிகளைக் குறிப்பிடுகிறார் . மருத்துவர் தம் நேரத்தை ஒதுக்கி குழந்தைகளை இலவசமாக சோதிப்பது , தச்சு வேலைக்காரர் மரச்சாமான்களை பழுதுநீக்கிக் கொடுப்பது , ஆசிரியர் வறுமைகோட்டிற்கு கீழுள்ள தெரு சிறுவர்களுக்கு கல்வி கற்பிப்பது ஆகியவை செயல்பாடுகள் சமூகப் பொறுப்புணர்வுக்கு முக்கியமான சான்றுகள் என்கிறார் . இது இனக்குழு சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று கூறுகிறார் . மேற்சொன்னவை தன்னார்வ செயல்பாடுகளாகும் . நிறுவனங்கள் தம் ஊழியர்களுக்கு ஆண்டு இறுதியில் குறிப்பிட்ட நாட்களை சமூகப் பொறுப்புணர்வு திட்டங்களுக்காக ஒதுக்கி பணிகளைச் செய்ய வைப்பது

சிஎஸ்ஆர்: சமூக பிரச்னைகளுக்கான பிரசாரம்

படம்
optimy wiki 5 சமூகப் பிரச்னைகளுக்கான பிரசாரம் கார்ப்பரேட் நிறுவனங்கள் குறிப்பிட்ட சேவையை அல்லதுத பொருட்களை தயாரித்து வழங்கும் பணியை செய்துவருகின்றன . சமூகப் பிரச்னைக்கு அந்நிறுவனம் முன்னின்று பிரசாரத்தை முன்னெடுக்கும்போது அது நிறுவனத்தைப் பிரபலப்படுத்துவதாக இருக்கவேண்டும் . ஆனால் நிறுவனத்தின் பொருட்களை அங்கே விளம்பரம் செய்யக்கூடாது . அது தவறான அணுகுமுறை . உதாரணத்திற்கு நகரங்களில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள இளம் வயதினர் , இரவு உணவின்றி உறங்கச்செல்லுகின்றனர் என்பது சமூகப் பிரச்னை . இப்பிரச்னை சார்ந்து பிரசாரம் , விளம்பரங்கள் அமையவேண்டும் . இதில் இணைந்துகொள்ளும் நிறுவனங்களை விளம்பர பதாகையில் குறிப்பிடலாம் . நேரடியாக குறிப்பிட்ட நிறுவனங்களின் நிதியை ஏற்கலாம் . மக்களிடம் இதற்கான விழிப்புணர்வுக்காக அவர்களிடம் மனுக்களை சமூக வலைத்தளங்களில் , மின்னஞ்சலில் அனுப்பச் செய்யலாம் . அவ்வளவே இதில் செய்யமுடியும் . இதிலுள்ள அம்சங்களை பார்ப்போம் . விழிப்புணர்வு முக்கியம் குறிப்பிட்ட வழித்தடத்தில் அதிக விபத்துகள் நடக்கின்றன . அதற்கு காரணம் , அங்கு வே