இடுகைகள்

எட்மண்ட் கெம்பர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுகானுபவமான கொலைகள்! - எட்மண்ட் கெம்பரின் கதை!

படம்
எட்மண்ட் கெம்பர் 3 1970களில் பிரபலமாக இருந்த கெம்பருக்கு இன்னொரு பெயர் கோ -எட் கில்லர். கலிஃபோர்னியாவின் பண்ணை வீட்டில் இருந்த தாத்தா பாட்டியை போட்டுத்தள்ளி தன் கொலைவரிசையை தொடங்கினார். ஒன்பது பெண்களை சிறப்பான முறையில் தீர்த்துக்கட்டினார். பின் அவரது பார்வை அவரது அம்மா, நண்பர்கள் பக்கம் திரும்பியது. வாஸ்தவம்தானே தேடிப்போய் கொல்வதை விட அருகிலேயே இருப்பவர்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறார்கள் என்று நினைத்து அவர்களின் மூச்சை நிறுத்தினார். 1948ஆம்ஆண்டு டிச. 18 அன்று, கலிஃபோர்னியாவில் பர்பேங்க் நகரில் பிறந்தார் கெம்பர்.  பிற சீரியல் கொலைகார ர்களை விட புத்திசாலி. ஐக்யூ டெஸ்டில் 136 புள்ளிகள் பெற்றவர். புத்தி கூர்மையாக இருந்தால் துடிப்பும் வேகமும் அதிகமாக இருக்குமே? ஆம் அப்படித்தான் இருந்தார். அறிவுக்கூர்மையாக இருப்பவர்களுக்கு பாலியல் உணர்வும் திறனும் சூட்டிப்பாக இருக்கும். கெம்பர் தன் சகோதரிகளின் பொம்மைகளை எடுத்து பாலியல் திருவிழாக்களையே கொண்டாடி வந்தார். கைக்கு சிக்கிய விலங்குகளை அடித்து துவைத்து இடியாப்பமாக்கினார். மேலும் பள்ளி ஆசிரியை மீது காதல் பொங்கியது. அதிரடியாக ஒரே வார்த்