இடுகைகள்

இருட்டடிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாரதமாதாவின் ராஜபுத்திரனுக்கு இந்திய வரலாற்றில் இடம் கிடையாது!

படம்
  இப்படி சொன்னது காங்கிரசைச் சேர்ந்த தலைவர்கள் அல்ல. நேருவின் காலத்தில் அவரது கொள்கைகளை எதிர்த்த, ஆனால் அவரின் செயல்பாடுகள் மீது நம்பிக்கை கொண்ட முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜபாய். உடனே இன்றைய பிரதமர் மோடி போலத்தானே வாஜ்பாயும் கூறியிருக்கிறார் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். அவர் கூறியது பாரதமாதாவின் ராஜபுத்திரன் என்று மட்டுமே. இந்திய வரலாற்றில் இடம் கிடையாது என்று தனது செயல்கள் வழியாக கூறியிருப்பது தற்போதைய ஒன்றிய அரசு.  இந்தியா தனது 75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. இதற்கான போஸ்டர்களில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமருக்கு  இடமில்லை என்பது அனைத்து இடங்களிலும் சர்ச்சையாகி வருகிறது. நேருவுக்கு பதில் ஆங்கிலேயரை ஆதரித்த, சிறையில் இருந்தபோது மன்னிப்பு கடிதம் எழுதி தன்னைக் காப்பாற்றிக்கொண்ட சங் பரிவார் தலைவர்களை போஸ்டர்களில் இடம்பெறச் செய்து வருகிறது ஒன்றிய அரசு.  யாருக்கு யார் முக்கியமோ அவர்களை பதவியில் அமர்த்தலாம். ஆனால் வரலாற்றில் அப்படியான வசதிகள் கிடையாது. சுதந்திர இந்தியாவில் முதல் பிரதமராக அமர்ந்த நேருவை பற்றி பேசும்போது அவரின் தனிப்பட்ட விஷயங்களைப் பேசி களங்கப்பட