இடுகைகள்

ஏஐ கார்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விபத்துகளை குறைக்குமா ஏஐ கார்?

படம்
விபத்துகளைக் குறைக்குமா ஏஐ கார்கள்? உலகில் வாகன ஓட்டுநர்களின் கவனக்குறைவால் நடைபெறும் விபத்துகளின் எண்ணிக்கை 12.5 லட்சம். போர், கொலை நிகழ்வுகளில் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகம் என்கிறது போர்ப்ஸ் இதழ். விழிப்புணர்வு ஏற்படுத்தி உயிரிழப்புகளை குறைக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளை விட இதற்கு தீர்வுகளைத் தேடும் டெக் நிறுவனங்களின் லட்சிய வேகம் அதிகம். அப்படிப்பட்ட ஐடியாக்களில் ஒன்றுதான் தானியங்கி கார்கள். கேமராக்கள், சென்சார் மற்றும் ஏஐ(செயற்கை நுண்ணறிவு) மூலமாக தானியங்கி கார்களை இயக்கும் சோதனைகளை மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், கூகுள், பைடு, உபர், டொயோட்டோ ஆகிய முன்னணி நிறுவனங்களோடு பல்வேறு சிறுகுறு நிறுவனங்களும் கைகோர்த்து பல்லாண்டுகளாக செய்து வருகின்றன. தூக்கம், பகல்கனவு, விதிகளைப் மதிக்காததால் வண்டியின் ஓட்டுநர் மட்டுமல்லாது பயணிகளும் விபத்தில் பலியாவதற்கு தீர்வு, ஏஐ கார்கள்தான். தானியங்கி கார்களிலுள்ள சென்சார்கள் மூலம் முன்னேயுள்ள கார், சாலையைக் கடக்கும் பாதசாரிகள், சிக்னல் என அனைத்தையும் கண்காணித்து இயங்குவதால் எதிர்காலத்தில் விபத்துகளின் எண்ணிக்கை குறைவது உறுதி. ட