இடுகைகள்

சட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வணிக வாடகை தாய்மை - புலனாய்வு அறிக்கை

படம்
www.occrp.org வாடகைத் தாய்மை நிறுவனத்தின் சரிவு: வாடகைத் தாய்மார்கள் மற்றும் குழந்தையை எதிர்பார்க்கும் பெற்றோர்களின் கனவுகளையும் பணத்தையும் காவுகொண்டது. World Center of Baby நிறுவனத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், நம்பகத்தன்மையுடன் ஒரு செய்தியாளருடன் பேச விரும்பினால், தயவுசெய்து OCCRP-ஐ [email protected] என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும். குடும்பத்தை உருவாக்குவதற்கான ஒரு தடையற்ற பயணம் என்பதே இந்த நிறுவனத்தின் வாக்குறுதியாகும்.  உக்ரைன், அல்பேனியா, ஜோர்ஜியா, சைப்ரஸ் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் சேவைகளை விளம்பரப்படுத்திய வணிக வாடகைத் தாய்மை நிறுவனமான 'World Center of Baby', குழந்தையை எதிர்பார்க்கும் பெற்றோர்களை வாடகைத் தாய்மாருடன் இணைத்து, சிக்கலான மருத்துவ மற்றும் சட்டப் செயல்முறைகளை ஒருங்கிணைத்துத் தரும் 'ஒரே இடத்தில் அனைத்து சேவைகளும்' (one-stop shop) வழங்கும் நிறுவனமாகத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டது.  இந்த நிறுவனத்தின் சில வாடகைத் தாய்மை தொகுப்புகள் $100,000-க்கும் மேல் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தன. *கடன்: ஜேம்ஸ் ஓ'பிரையன்/OCCR...

டெஸ்லா தொழில்சங்கத்தை தோற்கடித்தது எப்படி?

## 🚗 டெஸ்லா vs. உலகின் வலிமையான தொழிற்சங்கம்: ஒரு வரலாற்றுத் தோல்வியின் கதை **ஆக்கம்:** ஜெர்மன் பெண்டர்   **மூலம்:** www.socialeurope.eu --- ### 1. 1,027 நாட்கள் போராட்டம் – பலனில்லாத முடிவு கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி, ஸ்வீடனில் டெஸ்லாவுக்கு எதிரான தொழிற்சங்கம் முடிவுக்கு வந்தது.   **1,027 நாட்கள்** நீடித்த இந்தப் போராட்டம், கடந்த நூற்றாண்டில் ஸ்வீடன் கண்ட மிக நீண்ட தொழிற்துறை மோதலாகும்.   ஆனால், இதன் முடிவு **தொழிற்சங்கத்திற்கு கசப்பானது**.   ஏனெனில், டெஸ்லாவுடன் கூட்டு ஒப்பந்தம் (Collective Agreement) பெற வேண்டும் என்ற **IF Metall** தொழிற்சங்கத்தின் குறிக்கோள் நிறைவேறவில்லை. --- ### 2. எதிர்பார்த்த ஆதரவு – ஆனால் போதுமானதாக இல்லை - ஆரம்பத்தில் 40 ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.   - பின்னர் அது **80 பேர்** வரை உயர்ந்தது.   - ஸ்வீடனில் பெரும்பான்மையான மக்கள் தொழிற்சங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.   - மற்ற நாடுகளைச் சேர்ந்த **14 தொழிற்சங்கங்கள்** அனுதாப வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டன.   - டெஸ்லா மற்றும் எலோ...

டீத்தூளில் காஃபீன் அளவு????

உங்கள் கேள்வியில் ஆழமான கருத்து ஒன்று இருக்கிறது - உண்மையில், டீத்தூளிலும் காஃபீன் அளவு குறிப்பிடப்பட்டால் நுகர்வோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போதைய நிலைமையும், இது ஏன் அவ்வாறு இல்லை என்பதற்கான காரணங்களையும் பார்ப்போம். ### ⚖️ விதிமுறைகளும், தற்போதைய நிலையும் **உங்கள் அவதானிப்பு சரிதான்** - குளிர்பானங்கள் மற்றும் காபி-சிக்கரி கலவைகளுக்கு எதிராக, டீத்தூலுக்கான கட்டாய காஃபீன் அளவு குறிப்பு இல்லை என்பது உண்மைதான். இதற்கு முக்கியக் காரணம் பல்வேறு உணவுப் பொருட்களுக்கான FSSAI (இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்) விதிமுறைகளில் உள்ள வேறுபாடு ஆகும்: *   **காபி மற்றும் காபி-சிக்கரி கலவைகள்**: இவற்றிற்கு தரநிலைகள் உள்ளன. உதாரணமாக, கரையக்கூடிய காபிப் பொடியில் குறைந்தது 2.8% காஃபீன் இருக்க வேண்டும், மேலும் 'காபி-சிக்கரி கலவையில்' குறைந்தது 0.6% காஃபீன் இருக்க வேண்டும் . இது உற்பத்தியாளர்களுக்கு ஒரு கட்டாய வரம்பை நிர்ணயிக்கிறது. *   **குளிர்பானங்கள்**: 145 ppm (parts per million) க்கும் அதிக காஃபீன் உள்ள கார்பனேற்றப்பட்ட பானங்கள் 'காஃபின் கொண்ட பானம்' என ...

சொந்தவேலை, நிறுவன வேலை?

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும்போது, கணினியை சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தலாமா?  இந்தக் கேள்விக்கான பதில், "பெரும்பாலும் இல்லை" என்பதுதான். உங்கள் நிறுவனத்தின் கணினியையும், நேரத்தையும் பயன்படுத்தி வெளி வேலை செய்வது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒப்பந்த மீறலாகவும், ஒழுங்கீனமான நடத்தையாகவும் கருதப்படும். இதற்கு முக்கியக் காரணங்களைப் பார்ப்போம். ### ⚖️ முக்கிய சட்ட மற்றும் ஒப்பந்த காரணிகள் 1.  **வேலை ஒப்பந்தமே அடிப்படை**: இந்திய சட்டம், வெள்ளைக் காலர் (white-collar) ஊழியர்களுக்கு இரட்டை வேலை (moonlighting) செய்வதைத் தெளிவாக அனுமதிக்கவோ அல்லது தடை செய்யவோ இல்லை. ஆனால், உங்கள் **வேலை ஒப்பந்தம் (employment contract) தான் இங்கு மிக முக்கியமான ஆவணம்**. பெரும்பாலான ஒப்பந்தங்களில், ஊழியர் நிறுவனத்திற்கு மட்டுமே பிரத்தியேகமாக (exclusively) வேலை செய்ய வேண்டும் என்றும், வெளி வேலை எதுவும் செய்யக்கூடாது என்றும் கூறும் பிரிவுகள் (clauses) இருக்கும். இந்த ஒப்பந்தத்தை மீறுவது சட்டப்படி தவறு . 2.  **நிறுவனச் சொத்தின் மீதான உரிமை**: **"சொந்த வேலை"** என்பதன் வரையறை மிகவும் முக்கியமானது....

கொத்தடிமை ஒழிப்புச்சட்டம் - 50 ஆவது ஆண்டு -2030இல் 70 சதவீதம் ஒழிக்கப்பட வாய்ப்பு

படம்
  கொத்தடிமை ஒழிப்புச்சட்டம் - 50 ஆவது ஆண்டு  கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிற சூழலில் விரைவில் தமிழ்நாட்டில் தேர்தல் வரவிருக்கிறது. நாடே மூடநம்பிக்கையில் எது நடந்தாலும் ஆட்சித்தலைவரை ஏதும் சொல்லக்கூடாது என்ற பக்தியில் காலை நக்கிக்கொண்டிருக்கும் ஊடகங்கள் உள்ளன. தி இந்துவும் அப்படியான பத்திரிகைதான். தமிழ்நாடு முதலமைச்சரின் செய்தி அருகே, எல் முருகன் என்ற பட்டியலின பொறுக்கித் தின்னும் அமைச்சர் ஒருவரின் செய்தி இடம்பெறுகிறது. இதை அனுமதிக்கிறவர்கள் மனநிலை எப்படியானது என புரிந்துகொள்ளலாம். மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு மனநிலைதான். இருந்தாலும் தி இந்துவில் ஆச்சரியப்படுத்தும் சில கட்டுரைகளை எழுதும் அதிசய பத்திரிகையாளர்களும் உண்டு. அப்படி ஒருவர் எழுதிய கட்டுரையின் அடிப்படைச் சாரம் மட்டும் இங்கே...  தமிழ்நாட்டில் கொத்தடிமை முறை இப்போதும் இருக்கிறது. இந்த முறை இப்போது கல்குவாரி, செங்கல் சூளை மட்டும் இல்லாமல் ஜவுளிக்கடை, சூப்பர் மார்க்கெட், பல்லடுக்கு வணிக மால்கள், கட்டுமான இடங்கள், ஹோட்டல்கள், ரிசார்டுகள் என பரந்துள்ளது. எனவே, கொத்தடிமையாக உள்ளவர்களை கண்டுபிடித்து மீட்...

வாரம் முழுக்க காவல்துறை அதிகாரி, வார இறுதியில் கொலையாளி! விஜிலாண்டே

படம்
  விஜிலாண்டே மாங்கா காமிக்ஸ்  கொரியா இந்தக்கதையில் நாயகன், ரௌடி ஒருவனால் பாதிக்கப்பட்டு தாயை இழந்தவன்.அதாவது, அம்மாவை ரௌடி அடித்து உதைத்து படுகொலை செய்துவிடுகிறான். நீதிமன்றம் குற்றவாளிக்கு மெலிதான தண்டனை கொடுத்துவிட்டு விட்டுவிடுகிறது. இது நாயகனை பாதிக்கிறது. சிறுவனாக இருப்பவன், பெரியவனாகி குற்றவாளிகளை அடியோடு அழிப்பதாக உறுதி எடுக்கிறான். அதற்கு காவல்துறையே சரியான வழி என அங்கு வேலைக்கு சேர்கிறான். அவனது வயதில் உள்ளவர்களில் கராத்தே, ஜூடோ, ஜிஜூட்சு ஆகியவற்றை சிறப்பாக கற்றவர்கள் யாருமில்லை என்று பெயரும் புகழும் எடுக்கிறான். உங்களுக்கு இப்போதே புரிந்திருக்கும். யார் விஜிலாண்டே என்று. நாயகன்தான் குற்றவாளிகளை ஹூடி அணிந்துகொண்டு சென்று கை முஷ்டிகளால் தாடையை பெயர்த்து குத்து குத்தென குத்தியே கொல்கிறான். வேறு எந்த ஆயுதங்களும் கிடையாது. ஒருவகையில் அப்படி கொல்வது நாயகனுக்கு ஆத்ம திருப்தியை தருகிறது.  கொரியாவில் நீதித்துறை கறைபடிந்த ஊழல் புரையோடியது. இதன் காரணமாக பள்ளியில் கேலி சித்திரவதை, பாலியல் துன்புறுத்தல், அடித்து உதைத்தல், குடும்ப வன்முறை என எவற்றுக்கும் நீதித்துறை கடுமையான த...

இந்தியாவை தேங்கி கிடக்கிற, நோய் பிடித்த சமூகமாக மாற்றியதே இந்துமதம்தான்!

படம்
 அரசை கட்டுப்படுத்தும் ஆளும் வர்க்கம் இந்தியச்சமூகத்தில் கிராமம், நகரம், மாவட்டம், மாநிலம், நாடு என்று தேடினாலும் ஆளும் வர்க்கத்தின் அளவு பத்து சதவீதம்தான் தேறும். இந்தியாவிற்கென நாடாளுமன்றம் உள்ளது. அதற்கான உறுப்பினர்கள், கேபினட் அமைச்சர், பிரதமர் என யாராக இருந்தாலும் சரி, ஆளும் வர்க்கத்திற்கு எதிராக இயங்க முடியாது. இந்த ஆளும் வர்க்கம்தான் அரசை நடத்துகிறது. அரசு இவர்களை நடத்தவில்லை. அரசியலமைப்புச்சட்டம் சில விஷயங்களைக் கூறலாம். நாடாளுமன்றம் சட்டங்களை கொண்டு வரலாம். கேபினட் அமைச்சகம் முடிவுகளை எடுக்கலாம். அரசு கூட இறுதியாக ஏதேனும் முடிவுகளை எடுக்கலாம். ஆனால் ஆளும்வர்க்கத்திற்கு அந்த முடிவுகள் சட்டங்கள் பிடிக்காதபோது, அவை நடைமுறைக்கு வராது. எனவே, தலித்துகளை காக்கும் சட்டங்கள் அனைத்தும் காகித தாளில் மட்டுமே உள்ளது. அவை நடைமுறைக்கு வரவில்லை. காரணம், அவையெல்லாம் ஆளும் வர்க்கத்திற்கு உவப்பாக இல்லை. இப்பிரச்னையை எளிதாக கூறலாம். ஆளும் வர்க்கத்தை எதிர்த்து எந்த அரசும் இயங்க முடியாது. இதை எதிர்த்து யாரும் இயங்க முடியாது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை ஆட்சியை விட்டு அகற்றியது கூட இதே ஆளும...

பெரிய வணிகம் செய்வதிலுள்ள லாபம் - பாயும் பொருளாதாரம்!

படம்
  5 பாயும் பொருளாதாரம் பெரிய தொழில் பெத்த லாபம் இந்தியாவில் சாதி இருக்கிறதோ இல்லையோ, சிறுகுறு தொழில்கள் நிறைய அழிந்துவிட்டன. வரி தீவிரவாதம் ஒருபுறம், பெருவணிகர்களின் எல்லைமீறிய வணிகம், அரசின் ஆதரவின்மை எல்லாமே முக்கிய காரணம். பெரிய வணிகம் எப்படியோ கடன் பெற்று அதை அரசே ஏற்றுக்கொள்ள பிழைத்துவிடுகிறது. பொதுவாக நிறைய பொருட்களை வாங்குபவர்களுக்கு அதன் விலை இயல்பாகவே குறைவாக வருகிறது. அவர் அதை விற்று வரி தீவிரவாதத்தை சமாளித்து தேர்தல் பத்திரத்தை வாங்கிவிட்டால் போதும். வணிகத்தை காப்பாற்றிவிடலாம். தொழில் தடுமாறுகிறதா, பாரத்தை தள்ளும்போது ஐலேசா சொல்வது போல பாரத் மாதா என அலறி அழுதால் போதும். தொழில் நன்னிலைக்கு மீண்டும் விடும். பெரிய தொழிலோ, சிறு தொழிலோ திறமையான தொழிலாளர்கள் முக்கியம். பொருட்களை நவீனமான செயல்முறையில் உற்பத்தி செய்வதில் சமரசம் செய்யக்கூடாது. பெரிய தொழில் பார்க்க பிரமாண்டமாக தெரிந்தாலும் அதில் மாற்றங்களை ஏற்படுத்துவது கடினம். நிறைய பிரிவுகள் இருப்பதால், பிறர் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்கமாட்டார்கள். செக்குமாடு போல மாதசம்பளத்திற்காக ஓடிக்கொண்டிருப்பார்கள். உழைத்தாலும் பாராட்...

குறைந்த வேலை நேரத்தில் உழைத்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பது எப்படி?

படம்
      குறைந்த நேரம் உழைப்பு, அதிக நேரம் வாழ்க்கை அணுக்க முதலாளித்துவத்தை கொண்டுள்ள இந்தியா, தொழிலாளர் சட்டங்களை ஏற்கெனவே திருத்தி, உரிமைகளை பறித்து வருகிறது. அப்படியும் கூட மனநிறைவு பெறாத மனச்சிதைவு கொண்ட பேராசைக்கார கிழவாடிகள், இன்னும் அதிக நேரம் உழைக்க வேண்டும் என ஊளையிட்டு வருகிறார்கள். அதாவது, உழைத்தால் அவர்களுக்கு நல்லது. சொத்து மதிப்பு ஏறும். தொழிலாளர்களுக்கு உடைந்த மண்சட்டி ஓடு கூட கிடைக்காது. மாதசம்பளக்காரர்களிடம் வருமான வரித்துறை ஜேப்படி திருடன் போல நடந்துகொள்கிறது. இந்திய அரசு வரியை வெளிநாடுகள் அளவுக்கு வாங்கிவிட்டு மருத்துவம், கல்வி, என கேள்வி கேட்டால் தனியாரிடம் துரத்திவிடுவார்கள். கார்த்திக் நேத்தாவின் வரிகளில் சொன்னால் ஒரு கண்ணில் அகங்காரம், மறுகண்ணில் ஓம்காரம் என்பது அரசைப்பற்றி புரிய வைக்க சரியாக இருக்கும். 1926ஆம் ஆண்டு ஹென்றி போர்டு, தனது கார் தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஐந்து நாட்கள் வேலை. எட்டு மணி நேரம் உழைப்பு என்ற விதிகளைக் கொண்டு வந்தார். இதை ஒன்பது மணி தொடங்கி ஐந்து மணி வரையிலான வேலை என்று கூட குறிப்பிடும் வழக்கம் இருந்தது. அதிக நேரம் உழைக்கும் நாடு...

பெங்களூருவில் பொதுமக்கள் கூடுவதற்கான இடங்கள் தேவை!

படம்
              பொதுமக்களுக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் போராளி வி ரவிச்சந்தர் நமது சமூகம் தொடர்ச்சியாக பிளவுபட்டுக்கொண்டே இருக்கிறது என்று வருத்தப்பட்டுக்கொண்டு நின்றுவிடாமல் அந்த நிலையை மாற்ற முயல்பவர்களில் குறிப்பிடத்தக்கவர், வி ரவிச்சந்தர். வயது 67 ஆகிறது. தொடர்ச்சியாக அரசின் நிர்வாக பிரச்னைகளை எதிர்த்து போராடி வருகிறார். கோரமங்கலா பகுதி குப்பைகளை கிராமங்களுக்கு கொண்டு சென்று கொட்ட்க்கூடாது. அப்படி கொட்டினால் கிராமம் பாதிக்கப்படும் என வெளிப்படையாக எதிர்க்கும் மக்களுக்கான குரல் அவருடையது. நிதியுதவி குறைவாக கொண்டிருக்கும் திட்டம் என்றாலும் அதில் பாதிப்பு என்றால் வெளிப்படையாக மக்களிடம் பேசி ஆதரவு திரட்டி அதை மாற்ற முயல்பவர். வெறும் பேச்சு மட்டுமின்றி, செயல்படுவதற்கும் தயங்காதவராக இருப்பது ஆச்சரியமாக உள்ளது. இருபத்து நான்கு ஆண்டுகளாக அரசின் பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி போராடி வருகிறார். அவரின் சாதனைகள் என்று பார்த்தால் குறிப்பிட்டு மூன்று விஷயங்களைக் கூறலாம். சொத்து வரி திட்டம், பாதசாரிகளுக்கான சாலை, லால்பாக் பூங்கா சூழல் திட்டம் ஆகியவற்றில் ரவிச்சந...