உணவுப் பொருட்களில் எச்சரிக்கை லேபிள்! - அமெரிக்கா தயங்குவது ஏன்?
உணவுகளில் எச்சரிக்கை லேபிள்
அமெரிக்காவில் உணவுப்பொருட்களில் எச்சரிக்கை லேபிள்களை ஒட்டி விற்க எஃப்டிஏ அமைப்பு யோசித்து வருகிறது. அமெரிக்கர்கள் ஏராளமான குப்பை உணவுகளை வகைதொகையின்றி உண்பதால் உடல்நலம் கெட்டு வருகிறது. இதை சரி செய்ய அமெரிக்க அரசு யோசித்து வருகிறது. இந்த எச்சரிக்கை லேபிளில் கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றைப் பற்றிய விவரங்கள் இருக்கும். எப்போதும் போல அமெரிக்க நிறுவனங்கள், லேபிள் போடச்சொன்னால் குப்பை உணவுகளின் விலைகளை ஏற்றுவோம் என்று கூறியுள்ளன.
ஆனால் நிறுவனத்தின் லாபம் தாண்டி உடல்நலம் பற்றி யோசித்தால் அமெரிக்காவில் உள்ள சிறார்கள், இருபது சதவீதம் பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை 1970ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு கணக்குப் போட்டு கூறுகிறார்கள். உணவு தரக்கட்டுப்பாட்டு அமைப்பான எஃப்டிஏ, லேபிள்களில் பச்சை சிவப்பு மஞ்சள் ஆகிய நிறங்களை பயன்படுத்தி உடலுக்கு நேரும் ஆபத்தை கூறுவது அல்லது உப்பு, சர்க்கரை, கொழுப்பு அதிகமாக உள்ளது என நேரடியாக கூறுவது என இரண்டு லேபிள் திட்டங்களை யோசித்து வருகிறது.
சிலி நாட்டில் உணவுப்பொருட்களில் உள்ள பகுதிப்பொருட்கள் சார்ந்து இரண்டு லேபிள்களை அரசு வெளியிட்டிருக்கிறது. அதில், அதிக சர்க்கரை கொண்ட உணவு உடல் எடையை அதிகரிக்கும், நீரிழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை உள்ளது. பெரும்பாலான குப்பை உணவுகளில் ஒருவர் தினசரி உண்ணும் உணவில் இருப்பதை விட இருபது மடங்கு அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்பு உள்ளன. இதன் விளைவாக, எளிதாக ஒருவர் உடல் பருமன் பிரச்னைக்கு உள்ளாவார். குறிப்பாக சிறுவர்கள் எளிதாக நோய்க்கு இலக்காவார்கள். இளம் வயதில் மரணமடையவும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
சிலி நாட்டின் எச்சரிக்கை லேபிள் காரணமாக, சந்தையில் உள்ள நிறுவனங்களின் விற்பனை ஏழு சதவீதம் குறைந்துள்ளது. எனவே அந்த நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் மூலத்தை மாற்றுவதற்கு முனைந்துள்ளனர். அமெரிக்க குளிர்பான நிறுவனங்களின் சங்கம், சான்பிரான்சிஸ்கோ அரசுக்கு எதிராக ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ளது. லேபிள் அமைப்பு, வணிக சுதந்திரத்திற்கு எதிரானது என கருத்து தெரிவித்துள்ளது. எஃப்டிஏ, லேபிள் முறையை இப்போது யோசிக்கிறது. ஆனால், சிலி நாடு, தனது லேபிள் முறையை 2016ஆம் ஆண்டே நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டது. அந்த நாட்டில் சோடியம் அதிகம், சர்க்கரை அதிகம் என்று கூறப்படும் பொருட்களை, அமெரிக்காவில் எஃப்டிஏ மத்திம அளவு என குறிப்பிட்டு விற்க அனுமதிக்கிறது.
கோவிட் காலத்தில் வீட்டிலேயே அடைந்து கிடந்த இளையோருக்கு குப்பை உணவுகளால் உடல் எடை அபரிமிதமாக அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க அரசு, உணவுகளில் எச்சரிக்கை லேபிளை கொண்டு வர திட்டமிட்டது. அதை முன்புறம், பின்புறம் என எந்த இடத்தில் அச்சிட்டால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என யோசித்து வருகிறது. உணவுசார்ந்த திட்டத்திற்கு இடதுசாரி தலைவர் பெர்னி சாண்டர்ஸ் தலைவராக இருக்கிறார். பெரு நிறுவனங்கள், அரசின் எச்சரிக்கை லேபிளை முற்றாக எதிர்க்கின்றன. அவை எந்தவொரு எச்சரிக்கை அம்சங்களையும் வியாபாரத்திற்கு எதிராக அச்சிடவிரும்பவில்லை. இந்த நிலையை புகையிலை நிறுவனங்களும் கூட கடைபிடித்தன. ஆனால், புற்றுநோய் பாதிப்பால் மனிதர்கள் அதிக எண்ணிக்கையில் இறந்துபோகத் தொடங்கினர். இப்போது உலகில் பெரும்பாலான நாடுகளில் சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை லேபிள்கள் உள்ளன. இவை எழுத்து அல்லது புகைப்படமாக இருக்கக்கூடும். ஆற்றல் பானங்களில் சர்க்கரை அதிகமாக உள்ளது. இதை அவர்கள் மக்களுக்கு தவறாக புரிந்துகொள்ளும் விதமாக ஊட்டச்சத்து அட்டவணையில் அச்சிட்டு விற்கிறார்கள். உதாரணம் பெப்சி நிறுவனத்தின் காட்டரோட் குளிர்பானம்.
அதி நுட்பமாக பதப்படுத்தப்பட்ட பொருள் மற்றும் உப்பு, சர்க்கரை, கொழுப்பு அதிகம் உள்ள பொருட்கள் என ஆகியவற்றை வேறுபடுத்திக்காட்ட சாண்டர்ஸ் யோசித்து வருகிறார். நீங்கள் நன்கு கவனித்தால், எஃப்டிஏ கலோரி பற்றி எதையும் கூறவில்லை என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், இதுபோல லேபிள் முறையை அமலுக்கு கொண்டுவர பைடன் அரசுக்கு தயக்கம் உள்ளது. ஓராண்டாக இந்தவிதியை நடைமுறைப்படுத்தாமல் தள்ளி வைத்து வருகிறார்கள். சிலி நாட்டில் எச்சரிக்கை லேபிள்கள் அமலுக்கு வந்தாலும் கூட குப்பை உணவுகளின் விலை பெரிதாக உயரவில்லை. முன்னர் எப்படியோ அப்படியேதான், பொருட்களின் விலை உள்ளது. அமெரிக்காவில் சூழல் எப்படியோ, தேர்தலுக்குப் பிறகு தெரிய வரும்.
வாஷிங்டன் போஸ்ட் - லாரன் வெபர் ரேச்சல் ரூபென்
#the washington post #sodium #sugar #fat #obesity #FDA #label #health #food #warning signs #chile #calorie #bernie sanders #usa #unhealthy #caution #nutrition #snacks #crisis #children #colors
கருத்துகள்
கருத்துரையிடுக