கட்டற்ற மென்பொருட்களை எஃப்ட்ராய்ட் மென்பொருள் வழியாக பெறுங்கள்!

 

 

 



 


எஃப் ட்ராய்ட் ஆப் பற்றி, மெட்டா மங்கீஸ் யூட்யூப் சேனலில் திரு. விஜய் வரதராஜ் பேசியிருந்தார். அந்த வகையில் பிளே ஸ்டோர் போன்ற அந்த மென்பொருளை முதலில் தரவிறக்கி இசை, வானொலி போன்ற ஆப்களை சோதித்துப் பார்த்ததில் சிறப்பாகவே இயங்கியது. முக்கியமாக எளிமையாக இருந்தது. அந்த வகையில், அசலான கட்டற்ற மென்பொருள் வணிக அடிப்படையில் வெளியிடும்போது சில தீர்க்க முடியாத பாதுகாப்பு குறைபாடுகளைக் கொண்டுள்ளது. ஆனால், எஃப்ட்ராய்டில் சில நிறுவனங்கள் அந்த மென்பொருள்களின் பாதுகாப்பு சிக்கல்களை தீர்க்கிறார்கள். தனிநபர் கணினி நிபுணர்களும் உண்டு. மென்பொருட்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், அதை உருவாக்கியவர்களுக்கு நிதியுதவியை வழங்கலாம். இல்லையென்றாலும் சரிதான். பயன்பாட்டு வகையில் சிறப்பாக உள்ளது.வாசகர்களும் எஃப்ட்ராய்டைப் பயன்படுத்தலாம். 

ஓப்போ போனில் கூகுள் ஆப்ஸ்கள் இன்றி, அதில் ப்ரீ இன்ஸ்டாலாக உள்ள கட்டற்ற மென்பொருட்களை வைத்தே இயக்க முடியும். ஆனால் அந்த மென்பொருட்கள் பயன்படுத்த அந்தளவு வசதியானவை அல்ல. 

வானொலிக்கு ட்ரான்சிஸ்டர், கேமராவுக்கு ஓப்பன் கேமரா, ஆர்ஐ மியூசிக், டெலிகிராம் எஃப்ஓஎஸ்எஸ் ஆகிய ஆப்கள் சிறப்பாக இயங்குகின்றன. பயன்படுத்திப் பாருங்கள்.


 

 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்