அறிவுப்பற்று - காரீய நச்சு ஏற்படுத்தும் ஆரோக்கிய பாதிப்புகள் என்னென்ன? - மிஸ்டர் ரோனி

 

 

 

 

 

 

 

 



அறிவுப் பற்று
மிஸ்டர் ரோனி

காரீய நச்சு, உடல்நலனில் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன?

காரீயம், முன்னர் பெயிண்டுகளில் பயன்பட்டது. காரீயத்தை சேர்த்தால் பெயிண்டில் பளபளப்பு கூடியது. விலையும் மலினமாக இருந்தது. பெயிண்டை பூசி பயன்படுத்திய பாத்திரங்களி்ல காரீயம் அதை பயன்படுத்தியவர்களின் உடலில் மெல்ல சென்று சேர்ந்தது. குறிப்பாக தேநீர், ஒயின், பழச்சாறு, காபி ஆகிய உணவுப்பொருட்களில் காரீய நச்சு கலந்தது.

பேட்டரி தொழிற்சாலை, எரிபொருள் ஆகியவற்றில் காரீய வேதிப்பொருள் உண்டு. உடலுக்குள் காரீயம் சென்று சேர்ந்தால், சிறுநீரகம், நரம்பு மண்டலம், எலும்பு மஜ்ஜை ஆகிய பலவீனமடைந்து சேதமடைகின்றன. பெரும்பாலும் இரும்பு குழாய்களில் காரீயம் இருந்து உடலுக்குள் தொடர்ச்சியாக செல்வது பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவு காரீயம் உடலுக்குள் போனால் கைநடுக்கம், மனநோய்கள், மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளுக்கு காரீய பாதிப்பால், நரம்புமண்டலம் பாதிக்கப்படுகிறது. கி.மு 150இல் ரோமப் பேரரசு காலத்தில் காரீயத்தை அதன் ஆபத்து தெரியாமல் சமையல் பாத்திரங்கள், உணவு, மருத்துவம் என பயன்படுத்தினர். இதனால் பெண்கள் பலரும் மலட்டுத்தன்மை அடைந்தனர். இதனால், அடுத்த தலைமுறை உருவாகவே இல்லை. ரோமப்பேரரசின் மேல்தட்டு வர்க்கத்திற்கு பிள்ளைப்பேறே மிக குறைந்துபோனது என வரலாற்றில் தகவல்களை கூறுகிறார்கள்.

பனாமா கால்வாய் கட்டியதில் மருத்துவருக்கு இருந்த பங்கு என்ன?

அன்றைய காலத்தில் மஞ்சள் காய்ச்சல், மலேரியா பாதிப்பும், இறப்பும் அதிகரித்து வந்தது. அதைக் குறைக்க மருத்துவர் கார்காஸ் முயற்சி எடுத்தார். நோய்களை பரப்பிய கொசுக்களின் இனப்பெருக்க இடங்களை அழித்தொழித்தார். இவரது பங்களிப்பு காரணமாக, கால்வாய் பணி வேகம் பெற்றது.

ஜூனோசிஸ் என்றால் என்ன?

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் தொற்று அல்லது ஒட்டுண்ணி நோய்களை ஜூனோசிஸ் என வரையறுக்கலாம். நீங்கள் செல்லப்பிராணிகளை வளர்த்தால் அதற்கு முறையாக தடுப்பூசி போட வேண்டும். மலைகளில் சாகச பயணமாக ஏறினால் முழங்கைகளை முழுக்க மூடிய மேலுடை, கால்சட்டைகளை அணியவேண்டும்.

வெக்டார் என்றால் என்ன?
மருத்துவத்தில் வெக்டார் என்பது கொசு, பேன், பூச்சிகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்களைக் குறிக்கிறது.



 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

கொச்சி பின்னணியில் ரோமியோ ஜூலியட் கதை! - ரொமான்டிக் - தெலுங்கு