கூ சமூக வலைத்தள நிறுவனம் மூடப்பட்டதன் காரணம்!
நிறுவனம் தோற்கலாம், நிறுவனர்கள் தோற்பதில்லை இப்படியொரு வாசகத்தை ஒருவர் எதற்கு சொல்லவேண்டி வரும்? கடையை அடைக்கும்போதுதானே? கூ என்ற ட்விட்டரை உல்டா செய்து உருவாக்கப்பட்ட இந்திய நிறுவனம் மூடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் கடைசியாக நிறுவனர்கள் அப்ரமேயா ராதாகிருஷ்ணா, மாயங்க் பிடாவட்கா ஆகியோர் மேற்சொன்ன செய்தியை சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறார்கள். இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை உருவாக்க பெரிதாக ஆராய்ச்சி ஏதும் செய்வதில்லை. பணம் வீண் பாருங்கள். பெரும்பாலும் மக்களிடம் வெற்றி பெற்ற அயல்நாட்டு வணிக வடிவத்தை அப்படியே எடுத்து செப்பனிட்டு தாய்மொழியான வடமொழி அல்லது ஆங்கிலத்தில் பெயர் வைத்து தொடங்கிவிடுவார்கள். அப்படி நிறைய நிறுவனங்கள் ஸ்டார்ட்அப்களாக உருவாகின. அதுவும் இந்தியாவில் சீன நிறுவனங்கள், ஆப்கள் தடை செய்யப்பட்டபோது, நகல் நிறுவனங்களின் எண்ணிக்கை கூடியது. அப்படி இயங்கினால் கூட கூகுள், மெட்டா, அமேசான் போல எந்த நிறுவனங்களும் உருவாகவில்லை. உருப்படியாக நின்று சாதிக்கவில்லை. தனித்துவம் இல்லாமல் உள்ளூர் மொழி என்று மட்டும் ஆப் ஒன...