இடுகைகள்

பாசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வினோதரச மஞ்சரி - சிவப்புநிற பனி, டைனோசர் தூக்கம்

படம்
  தெரியுமா? சிவப்புநிற பனி! துருவப்பகுதிகளில் உள்ள மலைகளில் சிவப்பு நிற பனியைப் பார்க்கலாம். இதற்கு வாட்டர்மெலன் ஸ்னோ (Watermelon snow) என்று பெயர். இந்த பனி உள்ள இடத்தில் பழவாசனையை உணரலாம். வாசனையை உணர்ந்து, ஆவலோடு உடனே பனியை எடுத்து சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு ஏற்படும்.  பனியின் சிவப்பு நிறத்திற்கு காரணம், அதிலுள்ள க்ளாமிடோமோனாஸ் நிவாலிஸ் (Chlamydomonas nivalis) என்ற பாசிதான். கோடைக்காலத்தில் பாசி தன்னை வெப்பத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள சிவப்பு நிறத்தை உற்பத்தி செய்கிறது. சிவப்புநிறத்திற்கு கரோட்டினாய்ட் வேதிப்பொருளே காரணம்.  க்ளாமிடோமோனாஸ் நிவாலிஸ் பாசி உருவாக்கும்  சிவப்பு நிறம் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் திறன் கொண்டதல்ல. இதன் காரணமாக, வெப்பத்திலிருந்து பாசி தன்னைக்காத்துக் கொண்டாலும் அங்குள்ள பனி உருகுவதை தடுக்க முடிவதில்லை.  டைனோசர் தூக்கம் டைனோசர் எப்படி தூங்கியிருக்கும்? தரையில்  அல்லது உட்கார்ந்தபடியே தூங்குமா என யோசித்தால் வினோதமாக இருக்கிறது. இதற்கு உறுதியான பதில்களை சொல்லுவது கடினம்.  12 கோடியே 50 லட்சம் ஆண்டுகள் தொன்மையான பறவைகளுக்கு நெருங்கிய தொடர்புகொண்ட உயிரின படிமம

கடல்நீருக்கு வாசனை எப்படி வருகிறது? பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? 1. உலகிலுள்ள கடல்கள் அதிக உப்புத்தன்மை பெறுமா? கடல்நீர் உப்பாக இருப்பதை அறிந்து இப்படி பலரும்கேட்கிறார்கள். மழைபெய்து அதில் பாறைகள் கரைந்து உப்புத்தன்மை கடல்நீரில் கூடுகிறது. உப்பில் சோடியமும், குளோரினும் அதிகமாக இருக்கும். இந்த வேதிப்பொருட்களை  சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பில் காணலாம். பல நூற்றாண்டுகளாக கடலில் உப்பு சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடலின் உப்புத்தன்மை சற்று கூடுவது உண்மை. ஆனால் ஏன் உயிரினங்கள் வாழ முடியாதபடி மாறவில்லை என யோசிக்கலாம். இப்படி அதிகரிக்கும் உப்பின் அளவு  அரை நூற்றாண்டுக்கு சில சதவீதமே கூடுகிறது. கடலில் இப்போது பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சூரியனின் வெப்பம் கூடுவதால் கடலிலுள்ள நீர் வேகமாக ஆவியாகிறது. இதன் விளைவாக கடற்கரையில் உப்பு தேங்க வாய்ப்புள்ளது. நீரின் அளவு குறைவதால் உப்பு கடல்நீரால் கரைக்கப்படுவது குறைகிறது என இங்கிலாந்து சூழலியலாளர் ஜேம்ஸ் லவ் லாக் கூறியுள்ளார்.  2. கடல் நீருக்கு அதன் வாசனை எப்படி வருகிறது? கடல்நீருக்கு தன்னளவில் எந்த வாசனையும் கிடையாது. ஆனால் அதில் உயிர்வாழும் நுண்ணுயிரிகள், உயிரினங்கள

நுண்ணுயிரிகள் கண்காணிப்பு!

படம்
  நுண்ணுயிரிகள் கண்காணிப்பு ஆஸ்திரேலியாவில் நிலம், நீர் உள்ளிட்டவற்றிலுள்ள நுண்ணுயிரிகளான பாக்டீரியா, பூஞ்சைகளைக் கண்டறிந்து ஆவணப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிம் லேமா முயற்சித்து வருகிறார். இவர், பாசிகள் எப்படி நுண்ணுயிரிகளை ஈர்க்கின்றன என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். பாசிகள் வெளியிடும் குறிப்பிட்ட வேதிப்பொருட்கள் நுண்ணுயிரிகளை ஈர்க்கின்றன என்பதைக் கண்டறிந்துள்ளார் கிம்.  நுண்ணுயிரிகளின் டிஎன்ஏக்களைத் தொகுத்து அதனை வரிசைப்படுத்த தொடங்கியுள்ளார். இம்முறையில் 1.7 மில்லியன் பாக்டீரியா, 1.2 மில்லியன் பூஞ்சைகள் ஆகியவற்றோடு பிறவகை நுண்ணுயிரிகள் 1.8 மில்லியன் அளவில் இணைக்கப்பட்டு மக்கள் அணுகும் தகவல்தளமாக இதனை உருவாக்கி வருகிறார். நுண்ணுயிரிகளை ஆவணப்படுத்தும் பணியில் 40 அறிவியல் அமைப்புகள் இணைந்து செயற்பட்டு வருகின்றன. இதன் மூலம் வெப்பமயமாதலின் தாக்கத்தை அறிவதோடு, நுண்ணுயிரிகளை எப்படி வாழ்க்கைமுறையை மாற்றுவதற்கு பயன்படுத்தலாம் என்ற புத்திசாலித்தனமும் இதில் உள்ளது.  மாசுபடுதலை நுண்ணுயிரிகள் மூலம் எப்படி தடுக்கலாம் என்பதற்கும் இவற்றின் டிஎன்ஏக்களை ஆவணப்படுத்த

சூழலுக்கு உகந்த காலணி!

படம்
    cc       சூழலுக்கு உகந்த காலணி ! பெட்ரோலியத்திலிருந்து பெறப்படும் பிளாஸ்டிக் கலந்து பெரும்பாலான காலணிகள் தயாரிக்கப்படுகின்றன . இவை பயன்பாடு குறைந்து குப்பையாக வீசப்பட்டாலும் கூட எளிதில் மட்குவதில்லை . இதன் காரணமாக கலிஃபோர்னியா சாண்டியாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாகள் ஒருவகை பாசியை பகுதிப்பொருட்களாக கொண்ட காலணிகளை தயாரித்துள்ளனர் . இக்காலணி , பயன்பாடு முடிந்தபிறகு பதினாறு வாரங்களில் மண்ணில் மட்கிவிடும் . பாசியிலிருந்து பெறப்படும் எண்ணெய் இதற்கு முக்கியப் பொருள் . இந்த எண்ணெய்யிலிருந்து பாலியூரத்தின் நுரை பெறப்பட்டு அதோடு பல்வேறு செயற்கைப் பொருட்கள் கலந்து காலணிகள் தயாரிக்கப்படுகின்றன . ‘’’ தற்போது நாங்கள் கண்டுபிடித்துள்ள இக்காலணியில் இயற்கையான பகுதிப்பொருட்கள் 52 சதவீதம் உள்ளன . இவற்றை நாங்கள் விரைவில் 100 சதவீதமாக்க முயன்று வருகிறோம்’’ என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபட்டு வரும் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் மேஃபீல்டு . வணிக ரீதியில் பிற காலணிகளைப் போலவே அதிக காலம் உழைக்கும்படியான பகுதிப்பொருட்களை தற்போது சோதித்து வருகின்றனர் . விரைவில் சூழலைப் பாதிக்காத காலணிகள் நமக்கு கிட