இடுகைகள்

தலைமுறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மில்லினிய இளைஞர்கள் - சீக்ரெட்ஸ் லிஸ்ட்!

படம்
சீனியர்களை கோப ப்படுத்தும் விஷயம் நாங்கள் மில்லினியல் பாஸ் என பொடுசுகள் பேசுவதுதான். பின்னே அடிக்கடி வயசை நினைவுபடுத்தினால் எப்படி..... தற்போது மில்லினிய குழந்தைகளைப் பற்றி ஏராளமான ஆராய்ச்சிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உண்மையில் மில்லினிய செட் பற்றி தெரிந்துகொள்வோம். 1981 - 96 ஆண்டுகளுக்குள் பிறந்தவர்களை மில்லினிய செட்டில் சேர்க்கலாம். இளையவர்கள் என்பதைத்தான் மில்லினியர்கள் என்று குறிப்பிடுகிறார்கள் என்பதை ப்யூ ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது. இதில் மூத்தவர்கள் 30 களில் இருப்பார்கள். மில்லினியல் என்ற வார்த்தை 91 ஆம் ஆண்டு வரலாற்று ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டது. நெய்ல் ஹோவே மற்றும் வில்லியம் ஸ்ட்ராஸ் ஆகியோரின் நூலான ஜெனரேஷன்ஸ் என்பதில் இந்த வார்த்தை முதன்முதலில் குறிப்பிடப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றவர்களைக் குறிப்பிட்ட இந்த வார்த்தையை ஆசிரியர்கள் பயன்படுத்தினர். மில்லினியர்கள் புத்தகம் படிப்பதில் ஆர்வமுடையவர்கள்தான். 2016 ஆம் ஆண்டு இவர்கள் ஆண்டுக்கு ஐந்து நூல்களை தோராயமாக படித்திருப்பதாக ஆய்வு கூறுகிறது. முந்தைய ஆய்வில் நான்கு நூல்களைத்தான் படித்தார்கள். டெக்