இடுகைகள்

மிஸஸ் டக்ளஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கோயிலுக்கு போனால் ஆன்மிகவாதி ஆக முடியுமா?

படம்
http://balamurugan1977.tumblr.com மிஸஸ் டக்ளஸ் டிக்டிக்டிக் உன் எண்ணங்கள் குறித்து கவனமாக இரு.  அவை எந்த விநாடியும் வார்த்தைகளாக வெளிவரக்கூடும். விழுங்கள் தப்பில்லை கீழே விழுவதில் அவமானம் ஏதுமில்லை. அருவியைப் பாருங்கள். என்னவொரு குதூகலப் பேரிரைச்சல். கோழியா? முட்டையாழ கோழி முதலில் வந்த தா? அல்லது முட்டை முதலில் வந்ததா? என்னவொரு முட்டாள்தனமான கேள்வி. கோழிதான். முட்டை முதலில் வந்திருந்தால் அதனை யார் அடைகாத்திருக்க முடியும். ஆன்மிகம் கோயிலுக்கு போவதால் ஒருவன் ஆன்மிகவாதி ஆகிவிட முடியாது. வொர்க்ஷாப்புக்கு போவதால் மெக்கானிக் ஆகிவிட முடியுமா? நன்றி: ஆனந்த விகடன்

நல்ல குணம் என்ன செய்யும்?

படம்
http://balamurugan1977.tumblr.com நல்ல குணம் தேவையா? திறமை உங்களை உயரே கொண்டு செல்லும். ஆனால் நற்குணம்தான் உங்களை அங்கே அமர வைக்கும். சுவடுகள் அடுத்தவர்களின் அடிச்சுவட்டிலேயே நடந்துகொண்டு இருந்தால், உங்கள் அடிச்சுவடுகளை ஒருநாளும் பதிக்க முடியாது. அனைவருக்கும் ஃப்ரெண்டு அனைவருக்கும் நண்பனாக இருப்பவன், ஒருவருக்கும் உண்மையான நண்பனாக இருக்க மாட்டான். நன்றி: ஆனந்த விகடன்

இரண்டும் ஒன்றுதானா டக்ளஸ் அண்ணே!

படம்
http://balamurugan1977.tumblr.com மிஸஸ் டக்ளஸ் இரண்டும் ஒன்றுதான் குடிகாரன் வெளியே உளறுகிறான் மற்றவர்கள் அதைத்தான் மனசுக்குள் நினைக்கிறார்கள்.  இடறு எங்கே விழுந்தாய்  என்று பார்க்காதே  எங்கே இடறியது என்று பார். யார் குற்றவாளி? ஏணிமேல் ஏறுகிறவன் மட்டும்  திருடனல்ல;  கீழே ஏணியைப் பிடித்துக்கொண்டிருப்பவனும் திருடன்தான்.  சின்ன தாமதம் உண்டா? தாமதத்தில் சிறிய தாமதம்  பெரிய தாமதம் என்று வித்தியாசம்  எதுவும் இல்லை.  யாரை நம்புவது?  எல்லோரையும் நேசியுங்கள். ஆனால் உங்களை மட்டுமே நம்புங்கள்.  சத்தமின்றி! மௌனமும் ஒருவகை விமர்சனமே! நன்றி: ஆனந்தவிகடன் 

எதைச்செய்தாலும் நம்பர் 1 ஆக இருக்கவேண்டுமா?

படம்
மிஸஸ் டக்ளஸ் வெற்றியாளன் நண்பர்கள் உள்ள எவனும்  தோற்றுப்போனவன் இல்லை. நம்பிக்கை பிரார்த்தனை உங்கள்  நம்பிக்கைக்கு உயிர் கொடுக்காது. நம்பிக்கைதான் உங்கள் பிரார்த்தனைக்கு உயிர் கொடுக்கும். சிறப்பாக செய் எதைச் செய்தாலும்  அதில் முதலாவதாக இரு. அல்லது சிறப்பாக இரு.  அல்லது புதுமையாகவாவது இரு.  அக்கறை நீங்கள் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது குறித்து யாரும் அக்கறைப்பட மாட்டார்கள்.  நீங்கள் எவ்வளவு அக்கறையோடு இருக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ளும் வரை.  நன்றி: ஆனந்த விகடன் 30.4.20008

அனைவரையும் சந்தோஷப்படுத்த முடியுமா?

படம்
unsplash டிக்! டிக்! டிக்! ஆனந்த விகடனில் 2008 ஆம் ஆண்டு வெளியான மிஸஸ். டக்ளஸ் எனக்கு பிடித்தமான பகுதி. ஜாலியான பொன்மொழி முதல் சீரியஸ் வரையில் முயற்சிப்பது இப்பகுதியின் சிறப்பு. சந்தோஷம் அல்ல! எல்லோரையும் நீங்கள் சந்தோஷப்படுத்த விரும்பினால் ஒருவரும் அதை விரும்ப மாட்டார்கள். காப்பியடி வாழ்க்கை ஒரு தேர்வு  இதில் ஒரு வசதி என்னவென்றால், இந்தத் தேர்வை நன்றாக எழுத, சிறந்த மாணவரைப் பார்த்து நாம் தாராளமாக காப்பியடிக்கலாம் தப்பில்லை. மெமரி டானிக் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள ஒரே வழி, அதை எப்படியாவது மறக்க முயற்சி செய்வதுதான். பிரிதல் தேடல் உண்மையான நண்பரைப் பிரிவது கடினம் கண்டுபிடிப்பது அதைவிடக் கடினம். 1:60 உங்கள் ஒவ்வொரு நிமிட கோபமும் வீண்டிக்கிறது உங்களின் அறுபது நிமிட ஆனந்தத்தை நன்றி: ஆனந்த விகடன்