இரண்டும் ஒன்றுதானா டக்ளஸ் அண்ணே!
http://balamurugan1977.tumblr.com |
மிஸஸ் டக்ளஸ்
இரண்டும் ஒன்றுதான்
குடிகாரன் வெளியே உளறுகிறான்
மற்றவர்கள் அதைத்தான் மனசுக்குள் நினைக்கிறார்கள்.
இடறு
எங்கே விழுந்தாய்
என்று பார்க்காதே
எங்கே இடறியது என்று பார்.
யார் குற்றவாளி?
ஏணிமேல் ஏறுகிறவன் மட்டும்
திருடனல்ல;
கீழே ஏணியைப் பிடித்துக்கொண்டிருப்பவனும் திருடன்தான்.
சின்ன தாமதம் உண்டா?
தாமதத்தில் சிறிய தாமதம்
பெரிய தாமதம் என்று வித்தியாசம்
எதுவும் இல்லை.
யாரை நம்புவது?
எல்லோரையும் நேசியுங்கள்.
ஆனால் உங்களை மட்டுமே நம்புங்கள்.
சத்தமின்றி!
மௌனமும் ஒருவகை விமர்சனமே!
நன்றி: ஆனந்தவிகடன்