காய்ச்சலின்போது உடல் நடுங்குவது ஏன்?
Pexels.com |
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
காய்ச்சலின் போது உடல் குளிருவது ஏன்?
காய்ச்சலின்போது உடலின் வெப்பநிலை அளவுக்கு அதிகமாக அதிகரிக்கிறது. அதாவது இயல்பு வெப்பநிலைக்கும் அதிகமாக. நீங்கள் கடினமாக புஷ்அப் எடுக்கிறீர்கள் என்றால் வெளிப்புற வெப்பநிலையை விட உடல் வெப்பநிலை அதிகரிக்கும். ஆனால் இயல்பு வெப்பநிலை என்பது 36.8 டிகிரி செல்சியசாகவே இருக்கும். உடற்பயிற்சியின்போது ஏற்படும் உடல் வெப்பநிலை தற்காலிகமானது. ஆனால் காய்ச்சலின்போது ஏற்படும் உடல்வெப்பநிலை இதிலிருந்து மாறுபட்டது.
உடல்வெப்பநிலை 36.8 டிகிரி செல்சியசிற்கு கீழே குறையும்போது உடல் நடுங்கத்தொடங்கும். இதனால்தான் கைகள் அறுபது வயது தாத்தா போல நடுங்குகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, உடலின் வெப்பத்தை அதிகரிக்க காரணம், நோய் ஏற்படுத்திய பாக்டீரியாவின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி நோயை விரட்டவே. உடலின் கழிவுகள் வெளியேறினாலே காய்ச்சல் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். ஆனால் அதுவரை காய்ச்சலின் நடுக்கத்தை பாதிப்பை நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. காரணம், உடலின் பலவீனமே ஆகும்.
நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்