மூளையின் ஆச்சரியங்கள்!
நம் மூளை எப்போது ஆச்சரியங்களை அள்ளித்தருவது. அதிலுள்ள சிந்தனை, எப்படி செயல்படுகிறது, சைக்கோ கொலைகாரர்களின் மூளை, புதிய விஷயங்களை பழகுவது, பழகிய விஷயங்களை சட்டென மறப்பது என ஆராய்ச்சிகள் வந்துகொண்டே இருக்கின்றன. மூளை ஆராய்ச்சியாளர் தாரா ஸ்வர்ட் தி சோர்ஸ் என்ற நூலை இதுகுறித்து எழுதியுள்ளார்.
நம் மூளைகளுக்கு ஆசைகளை பழகினால் அதனை சாதிக்க முடியும் என்கிறார் தாரா ஸ்வர்ட். தற்போது எழுத்தாளராக சுயமுன்னேற்ற பேச்சாளராக உள்ளார் இந்த உளவியலாளர்.
”நான் இந்த நூலை எழுதியது அறிவியல் முறையில் தங்கள் வாழ்க்கையை சரியானபடி வாழ நினைப்பவர்களுக்காகத்தான். நியூரோசயின்ஸ் குறித்த ஆய்வுகளை முதலில் பலரும் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் இன்று அதனை பலரும் தேடிவரக் காரணம், அதன் தேவை அதிகரித்துள்ளதான்.
Deccan Chronicle |
இன்று வாழ்வில் நீங்கள் பெறும் அனைத்து வெற்றிகளுக்கும் மூளையில் பங்கு பின்னணியில் உண்டு. அதுதான் உங்களின் ஆதாரம் அதாவது சோர்ஸ். நான் அறிவியல் முறையில் இந்த நூலில் கூறியுள்ளது அதுதான்.
நூலில் ஏராளமான ஆய்வுத்தகவல்கள், நோயாளிகளின் அனுபவங்கள், ஆளுமைகளை மேம்படுத்தும் ஐடியாக்கள் என குவிந்து கிடக்கின்றன. நமது மூளை சிறப்பாக செயல்பட்ட உணவு, நீர், உடலுக்கான உடற்பயிற்சி, குறிப்பாக ஆக்சிஜன் இதெல்லாம் தேவை. நீங்கள் வெற்றியாளராக சரியான முடிவுகளை எடுக்க உடல், மனம், உணர்வு என அனைத்தும் சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என்கிறார் தாரா.
நன்றி: டெக்கன் கிரானிக்கிள்.