சிறப்புக் குழந்தைகளை ஒதுக்கும் கஜகஸ்தான் அரசு!







மனித உரிமைகள் கண்காணிப்பகம்








குறைபாடுகளைக் கொண்ட சிறப்புக்குழந்தைகளை அரசு பள்ளிகளிலிருந்து அதிரடியாக நீக்கி வருகிறது. எந்த அரசு, கஜகஸ்தான் அரசின் புதிய சீர்திருத்தம் இது. இதன்மூலம் சிறப்புக்குழந்தைகள் சமூகத்திலிருந்து பிரிக்கப்படும் அவலம் நேருகிறது. 


நேர்காணல்: மிஹ்ரா ரித்மன்

செய்தியாளர் பிலிப்பா ஸ்டீவர்ட். 




Cover
மனித உரிமைகள் கண்காணிப்பகம்





இதுகுறித்த செய்தியை எப்படி அறிந்தீர்கள்?

கஜகஸ்தான் அரசு, தன் நாட்டு பள்ளி மாணவர்களின் கல்வியை மேம்படுத்த ஏதேனும் நடவடிக்கைகளை செய்யும் என்று பலரும் கருதிவந்தோம். ஆனால் இன்று அரசின் நடவடிக்கைகளை அறியவரும்போது அந்த நம்பிக்கை வீண் என்று உணருகிறோம்.
சிறப்பு குழந்தைகளுக்கு ஏன் பிற குழந்தைகள் பெறும் கல்வியைப் பெறத் தகுதியில்லை? அரசு இதுகுறித்து நிச்சயம் எங்களுக்கு விளக்கியே ஆகவேண்டும்.

அரசு என்ன விதிகளை மீறியுள்ளது?

2015 ஆம் ஆண்டு கஜகஸ்தான் அரசு, சிறப்புக்குழந்தைகளுக்கும் பிற குழந்தைகளைப் போலவே கல்வி அளிப்பதாக ஒப்புக்கொண்டது. தற்போது அந்த விதியை க் குற்றவுணர்வின்றி மீறியிருக்கிறது. மேலும் பள்ளிகளில் சிறப்புக்குழந்தைகளுக்கான ஆசிரியர்கள் நியமனத்திலும் அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது கஜகஸ்தான் செய்த ஒப்பந்தத்திற்கு விரோதமானது.

சிறப்புக்குழந்தைகளுக்கு பாதமானது என்ன?

அரசு, சிறப்புக்குழந்தைகளை சாதாரண பள்ளியிலிருந்து அகற்றுவது சமூக புறக்கணிப்பு என்றே அர்த்தம் கொள்ளலாம். சிறப்புக்குழந்தைகளின் பெற்றோர், தங்கள் குழந்தைகளும் பிற குழந்தைகளுடன் கலந்து விளையாடுவதை விரும்புவார்கள். ஆனால் அரசே இதில் பாகுபாடு பார்த்தால் எப்படி? பிற குழந்தைகளுடன் சிரமப்பட்டேனும் பேசிப் பழகாமல் அவர்களின் தகவல் தொடர்புத் திறன், மொழி எப்படி வளரும்?

குறிப்பாக இதில் என்ன பிரச்னை உள்ளது?

சிறப்புக்குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க தனி அலுவலர்கள்(PMPK) உண்டு. இவர்கள்தான் சிறப்புக்குழந்தைகளின் உளவியல் திறன்களை கணித்து அவர்களுக்கு எந்த பாடம் தேவை என வரையறுத்து பள்ளிகளுக்கு அனுப்பும் வேலையைச் செய்கிறார்கள். மேலும் சிறப்புக்குழந்தைகளை சேர்த்தால் அவர்களுக்கென சில வசதிகளை செய்துகொடுக்க வேண்டி வரும். அரசு, இதற்காகவே சிறப்புக்குழந்தைகளை பள்ளிகளில் மறுப்பதாக தெரிகிறது.


மேலும் அரசு சிறப்புக்குழந்தைகளுக்கான கல்வி உரிமையை தன் குடிமக்களுக்கே விழிப்புணர்வு செய்ய மறுக்கிறது. பிஎம்பிகே கமிஷன் அதிகாரிகள், குழந்தைகள் படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தராமல் அவர்களைத் தடுத்து வீட்டில் படிக்க அனுப்ப முயற்சிக்கின்றனர். பலமணிநேரம் கமிஷன் வாசலில் பெற்றோர்கள் நிற்கும் அவலக் காட்சியை கஜகஸ்தானில் நீங்கள் பார்க்கலாம்.

நன்றி: மனித உரிமைகள் கண்காணிப்பகம்.  

பிரபலமான இடுகைகள்