இடுகைகள்

டிராமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செக்ஸ் குற்றவாளிகளை வேட்டையாடி பழியை மர்மநாவல் விற்கும் புத்தகடைக்காரர் மீது போடும் கொலைகாரன் யார்?

படம்
  லீக்கிங் புக்ஸ்டோர்  தாய்லாந்து டிராமா - டி டிராமா 10 எபிசோடுகள் மழைக்கு ஒழுகும் புத்தக கடை, இதை கேட்கவே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? அதேதான் தொடரின் பலமும் கூட. மொத்தம் நான்கு கல்லூரி நண்பர்கள் டிடக்‌ஷன் எனும் மர்மக்கதைகள் மட்டுமே விற்கும் புத்தக கடையில் சந்திக்கிறார்கள். இதில் முதன்மையானவர், அதாவது நாயகன் காவோ வென். இவர்தான் நால்வரில் சற்று வசதியான வீட்டுப்பிள்ளை, முன்னாள் நீதிபதியின் மகன். ஆனால் சட்டம் படிக்காமல் புத்தக கடை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார். அடுத்து, உளவியல் மருத்துவராக உள்ள நண்பர், அவரோடு ஒரே அறையில் வசிக்கும் பெண் தோழி, அவள், தன்னார்வ தொண்டுநிறுவனத்தில் வேலை செய்கிறாள். இவர்களுக்கு அடுத்து கல்லூரியில் ஜூனியராக படித்த லான் என்ற இளம்பெண். இவர் மருந்துக்கடையி்ல் வேலை செய்கிறார்.  காவோ வென்,புத்தக கடை வருமானத்தை வைத்துதான் தனது செலவுகளை சமாளிக்கிறார். மர்மநாவல் போட்டி ஒன்றில் பங்கேற்று கதை ஒன்றை எழுதி வருகிறார். தி யெல்லா டாக்சி கேப் என்பது அதன் பெயர். இதில் பரிசாக கிடைக்கும் பணத்தை வைத்து கடையில் மழைநீர் ஒழுகும் பிரச்னையை சரி செய்ய நினைக்கிறார். நண்பர்க

குற்றவாளிகளிடமிருந்து மக்களைக் காக்கும் ரகசிய ப்ரீமியம் டாக்சி குழு! டாக்சி டிரைவர் - கொரிய டிராமா

படம்
  டாக்சி டிரைவர் எஸ்பிஎஸ் தென்கொரிய டிராமா – 16 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   கொரிய நாட்டின் நீதித்துறை தவறவிட்ட சைக்கோ கொலையாளிகள், மோசமான குற்றவாளிகளை ரகசியமாக செயல்படும் அமைப்பு கடத்தி சிறைப்படுத்தி பாதுகாக்கிறது. இதை சியோல் நீதித்துறை அமைப்பு அறியும் போது என்ன ஆகிறது என்பதே கதையின் மையம். பொதுவாக நீதித்துறை எப்போதும் ஆளும் அரசின் கைப்பாவையாகவே இருக்கும். அதற்கேற்றபடி ஆட்களை உள்ளே நியமித்து எதிரிகளை அடித்து உதைத்து வளைப்பார்கள். வெளியுலகில் நல்ல பெயரை சம்பாதிக்க கொலைகளின் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதோடு, சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஆதரித்து நிதி அளித்து குற்றசெயல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்க கேட்டுக்கொள்வார்கள். தொடரில் அப்படி ப்ளூபேர்ட் பௌண்டேஷன் அமைப்பு செயல்படுகிறது. அதன் நோக்கமே, பழிவாங்குவதுதான். யாராவது ஒருவர் பழிவாங்க நினைத்து இந்த அமைப்பை தொடர்பு கொண்டால், அவர்கள் புகார்தாரரை டாக்சியில் கூட்டிக்கொண்டுபோய் புகாரை வாய்மொழியாக பதிவு செய்துகொண்டு திட்டம் வகுத்து அவரது வாழ்க்கையைக் கெடுத்தவர்களை பழிவாங்குவார்கள். இதற்காகும் செலவை புகார்தாரர் கொட