இடுகைகள்

கிழக்கு ஆப்பிரிக்கா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உணவு வேட்டையர்கள்! - நாடுகளைச் சூறையாடும் வெட்டுக்கிளிகள்

படம்
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளை வெட்டுக்கிளிகளின் கூட்டம் சூறையாடி வருகிறது. கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா ஆகிய நாடுகளை தற்போது வெட்டுக்கிளிகள் தாக்கி அங்குள்ள உணவுப்பொருட்களை அழித்து வருகின்றன.ஏற்கெனவே கடுமையான பஞ்சத்திலும், பொருளாதார தடுமாற்றத்திலும் உள்ள இந்த நாடுகள் மேலும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளன. வறட்சி நிரம்பிய பருவகாலம் வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என ஐ.நா சபை எச்சரித்தது உண்மையாகிவிட்டது. ஒருநாளில் வெட்டுக்கிளிகள் பிரான்ஸ் நாட்டு மக்கள்தொகையின் அளவுக்கான உணவை தின்று தீர்க்கின்றன. வெட்டுக்கிளியின் ஆயுள் ஐந்து மாதங்கள் என்றாலும், அதற்குள் ஓவர்டைம் வேலை பார்த்து தன் இனத்தை பெருக்குவது இவற்றின் பலம். வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த கென்ய அரசிடம் காசு கிடையாது. இதற்காக ஐ.நா சபையிடம் நிதியுதவியாக 20 லட்ச ரூபாய் கேட்டது. தற்போது இத்தொகை அறுபது லட்சரூபாயாக உயர்ந்துள்ளது. காலம் அதிகமாகும்போது அதைக் கட்டுப்படுத்துவதற்கான தொகையும் அதிகரிக்கும். வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்துவது சாதாரண காரியமல்ல. மேலும் இவற்றை கண்காணிப்பதும் கடினம். தினசரி 150 கி.மீ தூரம் பயண