இடுகைகள்

இனக்குழு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

துரோகம் செய்த இனக்குழு தலைவரை மறுபிறவி எடுத்து பழிவாங்க கிளம்பும் வீரனின் பயணம்!

படம்
  மூன் ஸ்வார்ட் எம்பரர் மாங்கா காமிக்ஸ் டிமோன் செக்டில் உள்ள ஆட்களுக்கு காசுக்கு அடிமையாக விற்கப்பட்ட வீரன், துரோகத்தால் வீழ்த்தப்பட்டு இறந்துபோகிறான். இறக்கும் கடைசி நேரத்தில் புத்த துறவி மூலம் மறுபிறவி வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி கிடைக்கும் வாய்ப்பை அவன் எப்படி பயன்படுத்தி டிமோன் செக்ட் இனக்குழு தலைவரை அழிக்கிறான் என்பதே கதை. இந்த கதை இன்னும் நிறைவடையவில்லை.  மறுபிறவியில் கூட டிமோன் செக்ட் ஆட்களிடம்தான் நாயகன் அடிமைச் சிறுவனாக இருக்கிறான். ஏற்கெனவே டிமோன் செக்ட் ஆட்கள், அடிமை சிறுவர்களை எப்படி சித்திரவதை செய்து பிறரை கொலை செய்ய பயிற்சி வழங்குவார்கள் என்பது தெரியும். எனவே, அவர்களை விஷம் வைத்து கொன்றுவிட்டு, சில பெண்களைக் காப்பாற்றி அவர்களின் மூலம் தங்குவதற்கான இனக்குழு  ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். இனக்குழுவில் நிர்வாகியின் உதவியாளராக பணிக்குச் சேர்கிறான். டிமோன் செக்டில் பயன்படுத்தும் கலைகளை நேரடியாக கற்பது சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பதால், அடிப்படையான ஆன்ம ஆற்றல் சக்தியை மட்டும் உருவாக்கிக்கொள்கிறான். அவனுக்கு மின்னல் சக்தியை அடிப்படையாக கொண்ட வூ ஜின் என்ற வீரரின் வழிகாட்டுத

தீயசக்தி வாட்களை உருவாக்கும் குருவுடன் மோதும் சீடன்! தி சீலர்

படம்
  தி சீலர் - ஜே டிராமா தி சீலர் ஜே டிராமா ராக்குட்டன் விக்கி ஆப்   நகரில் சில மனிதர்கள் திடீரென ஒரு வாளால் தாக்கப்பட்டு   வீழ்கிறார்கள். அப்படி விழுந்து   எழுந்தால கையில் வாளின் கைபிடி உள்ளது. அதை கையில் இறுக்கிப்பிடித்தால் கருப்பு நிற புகை வெளிவரும் தீயசக்தி வாள் உருவாகிறது. அதை பயன்படுத்துபவரின் உருவம் சாதாரண மக்களின் கண்களுக்கு தெரியாது. இந்த வாள், வெறுப்பை, கசப்பை, வலியை, வேதனையை செரித்து வளர்கிறது மனதில நினைத்துப் பார்க்க முடியாத கோபத்தை, வலியை, பழிவாங்கும் வெறியை வைத்திருப்பவர்கள் இந்த தீய சக்தி வாளை பயன்படுத்தி தங்கள் வாழ்வைக் கெடுத்தவர்களைக் கொல்கிறார்கள். இதை தடுப்பவன்தான் காக்கேறு எனும் நாயகன். தி சீலர் தொடரின் பெரும் பலமே வாள் சண்டைக் காட்சிகள்தான். எதிரியிடம் வாள் இருக்கும். நாயகனிடம் வாளை மூடி உறையிடுவதற்கான வாளுறை மாத்திரமே உண்டு. அதை வைத்து அவர் எப்படி சண்டையிடுகிறார், எதிரிகளை வெல்கிறார் என்பதே கதை. தீயசக்தியை அடக்கும் இனக்குழு தொன்மைக்காலத்தில் இருந்து இருக்கிறது. இவர்கள், தனி இனக்குழுவாக சமூகத்தைக் காக்க அமைதியாக இயங்கி வருகிறார்கள். காக்கேறு, தீயசக்தி வாள

மக்கள் இனக்குழுவிற்கு அதிகாரம் தேவை - மெலிசா லின் பெரல்லா, என்ஆர்டிசி

படம்
  மெலிசா லின் பெரல்லா வழக்குரைஞர், சூழல் செயல்பாட்டாளர் சூழல் நீதி என்ற விவகாரம் காலப்போக்கில் எப்படி மாறியுள்ளதாக நினைக்கிறீர்கள்? முதலில் சூழல் பணிகளை அதன் முடிவு எப்படியிருக்கும் என நினைத்து அதை சோதிப்பேன். இப்போது அதை செய்யும் முறை எப்படி இருக்கவேண்டுமென யோசித்து செய்து வருகிறேன். உள்ளூர் இனக்குழு மக்கள், அவர்களின் ஒருங்கிணைப்பாளர், தலைவர்களுக்கு உதவும்படி செயல்பாடுகளை நான் மாற்றி வருகிறேன்.  சூழல் நீதி என்பதை வருமானம் குறைந்த வறுமை நிலையிலுள்ள மக்கள் குறைந்த மாசுபாடு கொண்ட செயல்களை செய்யுமாறு சூழலை அமைத்துக்கொடுப்பதே எங்கள் பணி. இதன் மூலம் மக்கள் இனக்குழுவின் அதிகாரம் கூடும்.  என்ஆர்டிசியில் தங்களுடைய பணியை எப்படி புரிந்துகொள்கிறீர்கள்? மாசுபாட்டைக் குறைத்துக்கொள்வதோடு மட்டுமே என்ஆர்டிசி அமைப்பு நிறுத்திக்கொள்வதில்லை. அவர்கள், இனக்குழு சார்ந்த மக்களின் வேலைவாய்ப்பு வளர்ச்சி பற்றியும் யோசிக்கிறார்கள். பசுமை பரப்பை உருவாக்க மக்களுடன் சேர்ந்து உழைத்து வருகிறோம்.  சிறுவயதில் ஆசியர் என்பதற்காக கேலி, கிண்டல் செய்யப்பட்டது காரணமாகவே வழக்குரைஞர் ஆனீர்களா? நான் என்னுடைய இனம், மதம், நிறம்,

வேறுபாடுகளை இணைக்கும் இணையம்!

படம்
  உகாண்டாவின் வடக்குப்பகுதி. அங்கு உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்த காலம் கொடுமையானது. அடிக்கடி புரட்சியாளர்கள் அங்கு வந்து சிறுவர்களை கடத்திக்கொண்டு சென்று படைகளில் சேர்ப்பார்கள். டேனியல் கோமாகெச் அப்படி வீரர்கள் வரும்போது தப்பிப் பிழைத்து புதர்களில் மறைந்திருந்தவர்தான். இன்று 34 வயதாகும் அவர், தனது கல்வி தீவிரவாதம் உள்ளிட்ட எந்த விஷயங்களாலும் தடைபடாதபடி பார்த்துக்கொள்ள மெனக்கெட வேண்டியிருந்தது. இப்போது அவர், தனது கிராம மக்களுக்கு பாஸ்கோ எனும் வகையில் இணையத்தை வழங்கி வருகிறார். இணையம் எனது வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று சொல்லுகிறார் இவர்.   பாஸ்கோ எனும் இணைய முறை இப்போது ஆப்பிரிக்காவில் வளர்ந்து வரும் இணையம் மற்றும் போன் நெட்வொர்க் முறையாக வளர்ச்சி பெற்றுள்ளது.  டேனியல் இணையத்தின் வழியில் படிப்புகளை படித்து ஆன்லைனில் வேலையைப் பெற்றுள்ளார். சமையல் ரெசிப்பிகளைக் கூட கற்றுக்கொண்டு பிள்ளைகளுக்கு சமைத்துக்கொடுக்கும் அளவுக்கு அவரது வாழ்க்கை மாற்றம் பெற்றுள்ளது. இணையம் என்பது எனது ஆசிரியர் என்றே சொல்லி வருகிறார்.  மக்களின் இனக்குழுவாக ஒன்றாக சேர்ந்து இணையத்தை  நடத்துவ

உலக நாடுகளை ஆண்ட ராணிகள்! - கிரேட் கேத்தரின், முதலாம் எலிசபெத், டாய்டு பெடுல், சீன ராணி வூ ஸெட்டியான்

படம்
          கிரேட் கேத்தரின் ஜெர்மனியில் அரச குடும்பத்து இளவரசுக்கு மகளாக பிறந்தவர் கேத்தரின் . இவர் ரஷ்யா நாட்டை கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்திற்கு அழைத்து சென்றவர் என்று கூறுகிறார்கள் . சோபி அகஸ்டே என்ற பெண்மணி ஜெர்மனியில் 1729 ஆம் ஆண்டு பிறந்தவர் . இவரை பதினைந்து வயதில் ரஷ்யாவுக்கு திருமணம் செய்விக்க அழைத்தனர் . மாப்பிள்ளை பீட்டர் . மாப்பிள்ளை பெண் என இருவருமே அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் . மாப்பிள்ளையின் தாய் எலிசபெத்தான் திருமணத்திற்கான தானாவதி . 1745 ஆம் ஆண்டு பீட்டருடன் திருமணம் நடைபெற்றது . அதற்குப் பிறகுதான் சோபிக்கு கேத்தரின் என்ற பெயர் சூட்டப்பட்டது . பீட்டரும் ஜார் மன்னராக மாறினார் . ஜார் என்றால் பேரரசர் என்று பொருள் . ஜார் மன்னருடன் கேத்தரினுக்கு பிரச்னை தொடங்க , அவரை மன்னர் பதவியிலிருந்து விலக்கி கைதுசெய்து சிறையில் தள்ளினார் கேத்தரின் . பிறகு அரியணை ஏறி ராணியானார் . ரஷ்யாவின் ராணி என்றால் அழகாக இருக்கும் . அடுத்த முப்பது ஆண்டுகள் பதவியில் இருந்து ரஷ்யாவை ஆண்டார் . கேத்தரின் நாட்டில் ஏராளமான சீர்திருத்தங்களை தொடங்கினார் . அதில் முக்கியமானது கல்வ