மக்கள் இனக்குழுவிற்கு அதிகாரம் தேவை - மெலிசா லின் பெரல்லா, என்ஆர்டிசி

 






மெலிசா லின் பெரல்லா
வழக்குரைஞர், சூழல் செயல்பாட்டாளர்



சூழல் நீதி என்ற விவகாரம் காலப்போக்கில் எப்படி மாறியுள்ளதாக நினைக்கிறீர்கள்?

முதலில் சூழல் பணிகளை அதன் முடிவு எப்படியிருக்கும் என நினைத்து அதை சோதிப்பேன். இப்போது அதை செய்யும் முறை எப்படி இருக்கவேண்டுமென யோசித்து செய்து வருகிறேன். உள்ளூர் இனக்குழு மக்கள், அவர்களின் ஒருங்கிணைப்பாளர், தலைவர்களுக்கு உதவும்படி செயல்பாடுகளை நான் மாற்றி வருகிறேன். 

சூழல் நீதி என்பதை வருமானம் குறைந்த வறுமை நிலையிலுள்ள மக்கள் குறைந்த மாசுபாடு கொண்ட செயல்களை செய்யுமாறு சூழலை அமைத்துக்கொடுப்பதே எங்கள் பணி. இதன் மூலம் மக்கள் இனக்குழுவின் அதிகாரம் கூடும். 

என்ஆர்டிசியில் தங்களுடைய பணியை எப்படி புரிந்துகொள்கிறீர்கள்?

மாசுபாட்டைக் குறைத்துக்கொள்வதோடு மட்டுமே என்ஆர்டிசி அமைப்பு நிறுத்திக்கொள்வதில்லை. அவர்கள், இனக்குழு சார்ந்த மக்களின் வேலைவாய்ப்பு வளர்ச்சி பற்றியும் யோசிக்கிறார்கள். பசுமை பரப்பை உருவாக்க மக்களுடன் சேர்ந்து உழைத்து வருகிறோம். 

சிறுவயதில் ஆசியர் என்பதற்காக கேலி, கிண்டல் செய்யப்பட்டது காரணமாகவே வழக்குரைஞர் ஆனீர்களா?

நான் என்னுடைய இனம், மதம், நிறம், பாலினம்  காரணமாக வன்முறைக்கு ஆளானேன். இனக்குழு என்று வரும்போது மக்கள் எந்த அதிகாரமும் இல்லாமல் இருக்கிறார்கள். ஒருவரின் வயிற்றைப் பார்த்து குத்துவதும், மாசுபாட்டால் ஒருவரின் நுரையீரல் பாதிக்கப்படுவதும் ஒன்றுதான். 

அமெரிக்க அரசின் அதிபர் பைடன், காலநிலை மாற்றம் தொடர்பான 40 சதவீத அரசு முதலீடு பாதிக்கப்பட்ட இனக்குழுக்களுக்கு  வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால் இதில் இனம் முக்கிய விதியாக இல்லையே ?

அரசு மக்களின் இனம், நிறம், பொருளாதார நிலை சார்ந்து பல்வேறு உதவிகளை வழங்குவது அவசியம். நான் வேலை செய்யும் என்ஆர் டிசியில் கூட அந்த அதிகாரத்தை வைத்து மக்களுக்கு ஏதேனும் செய்யமுடியுமா என்று யோசித்து வருகிறேன்  


The Nation





கருத்துகள்