இடுகைகள்

தியான்மென் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொழில்நுட்பத்தில் மேற்கு நாடுகளை மிஞ்சும் சீனா! - எப்படி சாத்தியமாகிறது?

படம்
  தொழில்நுட்பத்தில் சிறந்த சீனா! சீன அரசு, தானியங்கி தொழில்நுட்பங்களை உருவாக்கி தனது நாட்டில் உற்பத்தி திறனை அதிகரித்து வருகிறது.   2010ஆம் ஆண்டு சீனாவில் தொழில்துறை சார்ந்த ரோபோக்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரமாக இருந்தது. ஆனால் இன்று அதன் எண்ணிக்கை எட்டு லட்சத்திற்கும் அதிகம். உலகில் மூன்றில் ஒரு ரோபோ என்ற கணக்கில் சீனா, உற்பத்திதிறனில் முன்னிலையில் உள்ளது. உற்பத்திதிறனை தொடர்ச்சியாக அதிகரிப்பதன் வழியாக சீனா, செல்வச்செழிப்பான நாடாக வளர்ந்து வருவதோடு பணியாளர்களின் ஊதியமும் கூடி வருகிறது.  முன்பு ஆண்டிற்கு ஆயிரம் டாலர்கள் என்றிருந்த பணியாளர்களின் ஊதியம், இன்று பத்து மடங்காக அதிகரித்துள்ளது. தானியங்கி தொழில்நுட்பங்களின் வரவால், பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து ரோபோக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீன அதிபர் ஜின் பிங், இந்த முறையில் உற்பத்தி திறனை அதிகரிக்கலாம் என்பதை அடையாளம் கொண்டு கொள்கைகளை  உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.  பொருளாதார வளர்ச்சியில் மூன்று அடிப்படைகள் உள்ளன. ஒன்று, எத்தனை பணியாளர்கள் வேலை செய்கின்றனர், முதலீடு செய்யப்பட்டுள்ள தொகை, பணியாளர்களின் உற்பத்திதிறன் எவ்வளவு