இடுகைகள்

சிக்கிம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இயற்கை வேளாண்மை பற்றிய தகவல்கள்!- அங்கீகாரம் பெற்ற மாநிலங்கள்

படம்
  இயற்கை வேளாண்மை 2021-2022 காலகட்டத்தில் இயற்கை வேளாண்மைக்கான அங்கீகாரம் பெற்ற நிலப்பரப்பு 59 லட்சம் ஹெக்டேர்களாகும்.  இந்திய மாநிலங்களில் இயற்கை வேளாண்மையில் முன்னிலை வகிக்கும் மாநிலம், மத்தியப் பிரதேசமாகும். இதற்கடுத்து மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஒடிஷா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அமைந்துள்ளன.  2016ஆம் ஆண்டு சிக்கிம் மாநிலம் தனது வேளாண் நிலப்பரப்பு முழுவதும் இயற்கை வேளாண்மைக்கென அங்கீகாரம் பெற்றுள்ளது.  இந்தியாவில் இயற்கை வேளாண்மை மூலம் உற்பத்தியான பொருட்களின் அளவு 3 கோடியே 50 லட்சம் மெட்ரிக் டன்களாக உள்ளது. இதைப்பற்றிய தகவலை வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேலாண்மை ஆணையம் (Apeda) தெரிவித்துள்ளது.  மழைப்பொழிவு கொண்ட நாடுகள், இயற்கை வேளாண்மையை செய்யும்போது அவர்களுக்கு விளைச்சல் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் தொழில்மயமான நாடுகளில் உரப் பயன்பாடு அதிகம். எனவே, அந்நாடுகள் இயற்கை வேளாண்மைக்கு மாறும்போது பயிர் உற்பத்தி குறையும் என ஐ.நாவின்  உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (UN Food and Agriculture Organization) தகவல் தெரிவித்துள்ளது.  TOI image - wallpape

சிக்கிம் மாநிலம் இந்தியாவுடன் இணைந்த வரலஙற்றை சொல்லும் நூல்! - புதிய புத்தகம் அறிமுகம்

படம்
                      பெ ஸ்ட் ஷார்ட் ஸ்டோரிஸ் எவர் டெர்ரி ஓ பிரையன் வெஸ்ட்லேண்ட் ரூ .199 உலகம் முழுக்க புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய 41 சிறுகதைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன . இதனை எழுத்தாளர் ஆசிரியர் டெர்ரி ஓ பிரையன் தொகுத்துள்ளார் . மொழிவளமும் , உணர்ச்சிகரமும் கொண்ட புதிய பாணி கதைகள் இதில் உள்ளன . எட்கர் ஆலன்போ எர்னஸ்ட் ஹெமிங்வே , சோமர்செட் மாகாம் , வர்ஜீனியா உல்ப் ஆகியோரின் கதைகள் இதில் உள்ளன . சுலை ஜான் கிரிசம் ஹாசெட் ரூ .699 17 வயது நிரம்பிய சாமுவேல் சுலைமான் தெற்கு சூடானைச் சேர்ந்தவன் . இவனுக்கு பேஸ்கட் பால் விளையாட்டில் திறமை இருக்கிறது . இவனை கவனித்த பயிற்சியாளர் அமெரிக்காவுக்கு அழைத்து செல்ல நினைக்கிறார் . அவன் அமெரிக்காவிற்கு சென்றானா , விளையாட்டில் சாதித்தானா என்பதே கதை . சிங் ஆப் லைப் பிரியா சருக்காய் வெஸ்ட்லேண்ட் ரூ .499 தாகூரின் கீதாஞ்சலி போலவே இதுவும் ஆன்மிகத்தை தேடும் முயற்சிதான் . தனக்குள் ஒருவர் கேட்டுக்கொள்ளும் கேள்விகளை உள்ளடக்கி நூல் உருவாகியுள்ளது . இந்த உலகத்தை மீண்டும் தாகூர் போல

கொரோனாவைத் தடுக்க மத்திய அரசின் உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை! - சிக்கிம் முதல்வர் பிரேம்சிங்

படம்
சிக்கிம் முதல்வர் பிரேம்சிங் தமங் பிரேம்சிங் தமங், சிக்கிம் மாநில முதல்வர் உங்கள் மாநிலத்தில் ஒருவர் கூட கோவிட் -19 நோய்தொற்றால் பாதிக்கப்படவில்லையே? சீனாவில் வைரஸ் பரவுகிறது என்ற தகவல் கிடைத்ததும் நாங்கள் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டோம். மத்திய அரசின் அறிவுறுத்தலுக்காக நாங்கள் காத்திருக்கவில்லை. பூடான், நேபாளம், சீனா பல்வேறு நாடுகளின் எல்லைகளில் நாங்கள் பயணிகளை சோதிக்க தொடங்கினோம். மார்ச் ஐந்து அன்று, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்தோம். மார்ச் 17ஆம் தேதி உள்ளூர், வெளியூர் சுற்றுலாக்களை முழுக்க நிறுத்திவிட்டோம். இதனால் தங்கும் விடுதி நடத்துபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டவர். ஆனால் விரைவிலேயே கோவிட் -19 பாதிப்பு தெரிந்து நாங்கள் சரியான நடவடிக்கை எடுத்துள்ளதாக பாராட்டினர். இந்த ஆண்டு முழுமைக்கும் எல்லைகளை திறப்பதில்லை என முடிவெடுத்துள்ளோம். சிற்சில வணிக நடவடிக்கைகளை மட்டும் அனுமதித்துள்ளோம். வடகிழக்கு மாநிலங்களில் நோய்த்தொற்று இல்லாமல் இருந்து திடீரென கூடியிருக்கிறது. இதற்கு காரணம் என்ன? எங்கள் மாநிலத்தில் உள்ள மாணவர்கள் 2 ஆயிரம் வெளியே உள்ள மாநிலங்களுக்கு படி