இடுகைகள்

அலுவலகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொய்வாகும் உடலால் ஆற்றல் இழக்கும் மனம் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  தொய்வடையும் உடலால் பலவீனமாகும் மனம் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? நாளிதழ் வேலைகள் கடுமையாகிவிட்டன . ஒருங்கிணைப்பாளரைப் பார்த்தால் ரேபீஸ் வந்த நாயைப் போலவே தெரிகிறது . குரல் அப்படித்தான் . சீப் டிசைனரே இன்று ஒருவித பதற்றத்தில் குரல் உயர்த்தி கூச்சல் போடத் தொடங்கிவிட்டார் . இப்படி வேலை செய்தால் படிப்பவர்களுக்கு எப்படி சந்தோஷம் கிடைக்கும் என்று தெரியவில்லை . எனக்கு நெருக்கடி சூழல்தான் அமைகிறது . 2022 ஆம் ஆண்டு தங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் . உங்கள் மனதில் நினைத்துள்ள ஆசைகள் நிறைவேற பிரார்த்திக்கிறேன் . தாரகை - ரா . கி . ரங்கராஜன் எழுதிய நாவலைப் படித்தேன் . 624 பக்கம் . சில நாட்கள் இடைவெளியில் தான் படிக்க முடிந்தது . வேலைச்சுமை தான் காரணம் . செரிமான பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது . பழங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும் . உடல் நலிவுற்றால் மனதும் பலவீனமாகிவிடுகிறது . புத்தாண்டில் டைரி வாங்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளேன் . போனமுறை வாங்கியதில் அதிகம் எழுதவில்லை . இனியும் எழுதுவேனா என்று தெரியவில்லை . உங்கள் பெற்றோரைக் கேட்டதாக சொல்லுங்கள் . நன்றி ! அன்பரசு 29

கணியம் சீனிவாசன் செய்த உதவி - கடிதங்கள் - கதிரவன்

படம்
  பரஸ்பர உதவி ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? இன்று மடிக்கணினியை அன்வர் என்பவரிடம் பழுது நீக்க கொடுத்தேன் . புதிதாக ஓஎஸ் பதிவாகும்போது அதில் உள்ள கோப்புகள் அழிந்துவிடும் . கணியம் சீனிவாசன் சார் செய்யும் உதவி இது . முன்னமே கூறியுள்ளது போல அவரின் தளத்திற்கு நிறைய நூல்களை இலவசமாக கொடுத்துள்ளேன் . இதில் என்னுடைய சுயநலமும் உள்ளது . பரஸ்பர சகாயம் என நினைக்கிறேன் . மூன்றாவது மாடியில் ஆட்களின் எண்ணிக்கை கூடிவிட்டது . 14 பேருக்கு 2 கழிவறை 2 குளியலறை உள்ளது . ஆட்களின் வரத்து கூடியதால் , நான் இன்டக்ஷன் ஸ்டவ்வில் சமையல் செய்வது குறைந்துவிட்டது . வயிற்றுக்கு பிரச்னை செய்யாத இடத்தில் தான் உணவு வாங்கி சாப்பிடுகிறேன் . அலர்ஜி பாதிப்பு எப்போது வெளியே வருமோ ? அன்பரசு 23.12.2021 மயிலாப்பூர் -------------------------------------------------------------------------------------------------------------- பிறரை விற்றுப்பிழைக்கும் சுயநலம் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? வேலைகள் இப்போது அதிகரித்துள்ளன . நாளிதழ் பொறுப்பாசிரியர் கட்டுரைகளை முன்கூட்டியே மென்பொருளில் பத

நண்பர்களைப் பெறுவதில் நல்லதிர்ஷ்டம் இல்லை! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  4.3.2022 மயிலாப்பூர் அன்பிற்கினிய  நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? நேற்று நான் திருவண்ணாமலை சென்றேன். அங்கு சென்று புகைப்படக்கலைஞர் வினோத் அண்ணாவைச் சந்தித்தேன். சிறிதுநேரம் பேசியிருந்துவிட்டு மதியம் 2 மணிக்கு பஸ் ஏறிவிட்டேன். பஸ் கோயம்பேடு வர 8 மணி ஆகிவிட்டது. இடையில் ஏதோ பாலம் கட்டும் வேலை நடைபெற்றது. இதனால் கிராமங்களுக்குள் போய் பஸ் வெளியே நின்று நின்று நகர்ந்தது. அறைக்கு வரும்போது மணி 9 ஆகிவிட்டது.  எங்கள் நாளிதழ் அலுவலகத்தில் கோ ஆர்டினேட்டர் தந்திரமாக அரசியல் செய்து பல்வேறு ஆட்களை காய்களை பயன்படுத்தி வருகிறார். அவரது பெயரை பத்திரிகையில் ஆசிரியர் போடவில்லை. இதற்கு என் பெயர் முன்னே இருப்பது காரணம் என பிரசாரம் செய்து வருகிறார். கூடவே, பத்திரிகையில் வேலை செய்யும் மூத்த செய்தி ஆசிரியர் பெயர் அங்கு வரவேண்டியது நியாயமாம். சக உதவி ஆசிரியர்கள் தன்னை இழுக்காதவரை எனக்கென்ன அக்கறை என கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். சீஃப் டிசைனர் கோ ஆர்டினேட்டரை தூண்டிவிட்டு தனக்கு சாதகமாக எடிட்டோரியலை வளைத்து வருகிறார். நான் வேலையை விட்டு விலகுவதே இவர்களது லட்சியம் என நினைக்கிறேன். இதற்காக வாய்ப்பு கிடைக்

ஒன்றை உயர்த்த பிறிதொன்றை தாழ்த்த வேண்டியதில்லை! - வினோத் பாலுசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  மதிப்பிற்குரிய வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமாக உள்ளீர்களா? அலர்ஜி பற்றிய நூலை மீண்டும் எழுத முயன்று வருகிறேன். சிறு புத்தகம்தான். அதிகமாக எழுத நேரமும் இல்லை ஆர்வமும் இல்லை. மார்ச் மாத இதழ் வேலைகளை ஓரளவுக்கு முடித்துவிட்டேன். எதுவுமே தெரியாத பிறவி பைத்தியங்களுடன் சேர்ந்து வேலை செய்வது கடினமாக மாறிவருகிறது. இருந்தாலும் பொருள் இருந்தால்தான் தானே அறம் செய்யமுடியும்?  எனவே, பொறுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் சொன்னபடி ரமேஷ் வைத்யா சார், அதை கஷ்டப்பட்டு எழுதியதாக சொன்னார். நன்றாக எழுதக்கூடியவர் என எனது எடிட்டர் சொல்லுவார்.  மனம் ஒன்றினால்தான் வேலை செய்வார். இல்லையெனில் கீழிறங்கி டீ குடிக்கப் போய்விடுவார்.  அம்மாவுக்கு தைராய்டு சுரப்பி வேலை செய்யவில்லை. இத்தனை தொல்லைகள் இருந்தாலும், அவள் உளவியல் பிரச்னைகளால் வேலைக்குப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தாள். இனி கட்டாய ஓய்வு எடுத்தேயாகவேண்டும். மார்ச் மாதம் தொடங்கிவிட்டது. நான் திருவண்ணாமலை வர நினைத்தேன். ஆலிவர் அண்ணாவின் நூலையும் உங்களது நூல்களையும் திரும்ப கொடுத்துவிட்டால் கடன் முடிந்தது.  உங்களது ஆபீசில் - ஸ்டூடியோவில் சிறிதுநேரம்

திருமணம் பற்றி அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள படிக்க வேண்டிய நூல்! புத்தக அறிமுகம்

படம்
                புத்தகம் புதுசு ! பியாண்ட் பேட் கிறிஸ்பே ஹாசெட் ரூ .699 அறம் என்பது நமது வாழ்க்கையில் எந்த விதமான பங்கை வகிக்கிறது , நாம் பேசுவதில் செயல்படுவதில் ஆற்றும் பங்கை இந்த நூல் விவரிக்கிறது . அலுவலக வேலை , தனிப்பட்ட வாழ்க்கை , சமூக வலைத்தளங்களில் எழுதுகிற பதிவுகள் என அனைத்திலும் அறத்தின் பங்கு உண்டு . இது ஒரு வகையில் கண்ணாடி போலத்தான் . நாம் பார்க்கிறதைவிட நம்மை நம்முடைய கருத்துகள் பிறருக்கு அடையாளம் காட்டும் நூலைப் படித்தால் நீங்கள் அதனை உணரலாம் .                  ஃபோர்த் லயன் வேணு மாதவ் , கோவிந்த் ஶ்ரீநாத் ஆலெப் ப .312 ரூ .699 எழுத்தாளர் கோபால கிருஷ்ண காந்தியின் அருமை பெருமைகளை பல்வேறு கட்டுரையாளர்கள் கட்டுரையாக எழுதியிருக்கிறார்கள் . மொத்தம் 26 கட்டுரைகள் உள்ளன . இதன்மூலம் அவரின் ஆளுமையை பல்வேறு கோணங்களில் புரிந்துகொள்ளமுடியும் . ஏஜ் ஆப் ஆங்க்சைட்டி அம்ரிதா திரிபாதி , காம்னா சிப்பர் சைமன் ஸ்ஹஸ்டர் ரூ 139 கொரோனா காலத்தில் அனைவருக்குள்ளும் வேலை , குடும்பம் , எதிர்கால

2021இல் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்ன? சூழல், அலுவலகம், கல்வி

படம்
                      202 1 சூழல் மாற்றங்கள் சூழல் கட்டிடங்கள் பயன்பாட்டிலுள்ள கட்டிடங்கள் பயன்படுத்தும் ஆற்றல் காரணமாக 30 சதவீத பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிக்கின்றன . அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரம் உணவகங்கள் தவிர பிற நிறுவனங்கள் வீடுகளில் பயன்படுத்தக்கூடாது என சட்டம் பிறப்பித்துள்ளன . இதனால் ஜூன் 2021 முதல் அனைத்து வீடுகளிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களையே பயன்படுத்த முடியும் . பிளாக்பவர் என்ற கட்டுமான நிறுவனம் , குறைவாக ஆற்றலைப் பயன்படுத்தும் வீடுகளை கட்டித்தருகிறது . இம்முறை பிற நாடுகளிலும் பிரபலமாக வாய்ப்புள்ளது . உள்ளூர் சந்தை உள்நாட்டில் விளையும் காய்கறிகளை , உள்நாட்டிலேயே சந்தைப்படுத்துவது தொடங்கப்படலாம் . பல நாடுகளில் பொதுமுடக்கம் தொடர்வதால் அங்கு சரக்குப் போக்குவரத்து தடுக்கப்பட்டுள்ளது . உள்நாட்டு விற்பனை மூலம் மக்களின் உணவுப் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்தலாம் . நோய்த்தொற்று காரணமாக நகரங்களிலிருந்து கிராமத்திற்கு திரும்பியுள்ள தொழிலாளர்களால் விவசாயத்துறை வருவாய் கூடலாம் . பசுமை முதலீடு அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம்

ஸ்டேப்ளர்ஸ் டேட்டா ரெடி!

படம்
பத்தொன்பதால் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்டேப்ளர்ஸ் இன்று இல்லாத இடம் கிடையாது. அதிலேயே ஏராளமான நிறம், வகை, பெரியது, சின்னது என அத்தனை விஷயங்களும் இருக்கிறது. முதல்முறையாக விற்பனைக்கு வந்த ஸ்டேப்ளரின் எடை 2.5 பவுண்ட்ஸ். விக்கி ஹவ் பக்கத்தில் கையில் குத்திய பின்னை எப்படி நீக்குவது என்று 3 ஸ்டெப்களில் வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் பயன்படுத்தும் ஸ்டேப்ளரின் அளவு 6 மி.மீ. ஜனவரி 2011 முதல் மார்ச் 2018 வரை அறுவை சிகிச்சையில் தவறாக பயன்படுத்தப்பட்ட, பிரச்னை எழுந்து 366 உயிர்கள் பறிபோயுள்ளன. இதற்கு காரணம் ஸ்டேப்ளர்கள்தான். ஸ்விங்லைன் கம்பெனியின் 2018 ஆம் ஆண்டு வருமானம் 194 மில்லியன் டாலர்கள். இந்த கம்பெனியின் நிறுவனர்கள் 60 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான படத்தை நியூயார்க் அருங்காட்சியகத்துக்கு அன்பளிப்பாக வழங்கினர். நன்றி: க்வார்ட்ஸ்