உண்மையை கண்டறிந்து வாழ்வதே வாழ்க்கை!
எண்ணிப் பார்க்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் ஜே கிருஷ்ணமூர்த்தி இந்த நூலில் கேள்வி பதில் வடிவில் ஏராளமான விஷயங்களை ஜே கே பகிர்ந்திருக்கிறார். அனைத்துமே புதுமையான சிந்தனைகள்தான். அவர் எதையும் உடனே நம்பு என்று கூறவில்லை. யோசியுங்கள். விசாரணை செய்யுங்கள். நீங்களே உண்மையைக் கண்டுபிடியுங்கள் என்று கூறுகிறார். நூலில் அதிகம் பேசியுள்ளது கல்வி முறைகளைப் பற்றித்தான். அதற்கு காரணம், பெரும்பாலான கேள்விகளைக் கேட்டது அவர் நடத்திவரும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள். இப்படியான கேள்விகளை அவர்கள் கேட்டிருப்பது ஆச்சரியம் தருகிறது. ஜே கே கல்வியை வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதாகவே பார்க்கிறார். தொழிலை பழகுவது, அதில் பணம் சம்பாதிப்பது, மணம் செய்துகொள்வது என்பதைப் பற்றி அவர் பெரிதாக கவலை கொள்ளவில்லை. அதைப்பற்றி அவர் விளக்கமாகவும் பேசவில்லை. காரணம், படித்து, மதிப்பெண் எடுத்து வேலையில் சேர்ந்தால் அடுத்து நடப்பது திருமணம்தான். வாழ்க்கையை விசாரணை செய்து அறிந்துகொண்டு வாழ்க்கையை நடத்தக்கூறுகிறார் ஜே கே. மற்றபடி அவர் குறிப்பிட்ட லட்சியம், நோக்கம், ஒழுங்கு என்பதில் ஆர்வம் காட்டவில்லை. இன்றைக்கு வார இதழ்களில் எழுதும...