இடுகைகள்

குழந்தை திருமணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியச் சமூகத்தில் அதிகரித்து வரும் குழந்தைத் திருமணங்கள் - கர்நாடக மாநிலம் முதலிடம்

      குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு - கர்நாடகம் முதலிடம் இப்படி தலைப்பு வைப்பது பெருமைக்குரியது அல்ல. ஆனால் குழந்தை திருமணங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது ஆபத்தான திசையை நோக்கி சமூகம் பயணிப்பதைக் காட்டுகிறது. அண்மையில் என்சிபிசிஆர் என்ற குழந்தைகளின் உரிமைக்கான அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் 2022ஆம் ஆண்டில் 215 குழந்தைத் திருமணங்கள் கர்நாடகத்தில் நடந்துள்ளதாக வழக்கு பதிவாகியுள்ளது. இதற்கடுத்து அசாம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், ஹரியாணா, ஆந்திரம், உபி, பீகார், ஜம்மு காஷ்மீர், டெல்லி ஆகிய மாநிலங்கள் வருகின்றன. இந்தியாவில் பதினெட்டு வயதுக்கு கீழுள்ள 1.5 மில்லியன் சிறுமிகள் குழந்தை திருமணம் செய்யப்படுவதாக ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன. பதினைந்து வயது முதல் பத்தொன்பது வயது வரையிலான இளையோர் பிரிவில் பதினாறு சதவீதம் பேர் குழந்தை திருமணத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுகின்றனர். குழந்தைகளுக்கு திருமணம் செய்விப்படுவது, சமூகத்தில் உள்ள பாலின பேதங்களை அடிப்படையாக கொண்டது. இந்த செயல்பாடு வழியாக அவர்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுகின்றன...

ப்ரீடெர்ம் (preterm) குழந்தைகள் இறப்பு!

படம்
                 மருத்துவம் ப்ரீடெர்ம் என்றால் என்ன? தாயின் வயிற்றிலுள்ள குழந்தை 37 வாரங்களுக்கு முன்பாகவே பிறப்பதை ப்ரீடெர்ம் என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதில் குழந்தைகள் உயிரோடு இருந்தாலும், அவர்களை பாதுகாப்பது நெடிய போராட்டமாகவே இருக்கும். குழந்தை குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாக பிறப்பது ஆபத்தானது. அதில் சில பிரிவுகள் உள்ளன. அதீதம் இருபத்தெட்டு வாரங்களுக்கு குறைவாக பிறப்பது அபாயம் இருபத்தெட்டு வாரங்களில் பிறப்பது. மத்திமம் முப்பத்தி இரண்டு அல்லது முப்பத்து ஏழு வாரங்களில் பிறப்பது இந்தியாவில் 2020ஆம் ஆண்டு கணக்குப்படி 13.4 மில்லியன் குழந்தைகள் முழுமையாக பிரசவகாலம் நிறைவு பெறுவதற்கு முன்னதாகவே பிறந்துள்ளன. அதாவது பத்தில் ஒரு குழந்தை இப்படி பிறக்கிறது. 2019ஆம் ஆண்டு மட்டும் ஒன்பது லட்சம் குழந்தைகள் முன்கூட்டியே பிறந்து பிறப்பு சிக்கல்களால் இறந்து போயுள்ளன. காரணம் என்ன? அடுத்தடுத்த கர்ப்பங்கள், குழந்தை திருமண கர்ப்பம், நோய்த்தொற்று, நீரிழிவு, ரத்த அழுத்தம், மரபணு பிரச்னைகள், மோசமான ஊட்டச்சத்து நிலை

181 - குடும்ப வன்முறையைத் தடுக்கும் அரசின் உதவிக்கரம்!

படம்
          181 - குடும்ப வன்முறையைத் தடுக்கும் அரசின் உதவிக்கரம்! இதன் செயல்பாட்டைப் பார்ப்போம். ஒருவர் உதவி தேடி 181 என்ற எண்ணுக்கு அழைத்தால், அவர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரோ அங்கு அழைப்பு திசைதிருப்பப்படும். இப்படியான மாவட்ட மையத்தை ஒன் ஸ்டாப் சென்டர் - ஓஎஸ்சி என்று அழைக்கிறார்கள். என்ன மாதிரியான பிரச்னை என்று கேட்டு, ஆள் உதவி தேவையெனில் குறிப்பிட்ட இடத்திற்கு பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இப்படி மீட்கப்படும் பெண்கள் உதவி மையத்தில் அல்லது மாநிலத்தில் உள்ள 33 பெண்கள் காப்பகத்தில் ஏதாவது ஒன்றில் சேர்க்கப்படுவார்கள். 181 என்ற எண்ணில் பெண்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளும் வழங்கப்படுகிறது. கூடுதலாக ஆலோசனை, சட்டரீதியான உதவி, ஆதரவு, கல்வி உதவிகள், காவல்துறையினரின் தலையீடு தேவையிருந்தால் அதையும் பெறுகிறார்கள். வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தன்னார்வ அமைப்புகளின் உதவிகளைப் பெற்றுத் தருகிறார்கள். 2018ஆம் ஆண்டு தொடங்கி 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 181 உதவி மையம் ஒன்பது லட்சத்திற்கும் அதிகமாக அழைப்புகளைப் பெற்றுள்ளது. பெண்களுக்கான திட்டங்கள் பற்றி அற...

இருளர் குழந்தைகளை படிக்க வைக்க அரும்பாடுபடும் ஆசிரியர்!

படம்
  கிருஷ்ணகிரியிலிருந்து அறுபது கிலோமீட்டர்களைக் கடந்தால் கேளமங்களம் கிராமத்தை அடையலாம்.இங்கு, மலை மீது அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்பது பிள்ளைகள் படிக்கிறார்கள். இங்கு ஆசிரியராக இருந்தவர், அதிக தூரம் பயணித்து வந்து மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதை சித்திரவதையாக நினைத்து பணிமாறுதல் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். இதனால், ஓராசிரியர் பள்ளியாக செயல்பட்ட தொடக்கப்பள்ளியை அப்படியே விட்டுவிட முடியாது அல்லவா? அப்படித்தான் ஓசூரிலிருந்து டி ஜான்சன் என்ற ஆசிரியர் இங்கு மாறுதல் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஆசிரியராக பொறுப்பேற்றவர், இன்றுவரை அங்கிருந்து கிளம்புவதற்கான வழியைத் தேடாதது ஆச்சரியம். பள்ளியில் படிக்கும் இருளர் குழந்தைகளுக்கு கல்வியை சிறப்பாக சொல்லித் தரவே முயன்றார். ஜான்சன், ஓசூரைச் சேர்ந்தவர். அங்கிருந்து இரு நாட்களுக்கு சோறு கட்டிக்கொண்டு பள்ளிக்கு வருகிறார். ஒருமுறை வந்துவிட்டால், பிறகு அந்த வாரம் முழுக்க ஊருக்கு செல்லமாட்டார். அங்கேயே தங்கி பாடம் கற்றுக்கொடுத்துவிட்டு வகுப்பறையில் தங்கிக் கொள்கிறார். பிறகு, வார விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று வருகிற...

உடன்கட்டை ஏறும் கொடூரத்தை ஒழித்த ராஜாராம் மோகன் ராய்!

படம்
  சதி - உடன்கட்டை ஏறும் பழக்கம் ராஜாராம் மோகன்ராய் இந்திய வரலாற்றில் ராஜாராம் அளவுக்கு எதிர்ப்பையும் வெறுப்பையும் சந்தித்தவர்கள் யாரேனும் இருப்பார்களா என்று தெரியவில்லை. அண்மையில் தெலுங்கில் வெளியாகி பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்ட ஷியாம் சிங்கா ராய் படம் கூட ராஜாராம் மோகன் ராயின் சீர்திருத்த தன்மையை தழுவி எடுக்கப்பட்டிருந்த படம்தான். பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்த சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிப்பதில் பிரிட்டிஷாரோடு சேர்ந்து முயன்றார் ராஜா.  கணவர் இறந்தபிறகு மனைவியை நெருப்பிட்டு கணவரின் தகனமேடையில் உயிரோடு எரிப்பதுதான் சதி எனும் பழக்கம். இந்த கொடூரத்தால் நிறைய பெண்கள் வாழ நினைத்தும் வேறுவழியின்றி படுகொலை செய்யப்பட்டனர். அப்போது குழந்தை திருமணமும், சாதி ஒடுக்குமுறையும் தீண்டாமையும் சமூகத்தில் புழக்கத்தில் இருந்தது. இதனை ராஜாராம் மாற்ற நினைத்து போராடினார்.  வங்காள மாகாணத்தில் 1772ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி பிறந்தவர், ராம் மோகன் ராய். இவர், ஹூக்ளியில் உள்ள ரத்னாகர் நகரில் பிறந்தார். இந்து குடும்பத்தில் பிறந்த ராய், சமஸ்கிருதம், பெர்சியன், ஆங...

பெருந்தொற்று விபரீதம்-அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்

படம்
            வறுமையால் நடைபெறும் குழந்தை திருமணங்கள் ! கொரோனா காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கிவிட்டன . இதனால் நகர்ப்புறம் கிராம ம் என வேறுபாடின்றி வறுமை தாண்டவமாடுகிறது . நகரங்களில் வறுமை காரணமாக நடைபெறும் குழந்தை திருமணங்கள் இப்போது அதிகரித்து வருகின்றன . 2019 ஆம் ஆண்டை விட 2020 ஆம் ஆண்டில் 45 சதவீதம் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளன . 2,209 குழந்தை திருமணங்கள் 2019 இல் நடந்துள்ளன . அடுத்த ஆண்டில் 3208 திருமணங்கள் நடைபெற்றுள்ளன . எதற்காக குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன ? பெருந்தொற்றால் பலருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது . வறுமை மற்றும் வேலை இழப்பால் குழந்தைகளை சுமையாக நினைக்கிறார்கள் . பள்ளி மூடப்பட்டிருப்பது மற்றொரு முக்கிய காரணம் . பெருந்தொற்றில் திருமணம் செய்வது சிக்கனமானது என பலரும் நினைக்கிறார்கள் . பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை என பெற்றோர் நினைக்கிறார்கள் . எப்படி இவர்களை காப்பாற்றுவது ? பள்ளிகளை உடனே திறப்பது முக்கியமானது . பெண் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டங்களை அறிவிப்பது ....

இளம் செயல்பாட்டாளர்களை சட்டங்கள் மூலம் அச்சுறுத்தும் மத்திய அரசு!

படம்
                இளம் செயல்பாட்டாளர்களைத் தடுக்கிறதா இந்தியா? பிரைடே பார் ப்யூச்சர் எனும் கிரேட்டா துன்பெர்க் தொடங்கிய சூழல் அமைப்பை இந்தியாவில் பெங்களூருவில் தொடங்கியவர் , திஸா ரவி . தற்போது டூல்கிட் விவகாரத்தில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் . இவரை கைது செய்வதற்கான டெல்லி போலீசார் பெட்ரோல் , டீசல் விலையையும் பொருட்படுத்தாமல் பெங்களூருவுக்கே சென்று திஸாவை கைது செய்துள்ளனர் . அப்படியேன்ன தவறை அவர் செய்தார் ? விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து டூல்கிட் எனும் போராட்ட முறைகளில் சில மாறுதல்களை செய்தார் . வாட்ஸ் அப்பில் அதனை பகிர்ந்தார் என்பதுதான் குற்றச்சாட்டு . போராடுவதற்கு என்ன பிரச்னை ? அதைக்கூட புதிய இந்தியா ஒருவருக்கு அனுமதி தராதா என்ற கேள்வி இக்கைது மூலம் எழுந்துள்ளது . இதன்மூலம் மத்திய அரசின் உளவுத்துறை வெளிப்படையாக சூழல் செயல்பாட்டாளர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை பெரியளவு பாதிப்பை ஏற்படுத்துள்ளளது . மக்களுக்காக போராடினால் உங்களுக்கும் இந்த நிலைமைதான் என்பதால் திஸா ரவியுடன் தொடர்புடைய நண்பர்கள் அனைவருமே பீதியில் ஆழ்ந்துள...