அறநெறி சார்ந்த கல்வியின் தேவை….!!!
அறநெறி சார்ந்த கல்வியின் தேவை….!!! இரா.முருகானந்தம் கல்வியளிக்கும் ஆசிரியர்கள் அறம் சார்ந்த பணியாக ஆசிரியர் பணியைக் கருதியும், கல்வி என்பது மதிப்பீடுகள் சார்ந்த வாழ்க்கை முறைக்காகப் பெறும் அறிவு என்கிற மாணவர்களின் எண்ணமும், கல்வியை ஒரு சமூக அறமாக கருத வைத்தன. நான் எனது தோழியுடன் காலச்சுவடு இதழின் நேர்காணல் ஒன்றிற்காக சுதந்திரப்போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமான கோபிசெட்டிபாளையம் ஜி.எஸ் லட்சுமண அய்யரை சந்தித்தபோது, தனக்கு ஆசிரியராக இருந்த கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளி ஆசிரியரான தமிழறிஞர் பெரியசாமி தூரன் குறித்து மிகவும் மனம் நெகிழ்ந்து பேசினார். பிறகு பெரியசாமித்தூரன் அவர்களின் பணிகளைக் குறி...