இடுகைகள்

வெனிசுலா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அகதிகளுக்கு உதவிய பிரேசில் நாடு!

படம்
வெனிசுலா நாடு கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதனால் அங்கு வாழ முடியாமல் வெளியேறும் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்காக கருணை அடிப்படையில் பல்வேறு நாடுகள் அகதிகளை தங்க வைத்து வருகின்றன. பிரேசில் நாடு, ஒரே நாளில் 21 ஆயிரம் வெனிசுலா அகதி மக்களை தன் நாட்டில் தங்க வைத்து சாதனை  செய்துள்ளது. இதற்கு முன்பு 263 பேர்களை மட்டுமே தன் நாட்டில் வாழ அனுமதித்திருந்தது. மனித உரிமை கண்காணிப்பகத்தின் பல்வேறு அறிக்கைகள் அடிப்படையில் பிரேசில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வெனிசுலாவில் போராட்டக்கார ர்கள், மக்கள், பத்திரிகையாளர்கள் மீது நிக்கோலஸ் மதுரோ அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அங்கு மக்கள் சாப்பிடவும் வழியின்றி தவித்து வருகின்றனர். காரணம், பணவீக்கம். நோய்களுக்கு சிகிச்சை தரும் அமைப்புகளும் செயலிழந்து விட்டதால், மக்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அகதிகள் மறுவாழ்வு நடவடிக்கையில் மைல்கல் என ஐ.நா அமைப்பு பிரேசில் நாட்டைப் பாராட்டியுள்ளது. இதற்கு மனித உரிமை கண்காணிப்பகம் நிறைய