இடுகைகள்

ஸ்பைவேர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு காரணம் என்ன?

படம்
  இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு அமெரிக்க வர்த்தக மையம் தாக்குதல் மட்டுமே காரணம் அல்ல. அதற்கு முன்னரே இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு இடையே முன்விரோதம் , பகை, வன்மம் என எல்லாமே உண்டு. அதனை ஊக்கப்படுத்தியது தாக்குதல் நடத்திய பத்தொன்பது தீவிரவாதிகள் என்று கூறலாம்.  கிறித்துவம், இஸ்லாம் என்ற இரு மதங்களுமே நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள். இதில் இஸ்லாமைப் பொறுத்தவரை அவர்கள் பிறரிடமிருந்து தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள். இதனை இலக்கியவாதிகள் கூட பயன்படுத்தி காபிர்களின் கதைகள் என எழுதுகிறார்கள். இதன் வழியாக அவர்கள் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறார்கள் என்று தெரியவில்லை.  புர்கா அணிவது, குல்லா அணிவது என தங்களை தனித்தே காட்டிக்கொள்ளும் இஸ்லாமியர்கள் அனைத்து நாடுகளிலும் இணக்கமான தன்மை கொண்டவர்களாக இல்லை. அமெரிக்காவில் இந்த வேறுபாடுகளை துல்லியமாக அடையாளம் காண்கிறார்கள். முஸ்லீம்களின் புனித நூலில் போர் என்பதை இயல்பானதாக ஏற்றுக்கொள்வதால், வன்முறையான குணம் கொண்டவர்கள் என முஸ்லீம்களை அடையாளப்படுத்த தொடங்கினர். 2010ஆம்ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் அமெரிக்கர்களில் பாதிப்பேர் முஸ்

போராட்டக்காரர்களை உளவுபார்க்கும் பீகாசஸ்

படம்
  இந்தியாவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், போராட்டக்காரர்கள் என பல்வேறு நபர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதாக பீகாசஸ் எனும் ஸ்பைவேரின் மீது குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.  இந்த ஸ்பைவேரை இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான என்எஸ்ஓ தயாரித்துள்ளது.  பல்வேறு நாட்டு அரசுகள் இந்த ஸ்பைவேரை தீவிரவாத த்தை தடுக்க பயன்படுத்துகின்றன என்று என்எஸ்ஓ கூறியுள்ளது.  2019ஆம் ஆண்டு வாட்ஸ் அப் நிறுவனம், தனது பயனர்கள் மட்டுமன்றி ஃபேஸ்புக் பயனர்களும் பீகாசஸ் ஸ்பைவேரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று  கூறியது.  எப்படி இன்ஸ்டால் செய்கிறார்கள்? அதுவும் புதுமையான முறையில்தான். எளிமையாக மிஸ்டுகால் ஒன்றைக் கொடுத்து அதன் வழியாக ஸ்பைவேரை ஆப்பிள், ஆண்ட்ராய்டு போன்களில் இறக்குகின்றனர். மிஸ்டுகாலுக்கு ஒருவர் தொடர்பு கொண்டாலும் சரி இல்லையென்றாலும் சரி பீகாசஸ் உள்ளே வந்துவிடும்.  பீகாசஸ் போனில் உள்ளதே அதனை பயன்படுத்துபவர்களுக்கு தெரியாது என்பது இதன் சிறப்பம்சம். தொடர்புகள், குறுஞ்செய்திகள், கேமரா, மைக்ரோபோன் என அனைத்து தகவல்களையும் பதிவு செய்து தனது முதலாளிக்கு விசுவாசமாக ஸ்பைவேர் அனுப்பிவிடுகிறது.  மூலம