இடுகைகள்

ஃபிளப்பர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆராய்ச்சிக்காக திருமணத்தைக்கூட மறந்துபோகும் கல்லூரி பேராசிரியர் - ஃபிளப்பர் - ராபின் வில்லியம்ஸ்

படம்
  ஃபிளப்பர் ஆங்கிலம் ராபின் வில்லியம்ஸ்   பிலிப் என்ற ஞாபக மறதி கொண்ட ஆராய்ச்சியாளர், ஆய்வு செய்து ஃபிளப்பர் என்ற புதிய பொருளைக் கண்டுபிடிக்கிறார். அதன் விளைவாக அவரது தொழில், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும் விளைவுகளும்தான் கதை. மேரி ஃபீல்ட் என்ற கல்லூரி நிதி இல்லாமல் தடுமாறுகிறது. அதை அதன் தலைவரான பணக்கார தொழிலதிபர் மூட நினைக்கிறார். அதைக் காப்பாற்ற அந்த கல்லூரி ஏதாவது கண்டுபிடிப்புகள் செய்து தன்னை தக்கவைக்க வேண்டும். அதேநேரம், கல்லூரி முதல்வர் சாராவின் காதலர் பிலிப் அதற்கான முயற்சியில் இருக்கிறார். பிலிப், ஞாபக மறதி கொண்ட பேராசிரியர். ஆனால் ஆராய்ச்சியில் கெட்டிக்காரர். அவரது நண்பர் , பிலிப்பின் ஆராய்ச்சியை காப்பி அடித்து… நேரடியாக சொல்லிவிடலாம். திருடி புகழ்பெற்றால் கூட அதைப்பற்றி கவலைப்படாமல் பிலிப் வேலைசெய்கிறார். ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். கிறுக்குத்தனம் கொண்ட மனிதர். ஞாபக மறதியால் தனது காதலி சாராவுடன் சர்ச்சில் நடக்கும் திருமணத்திற்கு கூட போக முடியாத நெருக்கடி. இந்த நிலையில் அவரது ஆராய்ச்சியில் உருவாகும் ஃபிளப்பர் எப்படி சொந்த வாழ்க்கை நெருக்கடிகளை தீர்த்