இடுகைகள்

ஆக்சிஜன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அவசர சிகிச்சையில் பங்குகொள்ளும் மருத்துவரின் தகுதிகள்

படம்
  மருத்துவர்களின் தகுதி தொழில் திறமை   ஆய்வு செய்யும் இடத்தில் சுத்தம் முக்கியம். மருத்துவர், செவிலியர் என அனைவருமே நேர்த்தியாக உடை அணிந்திருப்பதோடு தங்களது அடையாள அட்டையை வெளியே தெரியும்படி வைத்திருக்க வேண்டும். மருத்துவ சேவையைக் கொடுப்பதே முக்கியம். நோயைத் தெரிந்துகொள்வது முக்கியம். நோயாளியை வைத்திருக்கும் இடத்தில் மதுரை முத்துவின் ஜோக்குகளை சொல்லி சிரித்துக்கொண்டிருக்க கூடாது.   ஒருவரை காப்பாற்ற வேண்டும் என இதயத்தால் நினைத்தால் பற்றாது. மூளையும், விரல்களும் சரியாக வேலை செய்தால்தான் அவசர சிகிச்சையில் நோயாளிகளை காப்பாற்ற முடியும். நோயாளியின் நிலையைப் பற்றி உறவினர்களுக்கு கூறும்போது முடிந்தளவு அதில் கருணையான தொனி இருப்பது அவசியம். சிறந்த மருத்துவர், நல்ல மருத்துவர் என இரு வகைகள்   உண்டு. அவசர சிகிச்சையில் நீங்கள் சிறந்த மருத்துவராக இருக்கவேண்டும்.    நிதானம் முக்கியம் காரை எடுத்தவுடனே நான்காவது கியரில் ஓட்ட முடியாது அல்லவா? அதேதான். நோயாளிக்கு   தரும் சிகிச்சை பற்றி உறவினர்களிடம் சரியான வகையில் மருத்துவர் அல்லது பயிற்சி மருத்துவர் பேசி புரிய வைப்பது முக்கியம். நோயாளியை அவரின் ம

மலைப்பாம்புக்கு கிடைக்கும் ஆக்சிஜன்! - இரையைக் கொல்லும் நேரத்தில் நுரையீரலுக்கு கிடைக்கும் பிராணவாயு!

படம்
  மலைப்பாம்புக்கு கிடைக்கும் ஆக்சிஜன்! மலைப்பாம்பு இரையை சாப்பிடும் முறையை அறிந்திருப்பீர்கள். இரையை முழுக்க சுற்றி அதன் எலும்புகளை நொறுக்கி மெல்ல அதனைக் கொன்று உணவாக்கிக்கொள்கிறது. இப்படிக் கொல்லும்போது, இரையின் மீது அழுத்தம் செலுத்துவதோடு, தனது நுரையீரலுக்கும் அழுத்தம் கொடுக்கிறது. மலைப்பாம்பு  நுரையீரல் அழுத்தப்படும் நிலையில் எப்படி சுவாசிக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறியவில்லை.  மலைப்பாம்பு இரையை விழுங்கும்போது மார்பு, வயிற்றுக்கு இடையில் உள்ள உதரவிதான தசையைப் பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக நீளமான மார்பு பகுதியில் உள்ள தசைகளை சுவாசிக்க பயன்படுத்துகிறது. இரையைக் கொல்லும் செயல்பாட்டில் மலைப்பாம்பின் உடலிலுள்ள இத்தசைகள் இயங்க முடியுமா என ஆராய்ச்சியாளர்களுக்கு சந்தேகம் இருந்தது. தற்போது இதுபற்றிய ஆராய்ச்சி அறிக்கையை ப்ரௌன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஜான் கபானோ கண்டறிந்துள்ளார்.  மலைப்பாம்பு இரையை விழுங்கும்போது சுவாசிப்பதற்கான காற்றை மார்புத் தசைகளில் இறுக்கமற்றதை தனியாக அசைத்து காற்றை உள்ளிழுக்கின்றன. இப்படி இழுக்கும் காற்று இரையை சுற்றி வளைக்கும் உடல் பகுதிகளுக்கும் சீராக செல்கின்றன. “பாம்

போன்சாய் மரங்களின் இயல்பு, வாசனை உணர்த்துவது என்ன? - வினோத ரச மஞ்சரி

படம்
போன்சாய் மரங்கள், சிறு தொட்டியில் வளர்க்கும்படியானவை. இவற்றை சாதாரணமாக வளர்த்தால் பெரிய மரமாகும் வாய்ப்புண்டு. ஆனால் அதன் வளர்ச்சியை சிறு தொட்டியில் கட்டுப்படுத்துகின்றனர். போன்சாயின் வேர்கள், தொட்டிக்குள் குறிப்பிட்ட அளவு வளர்கின்றன. அவற்றின் தண்டு, கிளை ஆகியவையும் பெரிய மரங்களைப் போன்ற தன்மையில் மினியேச்சர் வடிவில் உள்ளன.  வாசனைகளை முகர்ந்ததும் அது இனிமையானதா, ஆபத்தானதா என்று நாம் யோசிப்பது நமக்கு கிடைத்த முந்தைய அனுபவங்களை வைத்துத்தான். சமையல் எரிவாயு கசியும்போது, நாம் முகரும் வாசனை மோசமானது அல்ல. ஆனால் அதை ஆபத்தானது என உடனே உணர்கிறோம்.  நாம் முகரும் வாசனை மிகவும் திடமாக இருந்தால், அதனை ஆபத்தோடு இணைத்து பார்த்து எச்சரிக்கையாவது மனித இயல்பு.  எறும்புகளுக்கு நுரையீரல் இல்லை. எறும்புகள் மட்டுமல்ல பல்வேறு பூச்சிகளும் தங்கள் உடலில் உள்ள சிறு துளைகள் மூலம் சுவாசிக்கின்றன. இதன் பெயர், ஸ்பைராகில்ஸ் (spiracles).  மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் தடைபடும்போது, நமக்கு மயக்கம் ஏற்படுகிறது. இந்த நிலைக்கு முன்னதாக பார்வை மங்குவது, குமட்டல், வியர்ப்பது ஆகிய அறிகுறிகள் ஏற்படும். மன அழுத்தம், வலி ஆகியவை ம

ஆக்சிஜன் தொழிற்சாலை- அரை ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகளை வளர்க்கும் மருத்துவர்

படம்
  விருதுநகரில் சுந்தரபாண்டியம் கிராமம் உள்ளது. இங்கு மருத்துவர் சுப்புராஜ், ஐம்பதிற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார். இதன் மூலம் கார்பனை எளிதாக ஈர்க்க முடியும் என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.  ஹைதராபாத்தைச் சேர்ந்த பேராசிரியர் மருத்துவர் சுப்புராஜ். இவர் புராஜெக்ட் ஆக்சிஜன் ஃபேக்டரி என்ற பெயரில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். பொதுமுடக்க காலத்தில் இந்த பணியைத் தொடங்கியிருக்கிறார்.இதனால் அவருக்கு நிதானமாக யோசிக்கவும் நேரம் கிடைத்திருக்கிறது. இந்த ஐடியாவை தனது நண்பர்களிடம் சொல்ல, அவர்களும் நிதியுதவி செய்ய தயாராகிவிட்டனர்.  சிறுவயதிலிருந்து விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டவர் சுப்புராஜ். இந்தியாவின் சுதந்திர தினம் 1997ஆம் ஆண்டு கொண்டாடியபோது, நாங்கள் பள்ளியில் நூறு தேக்கு மரங்களை ஊன்றி வைக்க நினைத்தோம். அப்படி தொடங்கிய முயற்சிதான்  இப்போது ஆக்சிஜன் ஃபேக்டரி செயல்பாடாக மாறியுள்ளது.  நாற்பது ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல் கிடைந்த அரை ஏக்கர் நிலத்தை மரக்கன்றுகளை நட்டு வைக்க தேர்ந்தெடுத்திருக்கிறார் சுப்பு. முழுக்க கருவேலம் மரங்கள் சூழ்ந்து கிடந்த நி

அனைத்து போக்குவரத்து வசதிகளுக்கும் ஒரே சூப்பர் ஆப்!- அசத்தும் கொச்சி - நியூஸ் ஜங்ஷன்

படம்
நியூஸ் ஜங்க்ஷன் 21.7.2021 அப்படியா! புதிய வசதி!  இன்ஸ்டாகிராமில் வன்முறை, ஆபாசம் ஆகியவற்றை தவிர்க்கும்படியான வசதிகளை நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. யாராவது ஒருவர் வெளியிடும் செய்தி, சங்கடத்தை ஏற்படுத்தும்படி இருந்தால் அதனை எக்ஸ்ப்ளோரர் எனும் டேப் மூலம் மறைத்துவிடலாம். இதன்மூலம் நாம் பார்க்க விரும்பும், விரும்பாத செய்திகளை எளிதாக தேர்ந்தெடுக்க முடியும். ”சிலர் வெளியிடும் செய்திகள் ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை அவர்கள் பார்க்காமல் தவிர்த்துக்கொள்ள முடியும். இப்படி செய்திகள் வெளியிடுவது எங்கள் விதிகளுக்கு புறம்பானது இல்லை” என இன்ஸ்டாகிராம் நிறுவனம் கூறியுள்ளது. https://techcrunch.com/2021/07/20/instagram-sensitive-content-controls-explore/ சாதனை! தொழிலதிபர் ஜெப் பெசோஸின் ஷெப்பர்ட் ராக்கெட் வானில் பறக்கும் காட்சி! இடம் அமெரிக்கா, டெக்சாஸ் அடச்சே! ஆக்சிஜன் மரணம்! இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால்  நோயாளிகள் இறந்ததாக எந்த தகவல்களும் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. டில்லி, ஹரியாணா, கோவா, தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கோவிட் -19 பாதிப்பு கூடுதலாக இருந்தது. இங்கு

சூரிய ஒளி, ஆக்சிஜன் பட்டால் மட்கிப்போகும் பிளாஸ்டிக்!

படம்
  செய்திஜாம் ஆஹா! மறுசுழற்சி! சூரிய ஒளி பட்டாலே மட்கும் வகையில் புதிய பிளாஸ்டிக் வகையை சீனாவின்  ஹூவாஸாங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில் உள்ள தனித்துவமான மூலக்கூறுகள் ஒளி, தண்ணீர் பட்டால்  உடனே ஒரே வாரத்தில் மட்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இப்படி மட்கும்போது சக்சினிக் அமிலத்தை வெளியிடுகிறது. இதனை மருந்து தயாரிப்பில் அல்லது உணவு உற்பத்தியில் பயன்படுத்தமுடியும். இந்த பிளாஸ்டிக் ஆராய்ச்சி பயன்பாட்டுக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகும்.  https://www.indiatimes.com/technology/science-and-future/plastic-sunlight-disintegration-one-week-544896.html வெள்ளத்தில் நகரம்! மழை வெள்ளத்தில் சாலைகள் மிதக்கும் காட்சி! இடம், ஜெர்மனி, பிளெஸ்ஸம் அப்படியா! பற்றாக்குறை! குஜராத் மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பதினொன்றாம் வகுப்பிற்கு தேர்ச்சியானார்கள். இதனால் அங்குள்ள 20 மாவட்டங்களில் 3000 கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படுகின்றன. பள்ளி தலைமையாசிரியர், கூடுதல் மாணவர்களை படிக்க வைக்க ஒற்றைப்படை, இரட்டைப்படை முறை, ஷிப்ட் முறை ஆகியவற்றை பின்பற்றலாம் என

அமெரிக்காவை விட உத்தரப் பிரதேசத்தில் இறப்பு சதவீதம் குறைவுதான்! - யோகி ஆதித்யநாத், முதல்வர், உத்தரப்பிரதேசம்

படம்
                    யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச முதல்வர் ஆக்சிஜன் , படுக்கை , மருந்துகள் இல்லாத காரணத்தால் மாநிலத்தில் அதிகளவு கோவிட் 19 இறப்புகள் நேர்ந்துள்ளதை ஏற்கிறீர்களா ? இந்த விவகாரத்தில் நாம் அரசியல் செய்யக்கூடாது . வளர்ந்த நாடுகளை விட பிற மாநிலங்களை விட எங்களது மாநிலத்தில் குறைவான இறப்புகளே நோய்த்தொற்றால் நடந்துள்ளன . நாங்கள்தான் முதல் மாநிலமாக ஆக்சிஜன் சப்ளையை மருத்துவமனைகளுக்கு வழங்குவதை செய்தோ்ம் . இங்கே அதிகளவு ஆக்சிஜனை தயாரிக்கும் ஆலைகள் இல்லாதபோதும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலத்தில் இருந்தும் அதனை பெற்று வழங்கினோ்ம் . இதற்கான ஆக்சிஜன் உருளை தணிக்கை முறையையும் இங்கு அமல்படுத்தியுள்ளோம் . தடுப்பூசியை பெண்களும் , கிராமத்திலுள்ளவர்களும் செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை . இவர்களை எப்படி ஊக்கப்படுத்தப் போகிறீர்கள் ? நாங்கள் மூடநம்பிக்கையை ஒழித்து விழிப்புணர்வு செய்துவருகிறோம் . எதிர்க்கட்சியினர் தடுப்பூசி பற்றிய அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றனர் . கிராமத்தில் உள்ள மக்களுக்காக ஆப்களை உருவாக்கியுள்ளோம் . மக்களுக்கு உதவ 1,33,

மாரடைப்பைத் தடுக்கும் புதிய வழிகள்!

படம்
                மாரடைப்பைத் தடுப்பது எப்படி ? மாரடைப்பைத் தடுக்க சிபிஆர் , டிபைபிரிலேட்டர் ஆகிய வசதிகளைப் பயன்படுத்துகிறார்கள் . அப்படி இல்லாமலும் நிறைய நுணுக்கங்கள் உள்ளன . கொழுப்பைத் தடுப்பது பொதுவாக ர்த்தத்தில் உள்ள கேடு தரும் எல்டிஎல் கொழுப்பு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது . இதனை தடுக்க பிசிஎஸ்கே 9 எனும் மருந்தை பயன்படுத்தலாம் . இந்த மருந்து கல்லீரலில் உள்ள புரதத்தை முடக்கி எல்டிஎல் கொழுப்பை குறைக்கும் பணியைச் செய்கிறது . அழற்சி இதயத்திலுள்ள ஆர்டரியில் ஏற்படும் அழற்சி , மாரடைப்பை தூண்டுகிறது என்பதை கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்ற ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்துள்ளனர் . கனாகிநுமாப் எனும் மருந்தை ஆய்வாளர்கள் சோதித்தனர் . 2017 இல் நடைபெற்ற சோதனையில் மாரடைப்பை இந்த மருந்து 24 சதவீதம் குறைப்பது தெரிய வந்துள்ளது தொற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்துகிற , விலையுயர்ந்த மருந்து என்பதால் இதனை பொதுபயன்பாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை . மாரடைப்பு பற்றிய ஆராய்ச்சிக்கான வாசலை இந்த மருந்து பற்றிய சோதனை திறந்து வைத்துள்ளது என்று சொல்லலாம் . மாரடைப்புக்கு

உடலை இயக்கும் ஸ்பார்க் பிளக்கைக் கொண்ட இதயத்தின் செயல்பாடு!

படம்
                  உடலே நலமா ? உடலுக்கு சக்தி கிடைக்க உணவு அவசியம் . அதோடு சுவாசிக்க காற்று முக்கியம் . இதெல்லாம் இருந்தாலும் கூட உடலெங்கும் உறுப்புகள் செயல்பட ரத்தம் உடலெங்கு் செல்வதற்கு சர்குலேட்டர் அமைப்பு உதவுகிறது . இப்படி செல்லும் ரத்தத்தில் ஆக்சிஜன் , மினரல்கள் உள்ளன . இந்த ரத்தம் தலை முதல் கால் வரை ஓடிக்கொண்டே இருக்கிறது . இதில் தடுமாற்றம் ஏற்பட்டால் உடனே பாதிப்பு ஏற்படும் . உடலின் நரம்புகள் , ஆர்டெரி , காபிலரிஸ் என அனைத்து இடங்களிலும் ரத்தம் பயணிக்கும் தொலைவு தோராயமாக பத்தாயிரம் கி . மீ . என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர் . இதய வல்லுநர்கள் பர்ஃபியூஸ் என்ற சொல்லை அதிகம் பயன்படுத்த விரும்புவார்கள் . இதுதான் சர்குலேட்டர் அமைப்பைக் குறிக்கிறது . இதில்தான் ரத்தம் அனைத்து உறுப்புகளுக்கும் சென்று வருகிறது . இதன்மூலம்தான் சத்துகள் உறுப்புகளுக்கு சென்றுசேர்வதோடு , உடலுக்கு தேவையான ஹார்மோன்கள் சரியாக சுரப்பதையும் உறுதி செய்கிறது . செல்களுக்கு ஆபத்து ஏற்படுத்து்ம் கழிவுப் பொருட்களை அகற்றுவதோடு , கார்பன் டை ஆக்சைடையும் உடலிலிருந்து வெளியேற்றுகிறது . உடல் வெப்பநிலையை பர

கிழிந்து தொங்கும் சுயசார்பு இந்தியா திட்டம்!- ஆக்சிஜன் கொடுப்பது எப்படி?

படம்
                ஆத்மா நிர்பாரத மிஷன் கடந்த ஆண்டு மே 12 இல் பிரதமர் மோடி , ஐந்து அம்சங்களைச் சொல்லி ஆத்மாநிர்பாரத திட்டத்தை அறிமுகப்படுத்தினார் . உலகம் நமக்கு கற்றுத்தந்துள்ள பாடங்களில் சுயசார்பும் ஒன்று . இதனை ஈஷாபந்தா என்ற நூலில் கூட கூறியிருக்கிறார்கள் . தன்னிறைவு பெற்ற இந்தியா என்பது அதுதான் என பேசினார் . அதற்குப்பிறகு மத்திய அரசு அறிவிக்கும் நிதிசார்ந்த திட்டங்களுக்கு சுயசார்பு , தன்னிறைவு ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன . அக்டோபர் , நவம்பரில் மானியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன . பிறகு கொரோனா பாதிப்பு ஒருநாளுக்கு மூன்றரை லட்சம் பேரை பாதித்தவுடனே ஆத்மாநிர்பார் கோஷங்கள் தடுமாறத் தொடங்கின . உடனே இந்திய அரசு தனது சொந்த நாட்டு பெருமைகளை ஒரம்கட்டிவிட்டு அமெரிக்க வழங்கிய நூறு மில்லியன் டாலர்கள் மதிப்பிலான உதவிகளைப் பெற்றது . இதில் ஆயிரம் சிலிண்டர்கள் , 15 மில்லியன் என் 15 மாஸ்குகள் , ஒரு மில்லியன் சோதனைக் கருவிகள் உள்ளடக்கம் . இருபது முதல் முப்பது மில்லியன் தடுப்பூசிகள் ஆஸ்ட்ராஜெனகாவும் அடங்கும் . இதோடு சீனாவும் இந்தியாவுக்கு பல்வேறு உதவிகளை வழங்க முன்வந்தது . எல்லை

உயிரினங்கள் வாழ முக்கியமான சூழல்கள் என்ன?

படம்
                    உயிரினங்கள் வாழ முக்கியமான சூழல்கள் என்ன ? உலகில் 8.7 மில்லியன் உயிரினங்கள் பல்வேறு விதமான சூழல்களில் வாழ்ந்து வருகின்றன . உலகில் உயிரினங்கள் தாக்குப்பிடித்து வாழ்வதற்கான முக்கியமான காரணங்கள் என்னவென்று தெரியுமா ? உணவு , நீர் , இருப்பிடம் , வெப்பநிலை , வெளிச்சம் . வெப்பநிலை என்பது அடிக்கடி மாறினால் உயிரினங்கள் வாழ்வது சிக்கலாகிவிடும் . ஆனால் இதெல்லாம் தாண்டி இருட் படர்ந்த குகைகளில் உயிரினங்கள் வாழ்கின்றன . காற்று சுற்றுப்புறத்திலுள்ள காற்று முக்கியமானது . இதனை உயிரினங்கள் சுவாசித்துத்தான் உணவு ஆற்றலாக மாற்றப்படுகிறது . இதனை ரெஸ்பிரேஷன் என்று குறிப்பிடுகின்றனர் . வெப்பம் இதனை ஒளி , வெப்பம் என இருவகையில் கூறலாம் . குறிப்பிட்ட வெப்பநிலை அப்படியே தொடரவேண்டும் . அப்படி இல்லாதபோது உயிரினங்கள் வாழ்க்கை நிலையாக தொடர்வது கடினம் . இருப்பிடம் இருப்பிடம் என்பது உயிரினங்கள் ஓய்வெடுப்பதற்கும் , பிற எதிரி விலங்குகளிடமிருந்து ஓய்வெடுக்கவும்தான் . இப்படி இடம் இல்லாதபோது , உயிரினங்கள் எளிதாக வேட்டையாடப்பட வாய்ப்புள்ளது . உணவு

தெரிஞ்சுக்கோ - தனிமவரிசை அட்டவணை!

படம்
உலகில் பல்வேறு பொருட்களுக்கும் அடிப்படையான விஷயங்கள் என்ன? இந்து மதத்தில் பஞ்சபூதங்கள்தான் அனைத்துக்கும் அடிப்படை என்பார்கள். அதனை கிரேக்க ஆராய்ச்சியாளர்களும் கூட நம்பினார்கள். நிலம், நீர்,காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவைதான் அவை. இவற்றை உருவாக்க தேவையான பொருட்களும் உண்டுதானே? அவை இயற்கையில் பல்வேறு பொருட்களின் பகுதிப் பொருட்களாக உள்ளன. அவற்றைக் கண்டுபிடித்து வரிசைப்படுத்தி உள்ளனர். அவற்றைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம். 1869ஆம் ஆண்டு டிமிட்ரி மெண்டலீஃப் தனிம வரிசை அட்டவணையை உருவாக்கியபோது அதில் இருந்த தனிமங்களின் எண்ணிக்கை 63. இன்று அந்த எண்ணிக்கை 118ஆக அதிகரித்துள்ளது. இதில் உள்ள தனிமங்களில் 94 தனிமங்கள் இயற்கையாகவே பூமியில் கிடைக்கின்றன. தனிம வரிசை அட்டவணையில் மனிதர்கள் உருவாக்கிய தனிமங்களாக 24 உள்ளன. அட்டவணையில் உள்ள 30க்கும் மேற்பட்ட தனிமங்கள் மனிதர்களின் உடலிலேயே உள்ளன. ஸ்மார்போனில் 70க்கும் மேற்பட்ட தனிமங்கள் உள்ளன. உலகில் 75 சதவீத ஹைட்ரஜன் நிறைந்துள்ளது. நன்றி - க்வார்ட்ஸ்

செடிகளை பெட்ரூமில் வைத்து வளர்க்கலாமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி தாவரங்களை படுக்கையறையில் வைத்து வளர்க்கலாமா? எந்த தவறும் இல்லை. சிலர் இரவில் கார்பன் டை ஆக்சைடை செடிகள் வெளியேற்றும். இதனால் நமக்கு மூச்சு திணறல் ஏற்படும் என்பார்கள். ஆனால் அது எல்லாம் ஆதாரமில்லாத உளறல்கள் என ஒதுக்கிவிடுங்கள். மின்விளக்கை அணைத்து விட்டால் ஒளிச்சேர்க்கைக்கான விஷயம் செடியில் நடைபெறாது.அப்புறம் என்ன கவலை? முக்கியமாக உங்கள் தூக்கம் கெடாது. நன்றி - பிபிசி

அரசியல் தெரியாது. மலையேற்றம்தான் தெரியும்!

படம்
உடலின் சக்தியை உலகிற்கு காட்ட நினைத்தேன் ஆறு மாதங்களில் பதினான்க ஆபத்தான மலைப்பகுதிகளில் ஏறி உலக சாதனை படைத்திருக்கிறார் நேபாளத்தின் கூர்கா இனத்தவரான நிர்மல் புர்ஜா. இந்த சாதனை படைத்தபின் அவர் தரும் நேர்காணல் இது. கடந்த எட்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டின் ஆறு மாதங்களில் நீங்கள் செய்த சாதனை முக்கியமானது. விரைவில் எவரெஸ்ட், லோட்சே ஆகிய மலைகளிலும் ஏறுவீர்கள் என நம்புகிறோம். 48 மணிநேரத்தில் மக்காலு மலைப்பகுதியில் ஏறினேன். பாகிஸ்தானிலுள்ள 8 ஆயிரம் மீட்டருக்கும் அதிகமான மலைப்பகுதிகளிபல் 23 நாட்களில் ஏறியுள்ளேன். என்னுடைய நோக்கம் உலக சாதனை படைப்பது அல்ல. மனிதனின் உடல் பல்வேறு சூழல்களுக்கும் தாக்குபிடிப்பது என்பதை உலகிற்கு காட்டவேண்டும் என்பதே. ரெய்ன்ஹோல்டு மெஸ்னர், 8 ஆயிரம் மீட்டர் உயரத்தை பதினாறு வயதில் அடைந்தார். அன்றைய காலத்தை ஒப்பிடும்போது இன்று தொழில்நுட்ப வசதிகள் முன்னேறியிருக்கிறதுதானே? தொழில்நுட்ப வசதிகள் முன்னேறியிருக்கிறது. அதேசமயம் மனிதர்களின் மனதில் எதிர்மறை எண்ணங்கள், விமர்சனங்கள் கூடியிருக்கின்றன. நான் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. மலையேற்றத்திற்கு நிறைய ப

கொட்டாவி விட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி கொட்டாவி விட்டால் நாம் அதிகம் சோர்ந்துவிட்டோம் அல்லது செய்யும் விஷயத்தில் சலிப்புற்று விட்டோம் என்று பொருளா? என்னைக்கூட ஆபீசில் குறிப்பிட்ட ஆளின் கட்டுரையை திருத்துகிறீர்களா என்று கிண்டல் செய்வார்கள். என்ன செய்வது? உண்மையைச் சொன்னால் பகையாகிவிடும். அப்படியே அடுத்த கொட்டாவியை அவர்களுக்கு பதிலாக விட்டு சமாளிப்பேன். பொதுவாக கொட்டாவி விடுவதை உடலுக்கு குறிப்பாக மூளைக்கு ஆக்சிஜன் தேவை என்று கூறுவார்கள். ஆனால் இதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடையாது. பொதுவாக சூடான சூழ்நிலையில் மூளையின் வெப்பநிலை 0.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்தாலே கொட்டாவி வரும் என கண்டுபிடித்திருக்கிறார்கள். எனவே உடலுக்கு பொருத்தமில்லாத சூழ்நிலையில் வெப்பத்தில் இருக்கும்போது கொட்டாவி நிறைய வரும். நன்றி - பிபிசி