இடுகைகள்

நடத்தை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கார்ல் ஜங்கின் தனித்துவமான உளவியல் ஆய்வுகள்!

படம்
  கார்ல் ஜங் ஃப்ராய்டின் மனப்பகுப்பாய்வு கொள்கைகளை உலகம் முழுக்க கொண்டு சென்றவர். ஸ்விட்சர்லாந்து நாட்டில் கல்விக்கு புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தார். அம்மாவுக்கு நெருக்கமான பிள்ளை, அம்மா, மன அழுத்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு அதனால் பிரச்னைகளுக்கு ஆளாகியிருந்தார். ஐரோப்பிய மொழிகளை கற்றவர் தொன்மையான சமஸ்கிருதம் கூட கற்றுக்கொண்ட திறமைசாலி. எம்மா ராசென்பாக் என்ற பெண்மணியை மணந்தவருக்கு ஐந்து பிள்ளைகள் பிறந்தனர்.  உளவியலில் பயிற்சி பெற்று வந்தவர், 1907ஆம் ஆண்டு உளவியலாளர் சிக்மண்ட் ஃப்ராய்டை சந்தித்தார். பிறகு அவருடன் இணைந்து மனப்பகுப்பாய்வு கொள்கைகளில் ஆய்வு செய்து வந்தார். பின்னாளில் அவரின் கொள்கைகளில் வேறுபாடு தோன்ற, பிறகு இருவரும் சந்தித்துக்கொள்ளவே இல்லை. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, இந்தியா என பல்வேறு நாடுகளில் சுற்றி அந்நாட்டின் தொல்குடிகளோடு உரையாடினர். அந்த காலகட்டத்தில் மானுடவியல், அகழாய்வு ஆகியவற்றில் அதீத ஆர்வம் கொண்டு இயங்கினார். 1935இல் ஜூரிச் பல்கலையில் பேராசிரியராக இருந்தவர், பின்னர் ஆராய்ச்சி செய்வதற்காக வேலையை விட்டு விலகினார்.  கார்ல் ஜங், உளவியல், மானுடவியல்,ஆன்மிகம் என

குற்றத்தைக் கண்டுபிடிக்க உதவும் உளவியல்!

படம்
  கொலை நடந்துவிட்டது என்றால் அதைக் கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் அரும்பாடு படுவார்கள். பல்வேறு துறைகளிலுள்ள திறன்களையும் அவர்கள் கொண்டிருந்தால் அல்லது நிபுணர்களின் துணை இருந்தால்தான் அவர்களால் உண்மையை அறிய முடியும். மானுடவியல், பொருளாதாரம், மருத்துவம், தத்துவம், உளவியல், சமூகவியல் என பல்வேறு துறைகளிலும் துப்பறிவாளர்கள் திறமை பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் வழக்கிலுள்ள இயல்புகளை அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போகவும் அதிக வாய்ப்புள்ளது. குற்றங்களை ஆராய்ந்து அதனை துப்பு துலக்குவதில் முக்கியமான துறை, குற்றவியலாகும். இதிலும் கொலை, அதன் காரணம், ஆகியவற்றை கோட்பாடாக உருவாக்கி பிறகுதான் அதன் பின்னாலுள்ள உண்மையை அறிய முடியும். இதில் சில மாற்றுக்கருத்துகளும் உள்ளன. அதாவது, குற்றவியல் துறை அதன் சிறப்புத்தன்மைகளுக்காக சமூகவியலைச் சார்ந்துதான் இருக்கிறது என கூறி வந்தனர். ஆய்வாளர்கள் வோல்ஃப் கேங், ஃபெராகுடி ஆகியோர்,   1967ஆம் ஆண்டு, குற்றவியல் துறை அதன் கோட்பாடுகள், நுட்பங்களால் பிற துறைகளிலிருந்து வேறுபட்டு இயங்கும் தன்மையுடையது என கூறினர். குற்றங்களை முழுக்கவே உளவியல் சார்ந்து விளக்கிவிட முடிய

ஏடிஹெச்டியைக் கண்டுபிடித்த நான்காம் வகுப்பு ஆசிரியர்!

படம்
  கனடாவின் ஒன்டாரியோவில் உள்ளது பிராம்டன் நகரம். அங்குள்ள பள்ளி ஒன்றில் சத்னம் சிங் படித்து வந்தான். அவன் எப்போதும் போல வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்று வந்தாலும் மதிப்பெண்கள் என்னமோ சி, டி என அடுத்தடுத்து தரத்தின் அளவுகோல் குறைந்துகொண்டே வந்தது. அதையெல்லாம் விட முக்கியமான பிரச்னை பள்ளியிலிருந்து வந்துகொண்டே இருக்கும் புகார்களின் அழைப்புதான். பாடங்களை கவனிக்க மாட்டேன்கிறான், சண்டை போடுகிறான், பேச மாட்டேன்கிறான் என வகுப்பிற்கு வரும் ஆசிரியர்கள் அனைவரும் மறக்காமல் சத்னம் சிங்கை குறைசொல்லாமல் வகுப்பை நிறைவு செய்யவில்லை.  இதில் ஒரே ஆசிரியர் மட்டும் சத்னம் சிங்கின் பிரச்னையை வேறுமாதிரி பார்த்தார். அவர்தான், அவனுக்கு இருந்த சிக்கலை கண்டுபிடித்து பெற்றோருக்கு சொன்னார். ஆம். சத்னத்திற்கு ஏடிஹெச்டி குறைபாடு இருந்தது. இந்த குறைபாடு உள்ளவர்களை ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார வைக்க முடியாது. உட்கார வைத்தாலும் பேசுவதை கட்டுப்படுத்த முடியாது. அப்படி கட்டுப்படுத்தினாலும் அது போரின் தொடக்கமாகவே இருக்கும். பரபரவென ஏதாவது செய்துகொண்டே இருப்பார்கள். மேலும் அடிக்கடி மூர்க்கமாக சண்டையும் போடுவார்கள். இதெல்லா