குற்றத்தைக் கண்டுபிடிக்க உதவும் உளவியல்!

 










கொலை நடந்துவிட்டது என்றால் அதைக் கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் அரும்பாடு படுவார்கள். பல்வேறு துறைகளிலுள்ள திறன்களையும் அவர்கள் கொண்டிருந்தால் அல்லது நிபுணர்களின் துணை இருந்தால்தான் அவர்களால் உண்மையை அறிய முடியும்.

மானுடவியல், பொருளாதாரம், மருத்துவம், தத்துவம், உளவியல், சமூகவியல் என பல்வேறு துறைகளிலும் துப்பறிவாளர்கள் திறமை பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் வழக்கிலுள்ள இயல்புகளை அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போகவும் அதிக வாய்ப்புள்ளது. குற்றங்களை ஆராய்ந்து அதனை துப்பு துலக்குவதில் முக்கியமான துறை, குற்றவியலாகும். இதிலும் கொலை, அதன் காரணம், ஆகியவற்றை கோட்பாடாக உருவாக்கி பிறகுதான் அதன் பின்னாலுள்ள உண்மையை அறிய முடியும். இதில் சில மாற்றுக்கருத்துகளும் உள்ளன. அதாவது, குற்றவியல் துறை அதன் சிறப்புத்தன்மைகளுக்காக சமூகவியலைச் சார்ந்துதான் இருக்கிறது என கூறி வந்தனர். ஆய்வாளர்கள் வோல்ஃப் கேங், ஃபெராகுடி ஆகியோர்,  1967ஆம் ஆண்டு, குற்றவியல் துறை அதன் கோட்பாடுகள், நுட்பங்களால் பிற துறைகளிலிருந்து வேறுபட்டு இயங்கும் தன்மையுடையது என கூறினர்.

குற்றங்களை முழுக்கவே உளவியல் சார்ந்து விளக்கிவிட முடியாது. குற்றவியல் துறையின் தகவல்கள், நுட்பங்கள், கோட்பாடுகளுக்கு உளவியல் முக்கியமான  அளவியல் பங்காற்றமுடியும். ஒருவர் குழுவாக அல்லது தனியாக குற்றங்களை செய்தாரா என்பதை ஆராய்ந்து கூறுவது, தனிநபர் செய்யும் குற்றங்களை எப்படி பார்ப்பது, அவரை எப்படி எதிர்கொள்வது ஆகிய இருகேள்விகளும் முக்கியமானவை.

 உளவியலில் இப்படி கேட்கப்படும் அத்தனை கேள்விகளுக்கும் பதில் இருக்கிறதா என்றால் இல்லை. ஆனால் குற்றவியல் துறையில் உருவாகும் பல்வேறு கேள்விகளுக்கு அதன் துணைகொண்டு பதில்களைக் கண்டறியலாம்.

சைக்காலஜி என்றால் என்ன?

எளிமையாக கூறினால் மனிதர்களைப் படிப்பது. அதுதான் அர்த்தமா என்று தேடினால் கோல்மன், அட்கின்சன், பெர்ரிமேன், ராட்ஃபோர்ட், கோவியர் என பல்வேறு ஆய்வாளர்களின் கருத்துகளையும் நீங்கள் ஆராய்ந்துகொண்டு ஒரு முடிவிற்கு வந்து சேரலாம். ஆராய்ச்சியில் இதற்காக நேரம் செலவிடப்படுவது நியாயமானதுதான். ஒருவரின் நினைவுகள், யோசிப்புத் திறன், கற்றல், புத்திசாலித்தனம், புதுமைத்திறன், ஆளுமை என பல்வேறு விஷயங்களைப் பற்றி கற்பதுதான் சைக்காலஜி.  

இதில் நிறைய பிரிவுகள் உள்ளன.

குழந்தை முதல் மனிதனின் முதுமை வரையில் ஒருவரை ஆய்வு செய்வது டெவலப்மெண்ட் சைக்காலஜி. சைக்கோபாத்தாலஜி, அப்நார்மல் சைக்காலஜி என்பதற்கு மனிதரின் பதற்றம், மன அழுத்தம், ஸிஸோபெரெனியா ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்வது. மக்களிடையே பேசி ஆய்வு செய்வது சோசியல் சைக்காலஜி. சைக்கோபிசியாலஜி என்றால் ஒருவரின் பழக்கம், மூளையின் இயக்கம் ஆகியவற்றை தொடர்புபடுத்தி ஆராய்வது…

எஜூகேஷனல் சைக்காலஜி என்பது கல்வி முறையாக உளவியலை பிறருக்கு கற்றுத் தருவது, ஆக்குஃபேஷனல் சைக்காலஜி என்பது, வணிகம், அமைப்பு ஆகியவற்றில் உள்ள கடைபிடிக்கும் உளவியல் முறைகளைப் பற்றி விளக்குவது, கிளினிகல் சைக்காலஜி என்பது, மனநிலை குறைபாடுகளை ஆராய்வதின் நீட்சிதான். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை, ஆலோசனை கொடுப்பது இதில் சேரும்.  

இந்த வகையில் உளவியல் பற்றி தெளிவை ஏற்படுத்தும் இரு நூல்கள் உள்ளன. அவை, தி சயின்ஸ் ஆஃப் மென்டல் லைஃப், - ஜார்ஜ் மில்லர் -1962, சயின்ஸ் அண்ட் ஹியூமன் பிஹேவியர் – பிஎஃப் ஸ்கின்னர் – 1953 ஆகிய இரு நூல்களும் நீங்கள் வாசிக்கலாம். ஆய்வு நோக்கில் உளவியலின் இயல்பு என்ன என்பதை அறியலாம்.  மனம், ஆளுமை என இரண்டு தன்மைகளுக்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றியும் உளவியலாளர்கள் கூறியிருக்கிறார்ளகள். மனதின் ஆற்றல், சைக்கோடைனமிக் அழுத்தங்கள் மனிதர்களை வழிநடத்துகிறது என உளவியல் ஆய்வாளர்  ஃபிராய்ட் கூறியிருக்கிறார்.

 


கருத்துகள்