திட்டமிடாமலேயே குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் சைக்கோபாத்கள் - காரணம் என்ன?

 
 


சைக்கோபாத்கள் எப்படி உருவாகிறர்கள் என்று பார்த்தால் இன்னும் அதற்கான விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வறுமை, வளரும் சூழல் என்று பார்த்தாலும் அதிலுமும்முழுமையான திருப்தியான வரையறை கிடைக்கவில்லை.  மரபணு சார்ந்து யோசித்தாலும் அதிலும் விடை இல்லை. ஆனால் இரண்டுமே ஏதோ ஒருவகையில் சைக்கோபாத் விஷயத்தில் பங்களிக்கிறது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. சைக்கோபாத்கள் குற்றங்களை செய்தாலும் கூட மணவாழ்க்கை அடிப்படையில் கவனமாக இருப்பவர்கள்தான். விலக்கப்பட்ட கனிகள் சுவையுடையவை என எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் சொல்வது போல, சைக்கோபாத்கள் மீது காதல் கொண்டு ஈர்ப்பு கொண்டு மணம் செய்துகொள்ளும் பெண்கள் பலருண்டு. இவர்களைப் பயன்படுத்திக் கொண்டு கழற்றிவிட்டு செல்லும் ஆட்கள் நிறையப் பேர் உண்டு.  இதனால் குழந்தைகளுக்கு குறைவேதும் கிடையாது. இப்படி வளருபவர்கள் பின்னாளில் என்னவாகிறார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி.

இதுபோல ஒரு குற்றவாளியின் கதையைப் பார்ப்போம்.  இந்த குற்றவாளி, இசைக்கலைஞர்களை அறிமுகம் செய்துகொண்டிருந்தார். எனவே, அவர்களுடன் இருந்த தொடர்பை பயன்படுத்தி அடுத்த தலைமுறை இசைக்கலைஞர்களாக ஆக முயன்ற பெண்களை வசப்படுத்த தொடங்கினார். இதற்கு பொய், மாற்றிப் பேசுதல் என பல்வேறு விஷயங்களைப் பயன்படுத்தினார். இதன் காரணமாக பெண்களும் குற்றவாளியை பெரிதாக குறை சொல்லவில்லை. திருமணம் செய்தபிறகு நடக்க வேண்டியவை நடந்தன. கர்ப்பமானபிறகு குற்றவாளி அங்கு இருந்து உடனே ஜூட் விட்டார். குழந்தைகள் பற்றி  கவலையில்லையா என்று கேட்டபோது,.. அவர்களைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது. அவர்கள் குழந்தைகள் அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு கடந்துவிட்டார்.

டெர்ரி என்ற இளைஞரின் கதை மேற்சொன்னதைப் போன்றதே. போதைப்பொருட்களைப் பயன்படுத்தியது, வங்கிகளை கொள்ளையடித்தது ஆகிய குற்றங்களுக்காக சிறையில் இருந்தார். இதற்கு முன்னர் அவரை பல்வேறு குற்றங்களுக்கு மீட்க பெற்றோர் தங்கள் செல்வாக்கை, பணத்தை பயன்படுத்தியிருந்தனர். அதனால் அந்த முறையும் அவர்கள் தன்னை மீட்பார்கள் என நினைத்திருந்தார் டெர்ரி. இவரின் மூத்த சகோதரர் மருத்துவராக இருந்தார். புகழுக்கும் பணத்திற்கும் குறைவில்லாதவர். டெர்ரியின் இளைய சகோதரர் கல்வி உதவித்தொகை பெற்று படித்து வந்த கல்லூரி மாணவர். பெற்றோர் வசதியும் செல்வாக்கும் பெற்றவர்கள். ஆனால் டெர்ரி மட்டுமே வழிகேடு அடைந்த பிள்ளையாக மாறிப்போனார்.  

போதைமருந்து பயன்படுத்துவது, சூதாடுவது என வாழ்ந்தார். பிறகு பெற்றோர் அவருக்கு பணம் கொடுப்பதை நிறுத்தியபோது, வங்கிகளை கொள்ளையடிக்க முயன்றார். மேலும் இதையெல்லாம் செய்தபோது அவருக்கு இருபது வயதிற்குள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருபது வயதிலேயே ஒரு பெண்ணைக் காதலித்து அவருக்கு இரு குழந்தைகள் பிறந்துவிட்டனர் என்றால் அடுத்த தலைமுறை மீது எந்தளவு அக்கறையுடன டெர்ரி இருந்திருக்கிறார் பார்த்துக்கொள்ளுங்கள்.

   இந்த குழந்தைகள் பற்றி கேட்டபோது,  அனேகமாக அந்த குழந்தைகளை தத்து கொடுத்துவிடுவார்கள் என நினைக்கிறேன். எனக்கெப்படி தெரியும் என கோபமாக பேசினார்.

இயற்கையாக குழந்தைகள் பிறக்க வாய்ப்பில்லை. ஆனால் சைக்கோபாத்கள் தங்கள் குழந்தைகளை பிறக்க வைக்க பெண்களை பல்வேறு பொய்களை சொல்லி ஏமாற்றுகிறார்கள் என்பதே உண்மை. இந்த வகையில் சைக்கோபாத்களின் மரபணு எப்போதும் உயிரோடு இருக்கிறது. இதைப்பற்றி சைக்கோபாத் ஒரு வர், எனக்கு செக்ஸ் வைத்துக்கொள்வது பிடிக்கும் என்று சொன்னார். சைக்கோபாத்கள் என்பதுதான் முக்கியம். இதில் பாலின பேதம் ஏதும் கிடையாது. பெண்களும் ஏராளமான ஆண்களோடு உடலுறவு கொள்வதுண்டு.  சைக்கோபாத் பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களை வளர்ப்பதில் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை. புறக்கணிக்கிறார்கள். சிலசமயங்களில் சைக்கோபாத் பெண்களின் ஆண் ஜோடிகளால்,  குழந்தைகள் அடித்து உதைக்கப்பட்டு வல்லுறவு செய்யப்படுவதுமுண்டு. இப்படி ஒருமுறை நடந்தபோது, நீங்கள் தடுக்கவில்லையா என உளவியலாளர்கள் கேட்டதற்கு, அந்த குழந்தை இருந்தாலும் அடுத்த குழந்தை இருக்கிறாளே அப்புறம் என்ன என்று திடுக்கிடும் கேள்வியை வீசினார் சைக்கோபாத் பெண்மணி. அப்புறம் பேச என்ன இருக்கிறது?

குழந்தைகளை வளர்க்க பிடிக்கவில்லை. அப்புறம் ஏன் பெற்றுக்கொள்கிறார்கள் என்றால், எனக்கு குழந்தைகள் பிடிக்கும் என ஒற்றை வார்த்தை பதிலை சொல்லுகிறார்கள். ஆனால் இப்படி கூறுவது பெண்களின் குணத்தைப் பொறுத்து மாறும். சிலர் குழந்தைகளைப் பெற்றாலும் கூட அவர்களை தாங்களே தாக்கவும், கொல்லவும் முயன்ற, முயல்கிற காட்சிகளை, சம்பவங்களை உளவியலாளர்கள் அறிந்திருக்கிறார்கள்.

படம் - நிலோஃபெர் சுலைமான் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை