இடுகைகள்

அன்னதானம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குணச்சித்திரம் - இரு திருடர்கள்

படம்
  இரு திருடர்கள்.  எங்கள் தெருவில் இரு திருடர்கள் இருக்கிறார்கள். இந்த இரு திருடர்களும் ஒருவரையொருர் நன்றாக அறிவார்கள். இருவரும் பெண்கள். இவர்களின்  கணவன்மார்கள் சகோதர்கள். சொத்துக்களை தனியாக வைத்துக்கொண்டு குடித்தனம் செய்கிறார்கள். பெரிதாக இருவருக்கும் இடையே நட்பும் கிடையாது. விரோதமும் கிடையாது. பொதுவாக யாராவது ஒருவரிடம் திருட வேண்டுமென்றால் ஒன்றாக சேர்ந்து கொள்வார்கள்.   முதல் திருடரைப் பார்ப்போம். இவரது கணவர் தென்னை மரம் ஏறி பிழைப்பவர். இப்போது வயதாகிவிட்டது. இவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் அப்படியே திருட்டு, கொள்ளை, மோசடி, வஞ்சகம், துரோகம் ஆகியவற்றை செய்வதில் கைதேர்ந்தவர்கள். ஐந்து பிள்ளைகள். மூன்று பெண் பிள்ளைகளில் ஒருவர் மட்டுமே அந்தளவு மோசமில்லை என்று சொல்லாம். கடைசியாக பிறந்தது ஆண் பிள்ளை. இருப்பதிலேயே ஈவு இரக்கம் இல்லாத ஈனப்பிறவி.  முதலில் மின் பொருட்கள் சார்ந்த தொழிலை கற்றவர், பிறகு காப்பீடு முகவராக மாறினார். ஏஜெண்டாக மக்களிடம் பெற்ற பணத்தை அரசு நிறுவனத்திற்கு செலுத்தவில்லை. தன்னுடைய சொந்த கணக்கில் போட்டுக்கொண்டார். பிறகு நல்ல நாள் பார்த்து ராகு எமகண்டம்...

பங்குனி விழாவில் விழி பிதுங்கும் மயிலாப்பூர்!

படம்
  மயிலாப்பூரில் நடைபெறும் பங்குனித்திருவிழா பற்றி தனியாக சொல்லவேண்டியதில்லை. கபாலீஸ்வரரின் விழாக்களில் பிரபலமானது. பல லட்சம் பேர் வந்து ஊரை இறைவனின் சிலையுருவங்களோடு சுற்றி வருவார்கள். கூடவே பக்தர்களுக்கு தண்ணீர் கலக்கிய மோர், சாச்சி, முக்தி மசாலாக்களால் மணக்கும் தக்காளிச்சோறு என நிறைய  சோறு போடும் வணிக நிறுவனங்கள் வருவார்கள். மயிலாப்பூரில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் அன்று தங்களை அன்ன தாதாவாக கருதிக்கொண்டு ஏதாவது செய்துகொண்டிருப்பார்கள். பாலகுமாரன் சொல்லுவது போல, இப்படி அன்னம் வழங்குவதும் ஒருவித வேண்டுதல்தான். வயிற்றுப்பசியை  அணைத்து தனது நலம் நாடுவதுதான். புண்ணியம் தேடுவதுதான்.  அன்னதானம் நடந்தபிறகு மத்தள நாராயணன் தெரு, கடைவீதி, கச்சேரி சாலை என அனைத்து இடங்களிலும் சாலை எண்ணெய்யில் நனைந்து கிடக்கும். சோற்று பருக்கைகள், இன்ஸ்டன்ட் சோற்றுத் தட்டுகள், பாக்குத் தட்டைகள் என ஏராளமாக நிரம்பிவிடும். எனக்கு இதைப் பார்ப்பது பிடிக்கும். நகரை பகலிலும் இரவிலும் பார்க்கவேண்டும் என்று சொல்லுவார்கள். இந்த இரண்டு வேளையிலும் நகரம் தனித்தன்மையான இயல்பில் இருக்கும். பகலில் பார்க்கும் ...