இடுகைகள்

ஃபேன்டசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குற்றங்களை ஃபேன்டசி கலந்து சொன்னால் எப்படியிருக்கும்?

படம்
  குற்றங்களின் விவரிப்பு கொலைகளை செய்தவர்களை கூட்டிச்சென்று எப்படி செய்தார்கள் சென்று செய்துகாட்ட வைப்பது காவல்துறையின் முக்கியமான பணி. குழப்பமான கொலை வழக்குகளில் இந்த நடைமுறையை பின்பற்றுகிறார்கள். ஆனால் இந்த முறையை அனைத்து கொலைகாரர்களிடம் செயல்படுத்த முடியாது. சீரியல் கொலைகாரர்கள், கொலைகளை பற்றி சொல்லுவார்கள். உண்மைதான். ஆனால் தங்களது மனதிலுள்ள ஃபேன்டசி விஷயங்களையும் சேர்த்து சொல்லுவார்கள். இதனால் அது உண்மையா, கனவா என்று கூட குழப்பமாகும் அபாயம் உள்ளது. ஏன் இப்படி நடக்கிறது. கொலைகளை பலமுறை தங்கள் மனதிலேயே அவர்கள் செய்து பார்த்து ரெடியாகிறார்கள். இதனால் நேரடியாக அதனை செய்யும்போதுகூட இல்லாத தகவல்களை விசாரணையில் கூறுவார்கள்.  ஸ்டான்லி குப்ரிக்கின் கிளாக்வொர்க் ஆரஞ்ச் படத்தில் வரும் அலெக்ஸ் எனும் சைக்கோபாத் பாத்திரம் முக்கியமானது. அதனை சரிவர பலரும் புரிந்துகொள்ளாமல் இதேபோல வன்முறை அதிகமாக இருக்கிறது. இயல்பாக பாத்திரம் அமையவில்லை என்றார்கள். சரிதான். நாம் பார்ப்பது அந்த பாத்திரம் சொல்லும் தனது கோணத்திலான கதையை என்பதை மறந்துவிடக்கூடாது.  விசாரணையில் சீரியல் கொலைகார ர்கள் பேசுவதுதான் அவர்களது

தூங்கி எழுந்தால் காதலன் பெயரில் இன்னொருவன் படுக்கையில் இருக்க, தவிக்கும் காதலி! - பியூட்டி இன்சைட் 2015 -

படம்
            பியூட்டி இன்சைட்  Directed by Baik (Baek Jong-yul) Produced by Park Tae-joon Written by Kim Sun-jung Noh Kyung-hee Based on The Beauty Inside by Drake Doremus Starring Han Hyo-joo Music by Jo Yeong-wook Cinematography Kim Tae-gyeong       இன்றுள்ள மனிதர், நாளைக் காலையில் இருப்பதில்லை. அதாவது இன்று அவர் கற்றுக்கொள்ளும் விஷயங்களைப் பொறுத்து நாளை வேறுமாதிரியாக உலகை எதிர்கொள்வார். கொரியாவில் வாழும் கிம் வூ ஜின், வித்தியாசமான பல்வேறு பர்னிச்சர்களை உருவாக்கும் திறன் கொண்டவர். இவருக்கு இரவில் படுத்து தூங்கி காலையில் எழுந்தால் முகம், உடல் என வேறு ஆளாக மாறிவிடுவார். மனம், புத்தி எல்லாமே சரியாக இயங்கும். ஆனால் உடலின் அனைத்து அளவுகளும் மாறிவிடும். கண்பார்வை, உடலில் அணியும் ஆடைகளின் அளவு, செருப்பின் அளவு.  இப்படிப்பட்ட பாதிப்பு இருக்கும் இவர், அவரது அம்மாவுக்கே பாரமாகிறார். இதனால் தனியாக தான் தயாரிக்கும் நாற்காலி தொழிற்சாலையிலுள்ள அறையில் தங்கிக்கொள்கிறார். கிம் தினசரி தான் மாறும் புதிய மனிதரின் அடையாளத்துடன் கணினியில் தன் அனுபவத்தை பதிவு செய்து வைப்பது முக்கியம். வயதுக்கான பிரச்னைகளோ

எதிர்கால வில்லனை காப்பாற்றும் கூலி கொலைகாரன்! - லூப்பர்

படம்
500 × 500 லூப்பர் 2012 இயக்கம் ரியான் ஜான்சன் ஒளிப்பதிவு ஸ்டீவ் யெடின் இசை நாதன் ஜான்சன் 2044ஆம் ஆண்டு நடக்கும் கதை. நிகழ்காலம், எதிர்காலம் என இரண்டு இடங்களில் பயணிக்கும் கதை. எதிர்காலத்தில் உலகிற்கு ஆபத்து ஏற்படுத்துவார்கள் என தோன்றும் ஏன் சந்தேகப்பட்டாலே அவர்களைப் பிடித்து நிகழ்காலத்திற்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அங்கு அவர்களை போட்டுத்தள்ளி அதற்கான சம்பளத்தை எடுத்துக்கொள்பவர்களுக்குப் பெயர் லூப்பர். எதிர்கால எதிரிகளைப் போட்டுத்தள்ளுவதில் தங்கப்பதக்கம் வாங்கும் தகுதி கொண்டவன், ஜோ. அவனுக்கு எதிர்காலத்தில் இருந்து எதிரி ஒருவன் வருகிறான். அவன் வேறு யாருமல்ல, அவனேதான். எதிர்காலத்தில் வாழும் ஜோவின் மனைவியை எதிரிகள் கொன்றுவிடுகின்றனர். அதற்கு காரணமான ஆட்களைத் தேடி கொல்லவே நிகழ்காலத்திற்கு காலத்தில் பயணித்து வருகிறான். அப்போது அவனுக்கு லூப்பர்களை அழிக்கும் ரெயின் மேக்கர் என்பவன் பற்றிய தகவல் கிடைக்கிறது. அவன் நிகழ்காலத்தில் பிறந்து வளர்ந்து வருகிறான்    அவனை இப்போதே போட்டுத்தள்ளிவிட்டால் அவன் எதிர்காலத்தில் தன் மனைவியைக் கொல்ல வாய்ப்பு கிடைக்காது என பேராசை

தவறுகளை ஒழிக்க உருவான புராண நாயகன் - வீரபோக வசந்த ராயுலு!

படம்
வீரபோக வசந்த ராயுலு - தெலுங்கு இயக்கம் - இந்திரசேனா இசை மார்க் கே ராபின் ஒளிப்பதிவு  நவீன் யாதவ், எஸ்.வெங்கட் மூன்று கதைகளைக் கொண்ட படம். படம் முடிவில் ஆச்சரியமான முடிவு கிடைக்கிறது. இதுதான் படத்தை இப்படி ஒரு படமா எனவும், குழப்பறாங்கப்பா எனவும் சொல்ல வைக்கிறது. வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் கதை. முதல் கதையில் ஆதரவற்றோர் காப்பகங்களில் உள்ள பெண்குழந்தை காணாமல் போகிறது. போலீசார் வழக்கை அலட்சியமாக கையாள்கின்றனர். இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக்கொண்டு காப்பக உரிமையாளர் டாக்டர் செயல்பட திடீரென அவர், கடத்தல் கும்பலால் கொல்லப்படுகிறார். அதில் மிஞ்சுவது செஸ் பிளேயராக உள்ள டாக்டரின் மகன்தான். சிறுவன் என்ன செய்ய முடியும்? அடுத்த கதை - ஒரு பதினைந்து வயது சிறுவன், காவல்நிலையத்தில் தன் வீட்டைக் காணோம் என்று புகார் செய்கிறான். என்னடா இது புது விஷயமாக இருக்கிறதே என சப் இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறார். அப்போதுதான் குழந்தைகளை கடத்துவது தெரிய வருகிறது. இதற்கிடையில் கடத்தல் குழுவைச் சேர்ந்தவரை சுட்டுக்கொன்று தலைவரை நெருங்கும்போது, சப் இன்ஸ்பெக்டரின் தந்தை தற்கொலை செய்துகொள்கிறார்.

ஜாலி கேலி கலாய் காதல் சினிமா - ஓ மை கடவுளே !

படம்
ஓ மை கடவுளே - தமிழ் அஷ்வத் மாரிமுத்து ஒளிப்பதிவு - விது அய்யன்னா இசை - லியோன் ஜேம்ஸ் ஒரு பெண், இரண்டு ஆண்கள். இந்த மூவரும் நண்பர்கள். பப் மது அருந்திக்கொண்டிருக்கும்போது, காதலித்தவர்களை கல்யாணம் செய்துகொண்டால்தான் லைஃப் நன்றாக இருக்கும் என்று ஒருவர் சொல்லுகிறார். அருகிலிருந்து தோழி, அதையேதான் யோசிக்கிறார். உடனே அருகிலிருந்த தோழனிடம் நாம் கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்கிறார். அதை மறுக்க அவரிடமும் எந்த காரணமுமில்லை. அடுத்த பதினைந்து நிமிட ஆட்டோ பயணத்தில் சரி பண்ணிக்கலாம் என்கிறார். அதன்பிறகு அவர்களது வாழ்க்கை என்ன ஆனது, ஓ மை கடவுளே என்று சொல்லும்படி ஆன நிகழ்ச்சிகளை அட்டகாசமாக உருவாக்கிய படம்தான் ஓ  மை கடவுளே. ஆஹா! இயக்குநர் ஆறு ஆண்டுகளாக எழுதி உருவாக்கிய படம். அதனால்தான் திரைக்கதை -வசனம்-இயக்கம் என ஹரி, கே.எஸ். ரவிகுமார் ரேஞ்சுக்கு போடுகிறார். படத்தில் தான் யோசித்த விஷயங்களை நுட்பமாக பேசி அதற்கு நியாயம் செய்துவிடுகிறார். எளிமையாக கிடைத்த விஷயங்களின் அருமையை நாம் உணருவதில்லை என்பதுதான் படத்தின் கான்செப்ட். அப்படி கிடைத்த தோழி - மனைவியை தவறவிடும் ஒருவன்,

ஆவியாக வந்து மகனுக்கு தாம்பத்திய பாடம் எடுக்கும் அப்பா- சோகடே சின்னி நயனா

படம்
சோகடே சின்னி நயனா - தெலுங்கு இயக்கம் கல்யாண் கிருஷ்ணா குருசலா கதை - திரைக்கதை பி. ராம் மோகன் ஒளிப்பதிவு பிஎஸ் வினோத் இசை  அனுப் ரூபன்ஸ் ஃபேன்டசியான கதை. கல்யாணமாகி சில ஆண்டுகளிலேயே  பங்காரு ராஜூ விபத்தில் இறந்து விடுகிறார். எப்போதும் பெண்களையே சுற்றி வந்துகொண்டிருப்பவர் அவர். அவருடைய மகனுக்கு முக்கியமான பிரச்னை வருகிறது. அதைத் தீர்க்க வருகிறார். அதோடு அவர் இறந்துபோனதற்கான காரணமும் தெரியவருகிறது. மேலும் அவரது குடும்பம் முழுக்க பலியாகும் வாய்ப்பும் உருவாகிறது. அதை எப்படி தடுக்கிறார், குடும்பத்தைக் காக்கிறார் என்பதே கதை. ஆஹா.. படம் முழுக்க நாகார்ஜூனாதான் தெரிகிறார். படத்தலைப்பை இளமையான வசீகரன் என்பதுதான். அதனை படம் முழுக்க நிரூபிக்கிறார். அப்பாதான் இதில் பவர். மகன் இதயநோய் வல்லுநர் என்பதோடு  மற்ற விஷயங்களிலும் டியூப்லைட். அத்தனையையும் நேர் செய்துவிட்டு குடும்ப பகையையும சிவபெருமானின் அருளைப் பெற்று தீர்த்து வைக்கிறார். பிரம்மானந்தத்தின் காமெடியும் சிறப்பாக வேலை செய்திருக்கிறது. ரம்யாகிருஷ்ணன், லாவண்யா திரிபாதி, அத்தை பெண்கள் என அத்தனைபேரும் கொள்ளை அழகு. நடிக்