குற்றங்களை ஃபேன்டசி கலந்து சொன்னால் எப்படியிருக்கும்?
குற்றங்களின் விவரிப்பு
கொலைகளை செய்தவர்களை கூட்டிச்சென்று எப்படி செய்தார்கள் சென்று செய்துகாட்ட வைப்பது காவல்துறையின் முக்கியமான பணி. குழப்பமான கொலை வழக்குகளில் இந்த நடைமுறையை பின்பற்றுகிறார்கள். ஆனால் இந்த முறையை அனைத்து கொலைகாரர்களிடம் செயல்படுத்த முடியாது. சீரியல் கொலைகாரர்கள், கொலைகளை பற்றி சொல்லுவார்கள். உண்மைதான். ஆனால் தங்களது மனதிலுள்ள ஃபேன்டசி விஷயங்களையும் சேர்த்து சொல்லுவார்கள். இதனால் அது உண்மையா, கனவா என்று கூட குழப்பமாகும் அபாயம் உள்ளது. ஏன் இப்படி நடக்கிறது. கொலைகளை பலமுறை தங்கள் மனதிலேயே அவர்கள் செய்து பார்த்து ரெடியாகிறார்கள். இதனால் நேரடியாக அதனை செய்யும்போதுகூட இல்லாத தகவல்களை விசாரணையில் கூறுவார்கள்.
ஸ்டான்லி குப்ரிக்கின் கிளாக்வொர்க் ஆரஞ்ச் படத்தில் வரும் அலெக்ஸ் எனும் சைக்கோபாத் பாத்திரம் முக்கியமானது. அதனை சரிவர பலரும் புரிந்துகொள்ளாமல் இதேபோல வன்முறை அதிகமாக இருக்கிறது. இயல்பாக பாத்திரம் அமையவில்லை என்றார்கள். சரிதான். நாம் பார்ப்பது அந்த பாத்திரம் சொல்லும் தனது கோணத்திலான கதையை என்பதை மறந்துவிடக்கூடாது.
விசாரணையில் சீரியல் கொலைகார ர்கள் பேசுவதுதான் அவர்களது ஒரே இறுதி வாக்குமூலம். அதில் அவர்கள் பேசுவதை வைத்துத்தான் அவர்களுக்கு தண்டனை கிடைப்பது எந்தளவு என்பதை தீர்மானிப்பார்கள். இதனால் சொல்லும் கொலைக்கதைகளில் சற்றே டிவிஸ்டுகளை செய்து சொல்லுவார்கள். அப்போதுதான் அவர்களை நல்லவர்களாக பிறருக்கு காட்ட முடியும். எனவே தயவு தாட்சயணமின்றி இதனை செய்வார்கள். இதற்கும் மேல் ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டால்? இங்கு யார் நல்லவர்கள்? என்னை சிறுவயதில் எப்படி கொடுமைப்படுத்தினார்கள். அதனால்தான் நான் இப்படி மாறிவிட்டேன். இங்கு யாரைப் பார்த்தும் நான் வெட்கப்படமாட்டேன். குற்றவுணர்வு கொள்ள மாட்டேன் என பிஸினஸ்மேன் மகேஷ்பாபு போல பேசி விறைப்பாக நடந்துகொள்வார்கள்.
சிறை வாழ்க்கை
சீரியல் கொலைகார ர்கள் என்றில்லை. கேமரா கண்காணிப்பு. தாக்குதல் நடத்தினால் பிரம்படி, நேரத்திற்கு சோறு, தினசரி வருகைப்பதிவு என கட்டுப்பாடாக இருக்கும் சிறையில் யாராக இருந்தாலும் ஒடுங்கிவிடுவார்கள். சிறையைப் பொறுத்தவரை அங்கு சீரியல் கொலைகார ர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. அதாவது, இங்கு வாய்ப்பு என்பது கொலை செய்வதற்கானது. எனவே, அமைதியாக இருப்பார்கள். அங்கேயே தங்களது கொடூர கற்பனைக்கு ஏற்றபடி நண்பர்கள் இருந்தால் அவர்களை சந்திப்பார்கள். தங்களது கொடூர கற்பனைக்கு பூஸ்ட் கொடுத்து கொள்வார்கள். நல்ல பையன்களாக நடித்து அனைவரையும் நம்ப வைப்பார்கள். இதெல்லாம் அவர்கள் வெளியே வரும்வரைதான். வந்தபிறகு நான் மகான் அல்ல என்று கத்தியை கையில் எடுத்துவிடுவார்கள்.
பாட் ப்ரௌன்
கருத்துகள்
கருத்துரையிடுக