சிறந்த உற்பத்தித் திறன் ஆப்கள் 2021!

 






டோடோய்ஸ்ட் Todoist

நீங்கள் அடுத்து செய்யவேண்டிய வேலைகளை பிரமாதமாக லிஸ்ட் போட்டு வைத்து நெருக்கடி கொடுக்கும் சிறந்த ஆப் இது. இலவசமாக கிடைத்தாலும் சில முக்கியமான ஆப்ஷன்களை பயன்படுத்த காசு கட்டி எலைட் குரூப்பாகவேண்டும். 

திங்க்ஸ் things

இந்த ஆப், செய்யும் வேலைகளை அனைத்தையும் எளிதாக இணைக்க கூடியது. ஆனால் இதன் வடிவமைப்பு பெரும்பாலும் கண்ணால் பார்க்க கூடிய வகையில் உள்ளது. தேவையான விஷயங்களை தொட்டு இழுத்து ஆப்பில் சேர்த்துக்கொண்டு அடுத்தடுத்த பிளான்களை செய்து  பின்னி எடுக்கலாம். ஆப்பிள் ஆப்பில் மட்டும்தான் கிடைக்கிறது. காசு கட்டவேண்டும். 

டிக்டிக் tick tick

பெயர் டிக்டிக் என கடிகாரத்தை நினைவுபடுத்தி பதற்றம் தந்தாலும் செய்யும் வேலைகளிலும் வசதிகளிலும் அந்தளவு சிக்கல் ஏற்படுத்தவில்லை. இதில் உங்களது வேலை சார்ந்த விஷயங்களை பதிவு செய்துவிட்டால் போதும். தேவையான நேரத்தில் என்ன செய்யலாம் என ஆப்பே சொல்லும். அதை மட்டும் செய்தால் போதும். வாழ்க்கையில் முன்னேறிவிடலாமா என்று கேட்காதீர்கள். நேரம் சிறப்பாக செலவழியும் என சொல்ல வந்தேன். 

மைக்ரோசாப்ட் டூ டு Ms to do

டெக் சம்பந்தமான விஷயங்களில் கடைசியாக வரும் மைக்ரோசாப்டின் தயாரிப்பு. மிகவும் எதிர்பார்க்காதீர்கள். எளிமையான ஆப். தேவையான வேலைகளை இதில் பதிவு செய்துகொள்ளலாம். இலவசமாக கிடைக்கிறது என்பதாலோ என்னவோ அந்தளவு எளிமையாக உள்ளது. 

அஜெண்டா

என்ன திட்டம் போட்டு வைத்துள்ளோமோ அதைப்பற்றி நாலு வரி எழுதலாமே என நினைப்பவர்களுக்கானது. திட்டம் பற்றி எழுதி வைத்து அதனை எப்போது செய்யலாம், என்ன செய்யலாம் என்பதை நமக்கு மட்டுமல்லாது பிறருக்கும் சொல்லும் ஆப் இது. இலவசம்தான். பயன்படுத்திப் பாருங்கள். 

ஸ்டஃப் இதழ்





கருத்துகள்