கொலை செய்யும்போது தங்களின் அடையாளங்களை கொலைகாரர்கள் விட்டுசெல்வது உண்மையா?

 

 

 Vampire, Horror, Blood, Dracula, Dirt, Crack, Halloween

 

ஒரே மாதிரியான முறையில் கொலை

சீரியல் கொலைகாரர்கள், ஒரே மாதிரியான முறையில் கொலைகளை செய்கிறார்கள் என திரைப்படங்கள், வெப் சீரிஸ்களில் காட்டுவார்கள். ஆனால் அது உண்மையல்ல. ஒரே மாதிரியான வேலையை செய்துகொண்டிருந்தால் யாருக்குமே போரடிக்கும்தானே? அது சீரியல் கொலைகாரர்களுக்கும்  பொருந்தும். முதலில் செய்யும் கொலைகளை ஒரு மாதிரி செய்து முடிப்பார்கள். பிறகு, அதனை அடுத்தடுத்த தாக்குதல்களில் நிறைவு செய்வார்கள். 

கொலையை எப்படி எத்தனை ஆயுதங்களை வைத்து செய்வது, சித்திரவதையை எப்படி நீட்டிப்பது என யோசித்து அதனை கற்பனை உதவியுடன் பிரைம் ஃபோகஸ் சிஜி போல மேம்படுத்துவார்கள். பிறகுதான் கொலைக்கான திட்டமிடல் தயாராகும். இப்படி செய்யும்போதுதான் கொலையை அனுபவித்து செய்ய முடியும் என சீரியல் கொலைகாரர்கள் நம்புகிறார்கள்.  இதற்கு உதாரணமாக சீரியல் கொலைகார ர் ஒருவரைப் பார்ப்போம். 

கேரி டெய்லர் என்ற சீரியல் கொலைகாரர், பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பெண்களை மண்டையில் அடித்து மயங்க வைத்து தூக்கிச் சென்று கொல்பவர். இந்த முறை சலித்துப் போக அடுத்து துப்பாக்கியை கையில் எடுத்தார். பெண்களின் அறைப்பக்கம் சென்று படுக்கை அறையை குறிபார்த்து சுட்டார். இப்படி சில பெண்களை கொன்றபிறகு காவல்துறை கைது செய்து மனநல மருத்துவமனையில் சேர்த்தது. அங்கு சில காலம் வைத்திருந்துவிட்டு வெளியே அனுப்பிவிட்டனர். அதற்குள், சமூகம் சார்ந்த சில பழக்க வழக்கங்களை கற்றுக்கொண்டார் டெய்லர். அதை வைத்து தான் கொலை செய்ய நினைக்கும் வீட்டுக்குள் போலி அடையாளங்களை வைத்து உள்ளே செல்லத் தொடங்கினார். இதுவும் கூட கொஞ்ச காலம்தான். பிறகு  கத்தியை வைத்து தெருவில் செல்லும் பெண்களை தாக்கத் தொடங்கினார். இந்த முறை மீண்டும் மனநல மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். திரும்ப வந்தவர் திருமணம் செய்துகொண்டார். 

மனைவியின் மூலம் கற்றுக்கொண்ட சமூக பழக்க வழக்கங்களை வைத்து மேலும் சில கொலைகளை செய்தார். பிறகு, விவகாரத்து செய்தபிறகு விலைமாதுக்களை வீட்டுக்கே கூட்டி வந்து சரச சல்லாபங்களை செய்தார். அப்பெண்களை வீட்டின் பின்புறத்தில் கொன்று புதைத்தார். பிறகு முன்னாள் மனைவி கணவரை வீட்டை விட்டு வெளியே விரட்ட காவல்துறையும் டெய்லரை வலை வீசிப் பிடிக்கத் தொடங்கியது. அப்போதும் அவர் கொலை செய்வதைப் பற்றிய குற்றவுணர்ச்சியை கொள்ளவே இல்லை. 

முத்திரைக் கொலை

படங்களில் கொலைகளை சுவாரசியப்படுத்துவதற்கு முக்கியமான வழி, கொலை செய்யும் இடத்தில் சில அடையாளங்களை விட்டுசெல்வது. கொலைகளை குறிப்பிட்ட முறையில் செல்வது... கண்களை தோண்டியெடுப்பது, வாயில் உள்ளாடைகளை திணித்து வைப்பது, சுவரில் ரத்தம் மூலம் படம் வரைவது என கூறலாம். அமெரிக்காவில் போஸ்டன் கொலைகாரர் இந்த வகையில் கொல்லப்பட்டவர்களின் கழுத்தில் வில்லை வரைந்து வைத்தார். அடிப்படையில் இந்த குறியீடு நல்ல விஷயம்தான். ஆனால் இதனை அவர் தான்தான் கொலை செய்தோம் என்பதை உலகிற்கு செய்தியாக சொல்ல விரும்பி செய்தார். 

pat brown






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்