காவல்துறையை குழப்பும் கொலையாளிகள்!

 






தடயமே இல்லாமல் கொல்!


நீங்கள் எங்கு சென்றாலும் உங்களில் ஒரு பகுதியை பழைய இடத்தில் விட்டுச்செல்கிறீர்கள் என்று அழகான தியரி ஒன்றை  சொல்வார்கள். குற்றங்களைப் பொறுத்தவரை இந்த தியரி பொருந்தாது. கொலையாளி, கொலைக்கான திட்டமிடலை முன்னமே செய்துவிடுவதால், பெரியளவு ஆதாரங்கள் கொலை நடந்த இடத்தில் கிடைக்காது. 

சீரியல் கொலைகார ர் தலை வழுக்கையாக இருக்கலாம். தொப்பி போட்டிருக்கலாம். கையில் க்ளவுஸ் இருக்கலாம். இதனால் முடியோ, கைரேகையோ கிடைக்காது. அவர் கொலை மட்டும்தான் செய்கிறார் என்றால் பிற சமாச்சாரங்கள் ஏதும் கிடைக்காது. வல்லுறவு செய்தாலும் கூட ஆணுறையைப் பயன்படுத்திவிட்டு அதனை சரியானபடி அவர் தூக்கியெறிந்திருக்கலாம். மேலும் கொலையின்போது அணிந்திருந்த உடையைக் கூட அவர் தீவைத்து கொளுத்தியிருக்கவும் வாய்ப்புள்ளது. 

குழப்ப குருமா

காவல்துறையைப் பொறுத்தவரை அவர்களாகவே குற்றவாளியைத் தேடிக் கண்டுபிடித்து சட்டத்தின் கையில் ஒப்படைப்பது என்பது அரிதானது. ஆனால் அதிலும் சின்சியராக உழைக்கும் அதிகாரி இருந்தால் என்ன செய்வது? இதனால் அவர்களை குழப்ப வேறு ஒருவரின் முடி, விந்தணு, ரத்தம் ஆகியவற்றை கொலை நடந்த இடத்தில் கலந்துவிட்டு செல்லும் குரூர மனம் கொண்ட கயவர்களும் கொலைகார ர்கள் வரலாற்றில் உண்டு. பெரும்பாலும் தன் மீது அளவு கடந்த நம்பிக்கையை கொலைகாரர்கள் கொண்டிருப்பார்கள். நம் காலரை யார் பிடிக்க முடியும் என நினைப்பார்கள். இதனால் காவல்துறையை குழப்பவேண்டும் என்று அஜெண்டா போட்டு வேலை செய்வது பொதுவாகவே குறைவு. சந்தோஷமாக கொலையை செய்தோமா, அனுபவித்து ரசித்தோமா என்று கிளம்பிவிடுவார்கள். 

பாட் ப்ரௌன்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்