ஃபேன்டஸி விளையாட்டுகள்! - டேட்டா

 







குறிப்பிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது அதை மையமாக வைத்து நடக்கும் ஃபேன்டசி விளையாட்டுகளில் காசு வைத்து பெட் கட்டுவதும் உண்டு. அமெரிக்காவில் ஃபேன்டசி விளையாட்டுகளின் சந்தை 7 பில்லியனாக உள்ளது. 

இப்பட்டியலில் கிரிக்கெட், சாசர், கால்பந்து, டென்னிஸ், கோல்ப் ஆகிய விளையாட்டுகள் உள்ளன. 


அமெரிக்கா, கனடாவில் 59 மில்லியன் ஃபேன்டசி விளையாட்டு வீரர்கள் உள்ளனர். 

இவர்களின் தோராய வயது 37. 

ஆண் விளையாட்டு வீர ர்களின் சதவீதம் 81%

ஒரு விளையாட்டு வீரர் ஓராண்டுக்கு செலவழிக்கும் தொகை 653 டாலர்கள்

2018ஆம் ஆண்டு அமெரிக்க உச்சநீதிமன்றம் ஃபேன்டசி விளையாட்டுக்கான பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்கியது. இந்த வகையில் ஃபேன்டசி விளையாட்டில் பங்கேற்கும் அமெரிக்க மாநிலங்களின் சதவீதம் 80.

அமெரிக்காவில் நடைபெறும் சட்டவிரோத விளையாட்டு பந்தயங்களின் மதிப்பு (2018படி)  150 பில்லியன் 

ஃபேன்டசி விளையாட்டை அமெரிக்காவில் யார் தொடங்கியது என்று இன்றும் விவாதம் முடியாமல் நடைபெற்று வருகிறது. வில்லியம் ஓக்ரண்ட் என்ற பத்திரிக்கையாளர் முதன்முறையாக ஃபேஸ்பால் விளையாட்டை ஃபேன்டசி விளையாட்டாக தொடங்கினார். இல்லை அவர் தொடங்குவதற்கு முன்னதாக வில்ஃபிரட் விக்கென்பாக் என்ற தொழிலதிபர் ஃபேன்டசி விளையாட்டைத் தொடங்கினார் என்றும் வாதிடுகிறார்கள். ஆனால் யார் தொடங்கிய விளையாட்டு ரசிகர்களை ஈர்த்தது? ஓக்ரண்ட்தான் இதில் வென்றார். 

இன்று ஃபேன்டசி என்பதுடன் ஸ்போர்ட் என்பதை சேர்த்தாலே அது ஃபேன்டசி விளையாட்டு என்பது போல ஏராளமான நிறுவனங்கள் இத்துறையில் நுழைந்துவிட்டன. யாஹூ, இஎஸ்பிஎன், ஸ்லீப்பர், மைஃபேன்டசிலீக் என நிறைய நிறுவனங்களில் இதில் சிறப்பாக இயங்குகின்றன. 

டிராப்ட் கிங்ஸ், ஃபேன்டியூல் என இரு நிறுவனங்கள் ஃபேன்டசி நிறுவனங்கள் கடந்த பத்தாண்டுகளாக இத்துறையில் கோலோச்சி வருகின்றன. 

க்வார்ட்ஸ்




 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்