பைத்தான் நூலை எழுதிய டெல்லி மாணவர்!

 





டெல்லியைச் சேர்ந்த மாணவர் பார்த் ஆர்யா. பதினேழு வயதாகும் இவர் பைத்தான் மொழி பற்றிய நூலை எழுதி வெளியிட்டுள்ளார். கொரோனா காலத்தில் ஹார்வர்ட் பல்கலையில் கற்ற ஆன்லைன் கல்வியால் நூலை ஐந்து மாதங்களில் எழுதி முடித்துள்ளார். 

நூலை முடித்துவிட்டு அதனை பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி முதல்வரிடம் காட்டியுள்ளார். அவர்களும் ஆதரவு வழங்க, பைத்தான் நூல் புத்தக வடிவம் பெற்றுள்ளது. இதனை 10-12 வயது மாணவர்கள் படிக்கும் வகையில் எழுதியுள்ளார். 

எனக்கு எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தொழில்நுட்ப நூலை எழுதவேண்டும் என்பது ஆசை. அந்த வகையில் இந்த நூல் அமைந்திருக்கிறது என நினைக்கிறேன். இதன்மூலம் வறுமை நிலையில் உள்ள மாணவர்கள் எளிதாக பைத்தான் மொழியை புரிந்துகொள்ள முடியும் என்றார் பார்த் ஆர்யா. 

நூல் புத்தகமாக, இபுக் வடிவிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் நிதியை ஹைதராபாத்திலுள்ள பிரிங்க் எ ஸ்மைல் என்ற தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். 

தொழில்நுட்பம் என்பது எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே நல்லது கெட்டது தீர்மானிக்கப்படுகிறது. எனக்கு வசதி இருந்ததால் எளிதாக ஆன்லைனில் படிக்க முடிந்தது. வறுமைநிலையில் உள்ளவர்கள் இதேபோன்ற கல்வியைப் பெறுவது கடினம். டிஜிட்டல் நிலையில் உள்ள பாகுபாடுகளை ஒழிப்பதே எனது லட்சியம். எனவே நூலை எளிதாக பெறும்படி வழிவகைகளை செய்து வருகிறேன் என்றார். 

ஹெச்டி 






கருத்துகள்