உடல் உறுப்புகளை சாப்பிடுபவர்களின் மனநிலை!
உடல் உறுப்புகளை சாப்பிடலாமா?
இரையாக பிடித்தாலுமே அவர்களை மேலும் துன்புறுத்தவேண்டும். கொன்றாலும் பிணத்துடன் உறவு கொண்டாலும் மன திருப்தி ஏற்படாதபோது என்ன செய்வது? இங்குதான் உடல் பாகங்களை வெட்டி சமைத்து சாப்பிடுவது வருகிறது. அப்படி சாப்பிடுவதன் மூலம் இறந்தவர்களோடு சீரியல் கொலைகாரர்கள் தங்களை இணைத்துக்கொள்வதாக காவல்துறை விசாரணையில் கூறியிருக்கிறார்கள். இது எந்தளவு சாத்தியம் என்பதை பற்றி அவர்கள் கவலையே படுவதில்லை. இதெல்லாம் நடப்பது அவர்களுடைய உலகில் என்பதால், பிறரைப் பற்றி மக்கள் கருத்து பற்றியெல்லாம் அணுவளவும் கவலைப்படுவதில்லை.
போஸ் கொடுப்பது முக்கியம்!
கொன்றவர்களை குறிப்பிட்ட போஸில் வைத்துவிட்டு செல்வது சிலருடைய பழக்கம். எதற்கு என்று கேட்கிறீர்களா? எல்லாமே அதிகாரத்தை உணர்த்துவதற்காகத்தான். இந்தவகையில் அவர்களை முழுமையாக கட்டுப்படுத்த முடிகிறதே? காவல்துறை புகைப்படக்கார ரோடு வந்து கொலை செய்யப்பட்டவர்களை புகைப்படம் எடுப்பார்கள். இதனால் இறந்தவர்களின் உடல் எப்படி கிடந்தது என்பது வரலாற்றில் பதிவாகிறதே? இந்த வாய்ப்பை யாராவது விட்டுக்கொடுப்பார்களா என்ன?
பெரும்பாலான கொலைகார ர்களைப் பொறுத்தவரை ஒருவரைக் கொன்றவுடன் ஆபீஸ் முடிஞ்சிடுத்து வீட்டுக்கு போகலாம் என்பதுபோல டைம் டேபிள்படி கிளம்பிவிடுவார்கள். சிலர் மட்டும் எதிர்காலத்தை காப்பாற்ற வேண்டுமே என கொன்ற உடல்களை குறிப்பிட்ட போஸ்களில் அமைத்துவிட்டு செல்கின்றனர். குற்றங்களை பதிவு செய்பவர்கள் குறிப்பிட்ட போஸ்களில் உடல் கிடப்பதைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். டேனி ரோலிங் என்பவர், அவர் செய்த கொலையை யார் பார்க்கிறார்களோ அவர்கள் வாழ்நாளில் மறக்கவே முடியாத அதிர்ச்சிக்கு ஆளாவார்கள். அந்தளவு கொலை செய்யப்பட்டவரை சித்திரவதை செய்து கொன்றிருப்பார. கதவை திறந்து பார்ப்பவர், பெரும் பீதிக்கு உள்ளாகும்படி தலையை வெட்டப்பட்ட முண்டம் மட்டும் நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டிருந்தால் எப்படியிருக்கும்?
கருத்துகள்
கருத்துரையிடுக