பெண்களை தலையில் அடித்து மயங்கச்செய்வதற்கான காரணம்! - சைக்கோ டைரி

 





பின்தொடரும் நிழலாய்..


இப்படி சொல்வது ரெமோ சிவாண்ணா ரசிகர்களுக்கு வேண்டுமானால் ஒத்துவரும். ஆனால் சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு உடல் தன் எல்லையை தாண்டி வதையை அனுபவித்து அலறவேண்டும். பிறரை பின்தொடருகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்., நீங்கள் அவர்களுக்கு கொஞ்சமேனும் மதிப்பு கொடுக்கிறீர்கள் என்பதுதான். சீரியல்
கொலைகார ர்களைப் பொறுத்தவரை இதற்கெல்லாம் நேரத்தை அவர்கள் விரயம் செய்வதில்லை 

கிடைத்த வாய்ப்பில் இரையை கடத்திக் கொண்டுபோய் சித்திரவதை செய்து கொல்வதுதான் ஒரே நோக்கம். 


உங்களுக்கு உதவட்டுமா?

எப்படி பெண்களை மடக்குவது? அதற்கு இயக்குநர் சேரன் பாத்திரங்கள் போல பத்தி பத்தியாக பேசவேண்டுமா என்ன? சீரியல் கொலைகாரர்களைப் போல ஒன்லைன்தான். உங்கள் பைகளை தூக்கி வரட்டுமா?

உங்கள் போனை பயன்படுத்திவிட்டு தரட்டுமா? என்னுடைய போன் தொலைந்துவிட்டது

உங்களை கூட்டிக்கொண்டு செல்லட்டுமா? நானும் அந்த வழியாகத்தான் போகிறேன். 

என்னுடைய நாய்குட்டியை பார்க்கிறாயா?

இப்படிக் கேட்டுத்தான் பலநாட்கள் பின்தொடர்ந்த இரையை மடக்குகிறார்கள். இதெல்லாம் கொஞ்சம் பழைய ஐடியாக்கள். இப்போது இணையத்தில் டேட்டிங் சைட்டுகள், பொருட்களை விற்பது, திருமணம் செய்துகொள்ள கொடுக்கும் விளம்பரங்கள் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்திக் கொல்கிறார்கள். 

ஐந்தே வாரத்தில் சிவப்பழகு போல விரைவில் புகழ்பெறவேண்டும் என நினைக்கும் பெண்களை எளிதாக குறிவைத்து தாக்குகிறார்கள். எப்படி? இலவசமாக புகைப்படம் எடுத்து தருகிறோம் என்று ஸ்டூடியோவுக்கு அழைப்பது.. அப்படி உள்ளே வந்த பெண்களை அடுத்து புகைப்படம் எடுப்பது காவல்துறையில் உள்ள புகைப்படக்காரர்தான். போலியாக காவல்துறை அடையாள அட்டை, போலி ஓட்டுநர் உரிமம் என பல்வேறு வகையில் பெண்களை மடக்க திட்டமிடுகிறார்கள். இதனை அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது. 

நம்பிக்கை அதானே எல்லாம் என்பதை பெண்கள் உறுதியாக நம்புகிறார்கள். எனவே, அடுத்து நடக்கும் குற்றமெல்லாம் கையை விட்டு போன காரியமாகவே இருக்கிறது. 

பெண்கள் ஒரு இடத்தை வாடகைக்கு விட்டால் அதை தெரிந்துகொண்டு அவர்களை மடக்குவது இவர்களின் முக்கியமான டெக்னிக். எனவே ஒருவர் பேச்சில் உடனே மயங்காமல் கவனமாக இருந்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும். தனியாக சந்திக்க அழைப்பு விடுக்கும்போது, மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் மட்டும் சந்திக்கவேண்டும். தற்காப்பிற்கென சில பொருட்களை பையில் வைத்திருப்பது அவசியம்.

மண்டையிலேயே அடி

சுந்தர் சி படத்தில் வருவது போல கட்டையை எடுத்து மண்டையிலேயே போடு என்பது சீரியல் கொலைகார ர்களின் வழக்கம். இதனை பாப் அண்ட் டிராப் என்று சொல்லுகிறார்கள். இரையை பிடித்து அதனை பொய் சொல்லி குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்து செல்ல அவர்களுக்கு திறமை பத்தாது. கூடவே பெண்கள் சுயநினைவோடு இருந்தால் தாக்கும் ஆபத்தும் அதிகம். எனவே, கத்தி, கட்டை என எது கிடைத்தாலும் எடுத்து கபாலத்திலேயே ஒரே அடி. பெண்கள் மயங்கிவிட்டால் எளிதாக ஒரு இடத்தில் படுக்கவைத்து விட்டு வண்டியில் கொண்டு போய் விடலாம் என சீரியல் கொலைகாரர்கள் நினைக்கிறார்கள். 

சமூகரீதியாக பழகும் பழக்கம் கிடையாது என்பதால் வன்முறையை கையில் எடுக்கிறார்கள். பெண்களை தனியாக சந்திக்கும் வாய்ப்பிலும் அவர்களை கடுமையாக தாக்கி மனதில் பயத்தை ஏற்படுத்துகிறார்கள். வன்முறை என்பதை தங்களது பெரிய ஆயுதமாக சீரியல் கொலைகாரர்கள் பயன்படுத்துகிறார்கள். 

 பாட் ப்ரௌன்






கருத்துகள்