இந்திய மண்ணில் ஜனநாயக சிந்தனைகளை ஊன்றியவர்! - நேருவின் போராட்டகால சிந்தனைகள்
நேருவின் போராட்டகால சிந்தனைகள்
தொகுப்பாசிரியர் அர்ஜூன் தேவ்
நேஷனல் புக் டிரஸ்ட்
இந்த நூல் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தைப் பற்றி பேசுகிறது. அந்த காலகட்டத்தில் உலகளவில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் பற்றி நேரு தன் மனதில் தோன்றிய கருத்துகளை எழுதினார். பேசினார். அதன் ஒரு பகுதிதான் தொகுப்பாளர் அர்ஜூன் தேவால் தொகுக்கப்பட்டுள்ளது.
உலகளவில் நடைபெறும் போர், அரசியல் தந்திரங்கள், வல்லரசு தகராறுகள், பொருளாதார வளர்ச்சி என பல்வேறு விஷயங்களில் நேருவின் சிந்தனை ஆச்சரியம் தருகிறது. ஏறத்தாழ இந்தியாவின் முதல் பிரதமராக ஆன உடனே இவரது சிந்தனைகள் அரசியல் கொள்கைகளாக வடிவம் பெற்றன. அதுவும் கூட நாட்டின் நலனை முன்வைத்துத்தான் . பொதுத்துறை நிறுவனங்கள் இன்று விற்கப்பட்டு வரும் நிலையில் அவர் அந்த நிறுவனங்களை தொடங்கியது மக்களை ஏழ்மையில் வீழ்த்த பிரதமர் மோடிக்கு பொருளாதார ஆலோசனை கூறிய அடிபொடிகள் கூக்குரலிடுகின்றனர்.
அன்று அரசு முழுப்பொறுப்பில் தனது நிதி முதலீட்டைக் கொண்டு அரசு நிறுவனங்களைத் தொடங்கியிருக்காவிட்டால் மக்களுக்கு பெரும்பாலான சேவைகள் சென்றே சேர்ந்திருக்கிறது. இன்று பொதுதுறை நிறுவனங்களிடமிருந்து அரசு ஏராளமாக டிவிடெண்டுகளை வாங்குகிறது. நேரு தொடங்கிய நிறுவனம் என நினைத்தால் ரோஷத்தோடு அதை வாங்காமல் தவிர்த்து ஆட்சி நடத்தலாமே?
மக்களுக்கான நீதி என்ற வகையில் நேரு தனது கருத்துகளை மனிதநேயமிக்கவராகவே தெரிவித்திருக்கிறார். ஐரோப்பாவில் படித்து வளர்ந்தாலும் கூட இந்தியாவை காந்தியின் வழிகாட்டுதலில் புரிந்துகொண்டவர் நேரு. இருவருக்குமான கனவுகள் வேறு என்றாலும் இருவரும் ஒன்றுபட்டது, ஒரே விஷயத்தில்தான் அதுதான் ஜனநாயக இந்தியா.
மதம், பண்பாடு பற்றி நேரு எழுதியவை, பேசியவை தனியாகவே இருக்கின்றன. இவை கட்டுரைகளாக இருந்தாலும் கூட இன்றளவும் அவரது சொற்கள் காலத்தை தாண்டி படிக்க கூடியதாகவே உள்ளன. அனைத்து மதங்களிலும் உள்ள மதவெறியர்களைப் பற்றி வெளிப்படையாகவே அவர் கூறியுள்ளார். சங் பரிவார் போன்ற அமைப்புகள் மக்களை பிரிவினைக்கு உள்ளாக்குவது பற்றி பேசும் அவர், முஸ்லீம் அடிப்படைவாத அமைப்புகள் பிரிவினைக்கு வித்திடுவது பற்றியும் கண்டித்திருக்கிறார்.
நேருவின் போராட்ட கால சிந்தனைகள் என்ற நூல், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நேருவின் சிந்தனை எப்படியிருந்தது, அவர் எதைப்பற்றி கவலைப்பட்டார், என்னென்ன விஷயங்களை கவனித்தார் என்பதை விளக்கமாக வாசிப்பவர்களுக்கு புரிய வைக்கிறது.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக