சிறந்த ஆப்கள் 2021! - ஆப்பிள் போன்களுக்கான சிறந்த ஆப்ஸ்கள் இவை

 






ஒன் பிளாக்கர்

இணையத்தில் பல்வேறு வலைத்தளங்களை பார்க்கும்போது ஏராளமான குப்பைகள், போனில் சேரும். அதனை அழித்து ஒடுக்கத்தான் ஒன் பிளாக்கர் உதவுகிறது. இதனை உங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ளலாம். ஆப்பிளுக்கான ஆப் இது. காசு கொடுத்து வாங்கவேண்டும்.

உலிசெஸ் 

எழுதுவதற்கான மென்பொருள்தான். இதைப் பயன்படுத்தி பா.ரா போல எழுதி தள்ளிவிட முடியுமா என்று உறுதியாக சொல்லமுடியாது. எழுதுவதை க்ளவுட்டில் சேமிக்க முடியும். இதனால் அதனை எந்த வடிவில் பெற்று பயன்படுத்த முடியும் என நம்பிக்கை கொடுக்கும் ஆப் இது. இதுவும் ஆப்பிளுக்கான கட்டண ஆப்தான். 

மேஜிக் கீபோர்ட் 

முதலில் வெளியான ஆப்பிளின் கீபோர்ட் அந்தளவு, சிறப்பாக செயல்படவில்லை. புதிய ஆன்ஸ்க்ரீன் கீபோர்ட் நீண்ட நேரம் வேலை செய்யவும் சிறப்பாக உள்ளது. இதனை டேப்லெட்டில் எளிதாக இணைத்து பணியாற்ற முடிவது முக்கியமானது. 

ஃபைல் ப்ரௌசர் 

ஆப்பிளின் ஃபைல்ஸ் ஆப் இது. இதில், பல்வேறு க்ளவுட் சேவைகளைப் பெறலாம். மேக், டேப்லட், மேசைக்கணினி என எதிலும் இணைத்துக் கொண்டு கோப்புகளைப் பெறலாம். 


ஸ்டஃப் இதழ்


கருத்துகள்