குற்றங்களை ஆவணப்படுத்துபவருக்கும் போலீசாருக்குமான வேறுபாடு!

 





குற்றங்களை ஆவணப்படுத்துதல்

காவல்துறை குழு, சிறந்த குழுவை கொண்டிருக்கவேண்டியது அவசியம். அதாவது, விருப்பு வெறுப்பு ஈகோ இல்லாமல் கொலை நடந்த இடத்தில் உள்ள விஷயங்களை காரண காரியத்தோடு ஆராயும் தன்மை  தேவை. அப்போதுதான் அவர்கள் குற்றங்களை ஆவணப்படுத்துவர் சொல்லும் தகவல்களை சரியாக உள்வாங்கி வேலை செய்யவேண்டும். 

குற்றங்களை ஆவணப்படுத்துபவர் பல்வேறு தகவல்களை சேகரிப்பார். அவற்றில் காவல்துறைக்கு எது பயன்படுமோ அதை மட்டுமே அவர்களுக்கு கோப்பாக எழுதி கொடுப்பார். அதை வைத்து உடனே குற்றவாளியை  பிடித்து வந்துவிட முடியாது. காவல்குழு துடிப்பான ஆட்களை கொண்டிருந்தால் குற்றவாளியை செவுளிலேயே போட்டு இழுத்து வந்துவிட முடியும். குற்றங்களை ஆவணப்படுத்துபவர், கொலை, கொலைக்கான காரண காரியங்கள் ஆகியவற்றை வைத்து விசாரணைக்கு உதவும்படியான விஷயங்களை தொகுத்து வைத்திருப்பவர் என்று கூறலாம்.அவர் சொன்ன தகவல்களை வைத்துக்கொண்டே உடனே குற்றவாளியின் வீடு தேடி போலீஸ் பேட்ரோல் காரை அனுப்பி வைக்க முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

குற்ற ஆவணப்படுத்தல் வல்லுநருக்கும் காவல்துறையினருக்குமான வேறுபாடு

இன்ஸ்பெக்டர், குற்றங்களை ஆவணப்படுத்தி வைப்பதில் வல்லுநராக இருக்கலாம். அது நல்லதுதான். ஆனால் அனைத்து இன்ஸ்பெக்டர்களும் இதுபோலவே திறமை கொண்டவர்களாக இருப்பதில்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். கொலை, கொலைக்கான காரணம், பாதிக்கப்பட்டவர்கள், கொலை நடந்த முறை, கொலை செய்தவரின் மனம் என பல விஷயங்களையும் பல கோணங்களில் ஆராயும் ஒருவர்தான் குற்றத்தை கண்டுபிடிக்க முடியும். 

குற்றங்களை ஆவணப்படுத்துபவர் என்பவர் விசாரணைக்குழுவில் தற்காலிகமான நபர்தான். இவர் கொலை விசாரணையின்போது இன்ஸ்பெக்டருக்கு, பல்வேறு விஷயங்களை கவனிக்கவேண்டும் என அறிவுறுத்துவார். இதனை ஒருவர் பயிற்சி செய்தாலே குற்றங்களை அதன் பின்னணியோடு புரிந்துகொள்ள முடியும். 

பாட் ப்ரௌன்







கருத்துகள்